ஒரு நாட்டின் கவுரவச்சின்னம் கொடி. அதில் ஒரு சின்னத்தை பொறித்து வைப்பார்கள். முருகன் சூரபத்மனை ஜெயித்ததும் அவனை இருகூறாகப்பிரித்து மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். மயிலை வாகனமாகவும், சேவலை கொடியின் சின்னமாகவும் மாற்றி விட்டார். கொடியில் சேவலை சின்னமாக்க ஒரு காரணம் உண்டு. சேவல் ஒளியையும், சுறுசுறுப்பையும் விரும்பும். இருளானால் தன் பணியை முடித்து கூட்டுக்குள் அடங்கி விடும். அதிகாலை வெளிச்சத்தை வரவேற்கும் உலகின் முதல் ஜீவன் இதுவே. அது கொக்கரக்கோ என கூவுவது ஓம் என்ற நாதத்திற்கு ஈடானது. ஓம் என்பதன் பொருள் எல்லாம் நானே என்பதாகும். முருகப்பெருமானே உலகம் அனைத்திற்கும் முதல்வர் என்ற ரீதியில் இந்த மந்திரம் உருவாக்கப்பட்டது.