ஜம்மு - காஷ்மீர்:அமர்நாத் யாத்திரைக்காக, இதுவரை, 1.50 லட்சம் பக்தர்கள் பதிவு செய்துள்ளதாக, அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு செல்ல, ஆண்டுதோறும் ஏராளமானோர் முன்பதிவு செய்வது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான யாத்திரை, அடுத்த மாதம், 2ல் துவங்கி, 59 நாட்களுக்குப் பின் நிறைவடைகிறது. இதற்காக, இதுவரை, 1.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அமர்நாத் கோவிலின் அடிவாரத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்படும் பயணிகள், பலத்த பாதுகாப்புடன், மலை மேல் உள்ள சிவன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.