விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வி.கொத்தமங்கலம் ரேணுகா பரமேஸ்வரி முத்தாலம்மன் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழா நடந்தது. கடந்த மாதம் 24ம் தேதி விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகளும், இரவு சுவாமி வீதி உலாவும் நடந்தது. 30ம் தேதி இரவு 8:00 மணிக்கு காத்தவராயனுக்கு கழுமரம் நடுதல், கோனூரில் இருந்து அம்மனுக்கு கண்ணாசாரி சீர்வரிசை எடுத்து வருதல், தொடர்ந்து பூங்கரகத்துடன் அம்மன் வீதியுலா நடந்தது. 1ம் தேதி காலை 9:00 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. 12:00 மணிக்கு மயானக்கொள்ளையும், பகல் 1:30 மணிக்கு காத்தவராயனுக்கு கழுமரம் ஏறுதல், மாலை 3:00 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், மாலை 4:30 மணிக்கு முருகனுக்கு காவடி பூஜையும், அம்மனுக்கு செடல் உற்சவுமும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.