சிதம்பரம் : சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள ஆத்மநாதர் கோவிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை விழா இன்று நடக்கிறது. சிதம்பரம் வேங்கான் தெருவில் யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் கோவில் உள்ளது. இங்கு மாணிக்கவாசகர் திருவாசகம் சொல்ல நடராஜர் எழுதியதாக புராணம் உண்டு. அந்த இடத்தில் ஆண்டுதோறும் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு குருபூஜை விழா இன்று (5ம் தேதி) நடக்கிறது. காலை 7 மணிக்கு சிவபூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து 7.30 மணிக்கு ஹோமம், 8 மணிக்கு திருவாசகம் முற்றோதல், 11 மணிக்கு அபிஷேக ஆராதனையும் 12 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. ஒரு மணிக்கு வடக்கு நடராஜ கிருபா மண்டபத்தில் மாகேசுவர பூஜை நடக்கிறது. குருநமச்சிவாயர் சுவாமிகள் மட டிரஸ்டி பசவராஜ், கவுரவ ஆலோசகர் சங்கர நடராஜ தீட்சிதர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.