Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் மண்ணாடிமங்கலத்தில் ... ஹர ஹர சங்கரா... சிவ சிவ சங்கரா...: பக்திக் கடலில் நீந்தியது மீனாட்சி தேர்: பக்தர்கள் பரவசம்! ஹர ஹர சங்கரா... சிவ சிவ சங்கரா...: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2015
10:05

சிதம்பரம்: சிதம்பரம், நடராஜர் கோவில் மகா கும்பாபிஷேகம், (1.5.2015) அன்று நடந்தது. திரளான பக்தர்கள், தில்லைக் கூத்தனே; பொன்னம்பலத்தானே என, விண்ணை முட்டும் வகையில், பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

Default Image
Next News

யாகசாலை பூஜைகள்: சிதம்பரம், நடராஜர் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில், ஆகாய ஸ்தலமாக உள்ளது. இங்கு, 27 ஆண்டுகளுக்குப்பின், 40 கோடி ரூபாய் செலவில், திருப்பணி நடந்தது. பணிகள் முடிந்து, கடந்த மாதம், 25ம் தேதி, யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, 30ம் தேதி வரை, 12 கால யாகசாலை பூஜைகள் நடந்தன. 1.5.2015 அன்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, தேவசபையில் நடராஜருக்கு பழைய பொன் ஆபரணங்களை அணிவித்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின், சிவகாமி அம்மன் உடனுறை நடராஜப் பெருமான், தேவசபையில் இருந்து, சித்சபைக்கு எழுந்தருளினார். 1.5.2015 அதிகாலை, 4:00 மணிக்கு, யாக சாலையில், தம்பதி பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை உள்ளிட்ட, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின், மேள தாளங்களுடன் கோபுரங்களுக்கு கடம் புறப்பாடானது. நேற்று காலை, 8:00 மணிக்கு, சித்சபை, கனகசபை, நான்கு ராஜகோபுரங்கள் உட்பட, ஏழு இடங்களிலும், ஒரே நேரத்தில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. குருமூர்த்தி தீட்சிதர் தலைமையில், தீட்சிதர்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றினர்.

தீபாராதனை: இதைத் தொடர்ந்து, கலசங்களுக்கு வஸ்திரம், பூமாலை அணிவித்து, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அரோஹரா கோஷம் எழுப்பினர். தில்லைக் கூத்தனே; பொன்னம்பலத்தானே என்ற பக்தி கோஷம், விண்ணை முட்டியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர் கோவில் தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
கோவை; சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு சிறப்பு ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar