Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூஜையறையில் சுவாமிக்கு தனித்தனியாக ... நாயகத்தின் பெருந்தன்மை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடவுள் பார்த்துக் கொள்வார்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2015
02:05

வட அமெரிக்காவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் இடையிலுள்ள கரீபியன் தீவுகளில் ஒன்று ஜமைக்கா. 1970ல் மார்ஜீனா என்ற போதைச் செடியை பயிரிட்ட தாக இங்கிருந்த விவசாயிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் பெண்களும் அடங்குவர். சிறைக் காவலர்கள் கைதிகளிடம் கடுமையாக நடந்தனர். பெண்களைப் பாடச் சொல்லி வற்புறுத்தினர். அவர்கள் பைபிளிலுள்ள சங்கீதம் 137, சங்கீதம் 19:14வசனங்களைபாடலாகப் பாடினர். உலகில் அதிகம் விற்று சாதனை படைத்த போனியம் என்னும் ஆல்பத்தில் உள்ள பை த ரிவர் ஸ்ஆப் பாபிலோன்என்ற பாடல் தான்அது. பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்வார், கி.மு. 586ல் ஜெருசலேம் நகரை முற்றுகையிட்டான். அங்கிருந்த யூதர்களில் சிலர் மட்டும் தப்பித்து, ஏதாமியரின் நாட்டுக்குச் சென்றனர். ஏனென்றால் யூதர்களும், ஏதாமியர்களும் சகோதரர்கள். ஈசாக்கின் மூத்த மகனான ஏசாயின் பிள்ளைகளே ஏதாமியர்கள். ஈசாக்கின் இரண்டாவது மகனான யாக்கோபின் பிள்ளைகளே யூதர்கள்.ஆனால், தஞ்சம் புகுந்தயூதர்களை ஏதாமியர்கள் நேபு காத்நேச்வாரிடம் காட்டிக் கொடுத்தனர். ஆண்களையும், பெண்களையும் கொடூரமாகக் கொன்றனர். குழந்தைகளின் கால்களைப் பிடித்து பாறைகளில் மோதச் செய்து மகிழ்ந்தனர். எதிரியான நேபுகாத்நேச்வாராலும், துரோகிகளான ஏதாமியர்களாலும் துன்பப்பட்ட யூதர்கள் கடவுளிடம் வேண்டிய ஜெபத்தின்ஒரு பகுதி தான்சங்கீதம் 137. எதிரிகளையும், துரோகிகளையும் நம்மால் என்ன செய்ய முடியும் என திகைக்கிறீர்களா? அவர்களின் துரோகத்தால் துன்பப்படுகிறீர்களா? கவலைப்படாதீர்கள். என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே! என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமூகத்தில் பிரீதியாயிருப்பதாக என்ற சங்கீதம் 19;14 வசனத்தை வாசித்து, அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுங்கள். அதாவது, ஆண்டவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து அவரையே சரணடைந்து விடுங்கள். கடவுள் அந்ததுரோகிகளைக் கவனித்துக் கொள்வார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அவசியம் தான். முச்சந்தியில் எடுத்த காலடி மண், வற்றல் மிளகாயால் தலையை மூன்று முறை சுற்றி விட்டு ... மேலும்
 
மணநாளன்று தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நல்ல நாளில் செல்லுங்கள்.   ‘அவனுக்கு என்ன... கொடுத்து ... மேலும்
 
மூலவரின் நிழல் கீழே விழாமல் தடுக்க தீபமேற்றுவர். ஏனெனில் சுவாமியின் நிழலை மிதிக்க கூடாது.      ... மேலும்
 
அறியாமை, ஆணவத்தை கைவிட்டு நல்ல குணத்தை பின்பற்ற வேண்டும் என்பதுதான்.  அம்மன் ஒரு காலை மடக்கியபடி ... மேலும்
 

உஷ்... ரகசியம் அக்டோபர் 12,2026

* செய்த தர்மத்தை வெளியில் சொல்லாதீர்கள். அது ரகசியம்.  * தேனாக இருந்தாலும் அதிகம் சாப்பிட்டால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar