பதிவு செய்த நாள்
20
மே
2015
12:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரதவீதியில், தேங்கி நிற்கும் கழிவு நீர் துர்நாற்றம் வீசியதால், பக்தர்கள் அவதிப்பட்டனர். ராமேஸ்வரம் கோயில் 1, 2ம் பிரகாரத்தில் மழை நீர் தேங்குவதை தடுக்க, தெற்கு ரதவீதியில் செல்லும் வாறுகாலில், தனியார் லாட்ஜ்கள் இணைத்திருந்த கழிவு நீர் குழாய்களை அகற்றி, கோயில் ஊழியர்கள் வாறுகாலை சரி செய்தனர். இதனால், வடக்கு ரத வீதியில் உள்ள தனியார் லாட்ஜ், வீடுகளில் வெளியேறும் கழிவு நீர், கடந்த 3 நாள்களாக, கோயில் ரதவீதியில் தேங்கியதால், துர்நாற்றம் வீசுகிறது. இதை கடந்து, பக்தர்கள் வெருப்புடன் கோயிலுக்கு சென்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரண்டு தினங்களில் ரதவீதியில் தேங்கிய கழிவு நீர் அகற்றப்படும். தனியார் லாட்ஜ், கோயில் தங்கும் விடுதியில் வெளியேறும் கழிவு நீரை "செப்டிக் டாங்க்கில் சேகரிக்கும்படி, லாட்ஜ் உரிமையாளர்கள், கோயில் அதிகாரியிடம் அறிவுறுத்தி உள்ளோம். மீறினால் சம்பந்தபட்டவர்கள் மீது அபராதம் விதித்து, கோர்ட் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.