பதிவு செய்த நாள்
22
மே
2015
05:05
சென்னிமலை கோயிலில் 20 தீர்த்தங்கள் உள்ளன. இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இமயன் தீர்த்தம், காசிபதீர்த்தம், பட்சி தீர்த்தம், நிருதிதீர்த்தம், சிவகங்கை காசிக்கிணறு, மாமங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர், வாலி விஷ்ணு தீர்த்தம், நெடுமால் சுனை, பிரம்ம தீர்த்தம், தேவர்பாழி, நவவீர தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், தெப்பக்குளம் ஆகியவை அதன் பெயர்கள்.இத்தனை தீர்த்தங்கள்இருந்தாலும், சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு, மலை அடிவாரத்தில் இருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது. தீர்த்தம் எடுத்துச் செல்வதற்காகவே, இக்கோயிலில், இரண்டு அழகிய பொதிகாளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு.