பதிவு செய்த நாள்
01
ஜூன்
2015
10:06
விருத்தாசலம்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு பூஜை துவங்கியது. விருத்தாசலம், மணவாளநல்லூர் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் வைகாசி விசாக பூஜை, கடந்த 23ம் தேதி துவங்கி, இன்றுடன் (1ம் தேதி) முடிகிறது. தினசரி காலை சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை சுவாமி வீதியுலா நடக்கிறது. நேற்று காலை கொளஞ்சியப்பர், சித்தி விநாயகர் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இன்று விசாகத்தை முன்னிட்டு, காலை சுவாமிளுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.