காஞ்சி காமாட்சியை மகரிஷிகள் பூனை வடிவில் வழிபடுவதாக ஐதிகம். எனவே தினசரி அர்த்த ஜாம பூஜை முடிந்த உடன் அம்மனுக்கு நிவேதித்த பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைப்பார்கள். அங்கு வரும் பூனை ஒன்று அந்தப் பாலை குடித்துச் செல்லும். இப்போதும் கூட இந்த நடைமுறை இக்கோயிலில் மேற்கொள்ளப்படுகிறது. பூனை வடிவில் அம்பிகையை தரிசிக்க வரும் ரிஷிகளே இந்த பிரசாதத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.