பதிவு செய்த நாள்
06
ஜூன்
2015
12:06
விழுப்புரம் காகுப்பம் ரேணுகாம்பாள் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழுப்புரம் காகுப்பம், திருக்குறிப்பு தொண்டர்நகர், சலவைத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ரேணுகாம்பாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதனை முன்னிட்டு, கடந்த 31ம் தேதி பந்தல்கால் நடுதல், அதனைதொடர்ந்து குருபூஜை, கரிக்கோலம், யாகைசாலை அமைத்தல், சக்தி கொடியேற்றுதல், கோமாதா பூஜைமற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தது.
அதனை தொடர்ந்து நேற்று காலை, மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமார், கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். நிர்வாகிகள் சண்முகம், பழனி, பிச்சமுத்துஉட்பட பலர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.