பதிவு செய்த நாள்
02
ஜூன்
2015
02:06
ஆதாமும் ஏவாளும் கடவுளின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஒரு தோட்டத்தில் வாழ்ந்து வந்தனர். ஒரே ஒரு மரத்தின் கனியைத்தவிர மற்றவற்றை சாப்பிடலாம் என கடவுள் அவர்களிடம் சொல்லியிருந்தார். அப்போது சாத்தான் பாம்பு வடிவில் அங்கு வந்தான். நீங்கள் ஆண்டவரின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதில்லை. அவர் இந்த மரத்தின் கனியை புசிக்க கூடாது என்று சொல்லியிருப்பதில் இருந்தே, அதில் ஏதோ ஒரு விசேஷம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லையா? அதை சாப்பிட்டால் தான் அதன் அருமை தெரியும், என துர்போதனை செய்தான்.சாத்தான் அவ்வாறு சொன்னது அவர்களுக்கு இனித்தது. ஆண்டவரின் கட்டளையை மீறி அவர்கள் அந்த மரத்தின் கனியை புசித்து நிர்வாணம் அடைந்தனர். ஒருவரை ஒருவர் பார்க்க வெட்கப்பட்டனர். ஆண்டவரும் அவர்களை சபித்தார்.நமது மனத்திலும் சாத்தான் குடிபுகுந்து இவ்வாறே பல துர்போதனைகளை செய்கிறான். அதன் விளைவாக நாம் செய்யக்கூடாத பல தவறுகளை செய்கிறோம். இந்த சாத்தானுக்கு வேறு சில பெயர்களும் உண்டு. அவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்.1. அசுத்த ஆவி, 2. அப்பொல்லியோன், 3. ஆதி முதல் பாவம் செய்கிறவன், 4. கோணலான சர்ப்பம் (நீண்ட பாம்பு), 5. குற்றம் சாட்டுகிறவன், 6. சத்ரு (எதிரி), 7. சிதறடிக்கிறவன், 8. சோதனைக்காரன், 9. தந்திரமுள்ளவன், 10.துஷ்டன், 11. துõஷிக்கிறவன், 12. பிசாசு, 13. பெயெல்செபூல், 14. பொல்லாங்கன், 15. பேய், 16. பொல்லாத ஆவி, 17. பொய்க்குப் பிதா, 18. மனுஷ கொலை பாதகன், 19. மோசம் போகச் செய்பவன், 20. விரோதி.