காவல்துறையை காக்கும் முனீஸ்வரனுக்கு கெடா வெட்டி விருந்து வைத்த போலீசார்.!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2015 11:05
மயிலாடுதுறை: மனிதர்கள் வாழ்க்கையில் எந்தபிரச்னைகளும் இன்றி நிம்மதியாக வழவேண்டும் என்று அவரவர்கள் இஷ்டப்படும் தெய்வங்களை வழிபடுவதும், வேண்டுதல்கள் நிறைவேறினால் நேர்த்தி கடன் செய்வ தும் தமிழர்களின் மரபாக இருந்து வருகிறது.மக்களை பாதுகாக்கும் பணியில் இருக்கக்கூடிய காவல்து றையினர் கூட கடவுளுக்கு கெடாவெட்டி பூஜை போட்டு ஊர் முக்கியஸ்தர்களுக்கு கறி விருந்து வைப் பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது நாகை மாவட்டத்தில். நாகை மாவட்டம் பொறையாரில் போலீஸ் ஸ்டேஷனில் அருகில் இருக்கும் முனீஸ்வரன்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விழா கொண்டாடப்பட்டுவருகிறது. போலீஸ் ஸ்டேஷனில் அருகில் இருப் பதால் பணிக்கு வரும் போலீசார் வழிபட்டு வந்ததால் அந்தகோயிலில் உள்ள சுவாமி போலீஸ் முனீஸ் வரன் கோயில் என்று பொதுமக்கள் அழைக்கத் தொடங்கினர். இந்த கோயிலில் வைகாசி விழாவில் ஒ ரு நாள் போலீசார் முனீஸ்வரனுக்கு சிறப்பு யாகம் நடத்தி அபிஷேக,ஆராதனைகள் செய்து கெடாவெ ட்டி வழிபாடு செய்வது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டு நேற்று போலீஸ் முனீஸ்வரனுக்கு போலீ சார் மற்றும் பொது மக்கள் நேர்ந்து விட்ட 11கெடாவை வெட்டி கறிசாப்பாடு கோழிவருவல்,இனிப்பு, பச்சடி என்று அருசுவை உணவுடன் கறி விருந்து போலீசார் மற்றும் பொறையார் பகுதி பெரும் விஐபி க்கள் மற்றும் பொதுமக்களுக்கு விருந்துவைக்கப்பட்டது.இதில் சீர்காழி டி.எஸ்.பி.வெங்கடேசன், இ ன்ஸ்பெக்டர்கள் மணிமாறன்,சிங்காரவேலு மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பா டுகளை எஸ்ஐ. ராஜசேகர், எஸ்பி., தனிப்பிரிவு ஏட்டு பழனி ஆகியோர் செய்திருந்தனர்.