திண்டிவனம்: திண்டிவனம் ஏரிக்கரை புத்துமாரியம்மன் கோவிலில், 17ம் ஆண்டு சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அதிகாலையில் மகா அபிஷேகம் மற்றும் சந்தனகாப்பு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். காலை10:00 மணிக்கு, பூங்கரகம் மற்றும் பெண்கள் கூழ்பானைகளுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். மாலை 6:00 மணிக்கு, திண்டிவனம் வெங்கடேசன், தண்டபாணி ஆகியோர் தலைமையில் 30 தவில் மற்றும் 30 நாதஸ்வர கலைஞர்களின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:00 மணிக்கு, கும்பம் படையலிட்டு தீபாராதனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு, உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, முன்னாள் வடம்பூண்டி ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.