செஞ்சி:அனந்தபுரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.அனந்தபுரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன், விநாயகர், ராமர், சீதை, ஆஞ்சநேயர் கோவில்களின் ஜீர்னோத்தாரண மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 2ம் தேதி விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பிரவேசம், முதல் கால ஹோமம் நடந்தது.நேற்று காலை கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, யாகாசலை பூஜைகள் நடந்தன. 9 மணிக்கு கடம் புறப்பாடும், 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.