பத்ரகாளியம்மன் கோயில் மகிஷ சம்ஹார நினைவுப்பெருவிழா !
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2015 11:05
காரைக்கால்: அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் மகிஷ சம்ஹார நினைவுப்பெருவிழா நடந்தது. காரைக்கால் அம்பகரத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில்,ஆண்டுதோறு பத்ரகாளியம்மனுக்கு மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா கடந்த 5ம்தேதி அம்மனுக்கு பூர்வாங்க அபிஷேக ஆராதனைகள் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை ஒட்டி தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக கடந்த நேற்று முன்தினம் பத்ரகாளியம்மன் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடந்தது. அதைத்தொடர்ந்து, இரவு மகிஷ சம்ஹார நினைவு பெருவிழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நேற்று இரவு எல்லை ஓடுதல், இன்று இரவு அம்மன் திருத்தேர் வீதியுலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் ஜூன் 2ம்தேதி உதிரவாய் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் கோயில்கள் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.