வள்ளி தெய்வானை சகிதமாக மயில் மீது முருகப் பெருமான் காட்சி அளிக்கும் போது, பொதுவாக மயிலின் கழுத்து வலதுபுறம் வள்ளியை நோக்கி திரும்பியவாறு காட்சி அளிக்கும் தலங்களே அதிகம். ஆனால், வயலூர் முருகன் கோயிலில் உள்ள மயிலின் கழுத்து தெய்வானையை நோக்கியவாறு இருக்கும்.