பதிவு செய்த நாள்
07
மே
2015
12:05
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி அடுத்த சின்னமட்டாரப்பள்ளி, வீரபத்திர ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னமட்டாரப்பள்ளி, வீரபத்திர ஸ்வாமி கோவிலில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் கங்கை நீர் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.மேலும், யாகசாலை பூஜை, மஹா கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, சரஸ்வதி பூஜைகள், மஹா தீபராதனைகள் நடந்தது. தொடர்ந்து தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து பூ கரக ஊர்வலங்கள் நடந்தன. நேற்று கணபதி ஹோமங்களும், கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.