பதிவு செய்த நாள்
04
மே
2015
11:05
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி கோவில்களில் சித்ரா பவுர்ணமியொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. சித்ரா பவுர்ணமியையொட்டி, கள்ளக்குறிச்சி ஏமப்பேர் காசி விசாலாட்சி உடனுரை விஸ்வநாதேஸ்வரர் கோவிலில், பஞ்ச மூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது. சிவனுக்கு பழவகைகளால் அலங்காரம் செய்து, உலக நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்ப÷ ரஸ்வரர், புண்டரீக வள்ளி தாயார் சதே தில்லை கோவிந்தராஜ பெருமாள், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, முத்துமாரியம்மன், காமாட்சி அம்மன், க ங்கையம்மன், சக்தி விநாயகர், பத்ரகாளியம்மன், அங்காளம்மன், சோமண்டார்குடி லோகாம்பாள் சோமநாதீஸ்வரர், முடியனுõர் அபிதகுஜாம்பாள் அருணாசலேஸ்வரர், விருகாவூர் சிவசக்தி அம்மன், வரஞ்சரம் பாலகுஜாம்பிகை பசுபதீஸ்வரர் ஆகிய கோவில்களில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.