வாலகுருநாதசுவாமி கோயிலில் வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்ட வீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2015 03:05
காரியாபட்டி: காரியாபட்டி மாந்தோப்பில் வைகாசி 8 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி வாலகுருநாதசுவாமி கோயிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெள்ளிகளை, அக்கோயிலில் உள்ள ரிஷப வாகனத்திற்கு தகடு செய்து பொறுத்தும் பணி முடிவடைந்தது. வரும் 24ந் தேதி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வீதி உலா வரும் நிகழ்ச்சிக்காக நேற்று ரிஷபவாகனம் வெள்ளோட்ட வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை ஆண்டாள்புரம் சாய் பாபா கோயில் காரியதரிசி டாக்டர் பிரபு, தலைவர் ஜீனத் சாய், பொறுப்பாளர் சுரேஷ், பிரபாகரன், சுப்பாநாகுலு, ஊராட்சி தலைவர் சரவணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவி ஆண்டாள் கோயிலுக்கு அடுத்து ரிஷப வாகனம் இங்கு அமைந்துள்ளது தனி சிறப்பு.