பதிவு செய்த நாள்
30
மே
2015
12:05
உத்திரமேரூர்: களியப்பேட்டை கிராமத்தில், பராமரிப்பின்றி சீரழிந்து வரும், காலகண்டேஸ்வரர் கோவிலை புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியப்பேட்டை கிராமத்தில், இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கனகவல்லி தாயார் சமேத கால
கண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒரு கால பூஜை நடந்து வருகிறது.
பராமரிப்பு இல்லை கடந்த 2000ல் திருப்பணிகள் நடந்து, 2001ம் ஆண்டில் கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. அதன் பின், பராமரிப்பு பணிகள் சரி, வர மேற்கொள்ளாததால், தற்போது, கோவில் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்துள்ளன.
கட்டட தளத்தின் மேல் பகுதி பழுதடைந்துஉள்ளதால், மழைக்காலங்களில் கோவிலுக்குள் நீர் சொட்டுகிறது. அச்சமயம் கோவிலுக்குள் தண்ணீர் தேங்கி, பக்தர்களை அதிருப்தியடைய செய்கிறது. கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் அப்பகுதியை சேர்ந்த சிலர், கோவில் வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. நடவடிக்கை வருமா? எனவே, இக்கோவிலின் புனிதத்தை காக்கவும்; கோவிலை பாதுகாக்கவும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, கோவில் வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் ஏற்படுத்திட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.