கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கெங்கையம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி பால்குட அபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி எதிரே உள்ள கெங்கையம்மன் கோவிலில் மழை, குடும்ப நலன் மற்றும் உலக நலன் வேண்டி நேற்று பால் அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை 8 மணியளவில் கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து கெங்காபூஜைகள் செய்யப்பட்டு, பால்குடம் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பெண் கள் பால்குடம் சுமந்து, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து கெங்கையம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் அபி ஷேகம் செய்தனர். பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தது.