தியாகதுருகம்: பல்லகச்சேரி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில் நுõற்றாண்டு பழமையான செல்லியம்மன் கோவில் உள்ளது. பக்தர்கள் முயற்சியால் நிதி சேகரித்து 1 கோடி ரூபாய் திட்டமதிப்பில், கோவில் புனரமைப்பு பணிகள் கடந்த ஆண்டு துவங்கியது. கருவறைக்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டு கலைநயத்துடன் கோபுர விமானம் வடிக்க ப்பட்டது. கோவில் முன்புறம் குளம் தூர்வாரி கான்கிரீட் சுற்றுசுவர் அமைக்கப்பட்டது. திருப்பணி வேலைகள் முடிந்து நேற்று காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. அதைத்தொடர்ந்து யாகசாலை பூஜைகளை எலவனாசூர்கோட்டை வெங்கட்ராம்ஜி தலைமையில் ராமநாத சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வருகின்றனர். நாளை காலை 9:00 மணிக்கு கோவில் கும்பாபிஷகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ராஜன்பாபு செட்டியார் தலைமையில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.