காரைக்காலில் மாங்கனி திருவிழா முன்னிட்டு நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2015 12:06
காரைக்கால்: காரைக்காலில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் அம்மையாரின் கணவனிடம் சிவபெருமான் மாங்கனி கொடுத்து அனுப்பி, அதை அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவதும், இதனால் காரைக்கால் அம்மையாரை பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வதும், அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கைகலால் நடந்து செல்வதையும் சித்தரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது.இந்தாண்டு வரும் 29ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 30ம் தேதி பரமதத்தர் செட்டியார் திருக்கல்யாணம், ஜூலை 1ம் தேதி மாங்கனி திருவிழா நடைபெறுகிறது.
இதையோட்டி நேற்று காலை 9.40 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இந்நிகழ்ச்சி கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி அசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.