தில்லைக்காளியம்மன் கோவிலில் தெருவடைச்சான் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2015 10:05
சிதம்பரம்: சிதம்பரம், தில்லைக்காளியம்மன் கோவில் வைகாசிப் பெருவிழாவில் நேற்று முன்தினம் நடந்த தெருவடைச்சான் உற்சவத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் வைகாசிப் பெருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான தெருவடைச்சான் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதனையொட்டி தில்லைக் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்ன வாகனத்தில் புறப்பாடு செய்து தெருவடைச்சானில் எழுந்தருளி, நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 16ம் தேதி தேரோட்டமும், 17ம் தேதி சிவப்பிரியை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும், 19ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் கட்டளைத்தாரர்கள் செய்கின்றனர்.