பதிவு செய்த நாள்
16
மே
2015
11:05
துறையூர்: துறையூர் அருகே கொப்பம்பட்டியில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம், 15 ஆண்டுக்குப் பின் கோலாகலமாக, நேற்று நடந்தது. கொப்பம்பட்டி கிராம காவல் தெய்வமான செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா விமரிசையாக நடத்துவது வழக்கம். 15 நாள் நடக்கும் திருவிழா, 15 ஆண்டுக்குப் பின் இவ்வாண்டு, கடந்த 1ம் தேதி காப்பு கட்டுடன் துவங்கியது.தொடர்ந்து, 2ம் தேதி இரவு மறுகாப்பு கட்டி குதிரை வாகனத்திலும், தொடர்ந்து ரிஷப, சிம்ம, பறக்கும் குதிரை, வேடுபரி வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு நடந்தது. 7ம் தேதியன்று இரவு சிம்ம வாகனத்திலும், 8 ம் தேதி அன்னபட்சி வாகனத்திலும், 9 ம் தேதி குதிரை வாகனத்திலும், 10ம் தேதி பூத வாகனத்திலும், 11ம் தேதி பூந்தேரிலும் ஸ்வாமி புறப்பாடு நடந்தது.கடந்த 13 ம் தேதி சின்ன தேர் வடம் பிடித்தலும், மாவிளக்கு பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை கிடாவெட்டு, பொங்கல் பூஜை நடந்தது. இரவு வெட்டு குதிரையில் ஸ்வாமி புறப்பாடு நடந்தது. நேற்று அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அம்மன் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருளினார். விழாவில் ஊர் பிரமுகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மதியம் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறும்.