உலகத்திற்குத் தாயான பராசக்தி சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் கொங்கு நாட்டில் குன்னி மரத்தடியில் சிறப்பு வாய்ந்த சக்தியாக புற்றுக்கண் நாகாத்தம்மன் என்ற திருநாமத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து அருள்பாலிக்கிறாள். மேற்படி திருக்கோயிலில் சந்திர பகவானும், நாகர் தெய்வங்களும் உடன் எழுந்தருளியுள்ளது சிறப்பு. இந்த கோயிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் (காலை 10.30 மணிமுதல் 12.00 மணி வரை ) சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது பிரதி மாதம் பவுர்ணமி தினத்தன்று மாலை நாகஸ்தலங்களில் செய்யப்படும் பரிகார பூஜையும் பவுர்ணமி பூஜையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கால சர்ப்பதோஷம், திருமணத் தடை, புத்திர தடை, மாங்கல்யத்தடை தொழில் தடை, கல்வித் தடை, சர்ப்ப சாபம் முதலியன நீங்கி வாழ்வில் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ அன்னை அருள்மிகு புற்றுக்கண் நாகாத்தம்மனை தரிசித்து பேரானந்தமடைவோம். ஈரோடு கரூர் நெடுஞ்சாலையில், சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில், கணபதிபாளையம் நான்கரோடு-பச்சாம்பாளையம் பாசூர் ரோடு வழியில் கணம்பில்புதூரில் புற்றுக்கண் நாகாத்தமன் கோயில் அமைந்துள்ளது.