பதிவு செய்த நாள்
06
ஜூன்
2015
12:06
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த, கோடியக்காடு அவுலியாக்கனி தர்ஹாவில், சந்தனக்கூடு பெருவிழா விமர்சையாக நடந்தது.
கோடியக்காட்டில் ஐநூறு ஆண்டுகள் பழமையான, மகான் அவுலியாக்கனி தர்ஹா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனம் பூசும் நிகழ்ச்சி, மதநல்லிணக்க விழாவாக நடந்து வருகிறது
நடப்பாண்டு விழாவை முன்னிட்டு, கோடியக்கரை மூகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இருந்து, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, ஊர்வலமாக வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் புறப்பட்டு, கோடியக்காடு அவுலியக்கனி தர்ஹாவை அடைந்தது. அங்கு மகான் ரவ்லா ஷரிபுக்கு, சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது.
இவ்விழாவில், கோடியக்காடு, கோடியக்கரை, தோப்புத்துறை, கள்ளிமேடு மற்றும் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஜமாத் மன்றத்தினர் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகள் செய்திருந்தனர்