பதிவு செய்த நாள்
19
மே
2015
11:05
தங்கவயல்,: ஸ்ரீதேவி பாட்டை கங்கை அம்மன் கோவிலில், 66ம் ஆண்டு திருவிழா, பக்தி பரவசத்துடன் நடந்தது.தங்கவயல்- பங்காருபேட்டை ரோடு, என்றீஸ் வட்டாரத்தில் தேவி பாட்டை கங்கை அம்மன் கோவில் உள்ளது. 66ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, காலை பாலாபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.மதியம், கோவில் நிர்வாகிகள், வட்டார பிரமுகர்கள் முன்னிலையில், கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு கும்பம் படைக்கப்பட்டது. இரவில், தாரை தப்பட்டை, பம்பை வாத்தியங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன் பவனி வந்தார்.