பாலமேடு: பாலமேடு சாத்தையாறு அணை அருகே கல்லுமலைக்கந்தன் ராமலிங்கசுவாமி கோயில் விழா நடந்தது. இங்கு உப்பு, பொரி காணிக்கையாக செலுத்தினால் உடல் அரிப்பு, பருக்கள் நீங்கும் என்றும் மக்கள் நம்புகின்றனர். ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராமத்தினர் செய்திருந்தனர். பக்தர்களின் காணிக்கை ஏலம் விடப்பட்டு கோயில் வளர்ச்சிக்காக பயன் படுத்தப்படுகிறது.