பதிவு செய்த நாள்
05
ஜூன்
2015
12:06
பாகூர்: மதிகிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.பாகூர் அடுத்த மதிகிருஷ்ணாபுரத்தில் பட்டாபிராமர் கோவில் 33 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பித்து கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.இதனையொட்டி, கடந்த 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் நடந்தது. 3ம் தேதி காலை 7:00 மணிக்கு அக்னி ஆராதனம், முதற்காலயாக பூஜை, மாலை 4:00 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜைகள் நடந்தது.நேற்று 4ம் தேதி காலை 8:00 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை, பிரதிஷ்டை ஹோமம், யாத்ர தானம், காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.காலை 10:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் அபிேஷகம் செய்து, மகா கும்பாபிேஷகம் நடந்தது.முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் தியாகராஜன், ராஜவேலு, ராதாகிருஷ்ணன் எம்.பி., அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் உட்பட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு நிர்வாகிகள் சிவப்பிரகாசம், சிவக்குமார், மோகனசுந்தரம், சேது, முருகன், திருப்பணி குழுவினர் தியாகராஜன், பூபாலன், ஞானபிரகாசம், பாலகிருஷ்ணன், பாலசுப்ரமணி, அருள், மணிகண்டன், ஏழுமலை ஆகியோர் செய்திருந்தனர்.