நாகர்கோவில் : திருக்கோயில்களின் பாதுகாப்பு கருதியும், விழாக்காலங்களில் திருட்டு போன்ற சம்பவங்களை தடுப்பதற்காகவும் கோயில்களின் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் பழங்கால சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்களில் ஏற்கெனவே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தற்போது வேளிமலை குமாரகோயில், நாகர்கோவில் நாகராஜாகோயில் ஆகிய இரண்டு கோயில்களில் பத்து லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் ஓரிரு நாளில் நிறைவு பெறும். அடுத்த கட்டமாக திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலிலும் கேமராக்கம் பொருத்தப்படும் என்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.