சேர்வராயன் குகை கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2015 12:05
ஏற்காடு: ஏற்காடு, மஞ்சக்குட்டை கிராத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சேர்வராயன் குகை கோவிலின் திருவிழா நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை ஏற்காடு சேர்மன் அண்ணாதுரை, துணை சேர்மன் சுரேஷ் குமார், ஏற்காடு பி.டி.ஓ., ஜெயராமன், மஞ்சக்குட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி ஆகியோர் துவக்கி வைத்தனர். கோவில் தேரோட்டம், ஜூன், 2ம் தேதி நடக்கிறது. கோவிலின் தேரோட்டத்திற்கு ஏற்காட்டின் அனைத்து கிராமங்கள் மட்டுமின்றி, சேலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவர். இதனால் சேலத்தில் இருந்து பல சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.