பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் பிரத்தியங்கராதேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு வற்றல் மிளகாய் கொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. யாகத்தையொட்டி மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இரவு 8:30 மணியளவில் உலக நன்மை பெற வேண்டி யாகத்தில் வற்றல் மிளகாய் கொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.