பதிவு செய்த நாள்
19
மே
2015
11:05
குன்னுார் : குன்னுார் சவுடேஸ்வரியம்மன் கோவிலில், நேற்று 108 சங்காபிஷேக யாக பூஜை நடந்தது. குன்னுார் மவுண்ட்ரோடு பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவிலில், அபிஷேகம், கொடியேற்றத்துடன், 22வது ஆண்டு துவக்க விழா, 108 சங்காபிஷேக யாக பெருவிழா, தேவாங்க சங்க பொன்விழா, திருக்கல்யாண உற்சவ விழா, நேற்று முன்தினம் நடந்தது.நேற்று மிருத்யுஞ்சய ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், 108 சங்கு பூஜை, சவுடேஸ்வரி பூஜை ஆகியவை நடந்தன. இன்று, கத்தி போடும் நிகழ்ச்சி, அம்மன் உலா நடக்கிறது. வரும் 22ம் தேதி திருக்கல்யாண உற்சவம், அம்மன் ஊர்வலம், ஊஞ்சல் உற்சவம், மஞ்சள் நீராடல் ஆகியவற்றுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, சவுடேஸ்வரி அம்மன் நற்பணி மன்றத்தினர், மகளிர் மன்றத்தினர், தேவாங்கர் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.