Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வருண புராணம் வாயு புராணம் வாயு புராணம்
முதல் பக்கம் » அட்டதிக்குப் பாலகர்கள் புராணம்
குபேர புராணம்
எழுத்தின் அளவு:
குபேர புராணம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2015
05:06

குபேரன் பதுமகற்பத்தில் விசிரவசு முனிவருக்கும், இளிபிளை என்ற மாதுவுக்கும் பிறந்தவன். வராக கற்பத்தில் காம்பிலி நாட்டிலிருந்த வேள்வி தத்தனுக்குக் குணநிதி என்ற மகனாகத்தோன்றியவன். பாத்மகற்பத்தில் அதே விசிரவசு முனிவருக்கும், கேகசி என்ற மாதரசிக்கும் குமாரனாக அவதரித்தவன். கு+பேர்+அன் - குபேரன் என்று ஆயிற்று கு என்பது நமக்கு என்பதையும், பேர் என்பது நற்பேறுகளாகிய செல்வங்களையும், அன் என்பது அளிப்பவன் என்பதையும் குறிக்கும். அதாவது லக்ஷ்மி இடம் இருந்து, நற்பேறுகளாகிய செல்வங்களை, நமக்குப் பெற்றுக் கொடுப்பவன் குபேரன் என்று பெயர் பெற்றான்.

இவன் உடன் பிறந்தோரே இராவணன். கும்ப கர்ணன், விபூஷணன், சூர்பனகை முதலியோர். சிவன் அருளால் இலங்கை மற்றும் அளகை என்ற இரு பட்டிணங்களுக்கு அதிபனாக இருந்த இவன், தனது தந்தை விசிரவசு முனிவரின் வேண்டுகோள்படி, தனது தம்பி இராவணனுக்கு இலங்காபுரியை அளித்துவிட்டு அளகாபுரியை ஆண்டு வந்தான் என்பர். வால்மீகி இராமாயணமோ, குபேரனுடன் இராவணன் போரிட்டு, இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான் என்றும், பிறகு, தவம் செய்து சிவன் மூலம் குபேரன் அளகாபுரியை பெற்றான் என்றும் கூறும். குபேரனது தேவி சித்ரலேகை என்று வேதம் கூறும். ஆகமமோ பத்ரை என்று கூறும். வாகனமோ குதிரை என வேதமும், பல்லக்கு(நரன்) என ஆகமும் கூறும். இவனுக்கு நள கூபரன் மணிக்ரீவன் என்ற இரு புத்திரர்களும், முரா என்ற புத்திரியும் உண்டு. கதாயுதம் தரித்து, பொன்னிற மேனியுடன், வடக்குத் திசையைக் காப்பவர். உலகின் பொக்கிசதாரர் என்று சொல்லலாம். செல்வத்தின் அதிபதி. சிவபெருமானின் உற்ற தோழர். வணங்குவோர்க்கு ஐஸ்வர்யம் அருளுபவர்.

சிவராத்திரிக்குச் சிறப்புச் சேர்ப்பதற்காகக் கூறப்படும் கதைகளுள் இவனது வரலாறும் ஓன்று. அதாவது இவன், தனது தந்தை சேர்த்த பொருள் அனைத்தையும் சூதாடித் தோற்ற போது, அது கண்ட அவனது தந்தை வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறான். ஒரு ஊரில், சிவராத்திரியன்று பசியால் வாடி கோயில் சென்று சிவார்ச்சனையைத் தரிசித்து அர்ச்சகர்கள் துயின்ற பின்பு பிர சாதத்தைத்  திருடித்தின்ன விரும்பி விளக்கைத் தூண்டி விட்டு, நன்கு எரியச் செய்த பின்பு, பிரசாதத்தை எடுத்துத் திரும்புகையில், பட்டர் மேல் கால்பட்டு இடர, அவர் விழித்துத் திருடன் எனக் கூறிப் பிறரை எழுப்ப, அவர்கள் விழுந்து, எழுந்து, இவனைப் பிடித்து அடித்துக் கொன்றனர். அதுபோது, இவன் சிவதரிசனம் செய்ததாலும் விளக்கினைத் தூண்டியதாலும் சிவபுண்ணியம் செய்தான் எனக்கூறி சிவகணங்கள் அவனைக் கலிங்க நாட்டின் தமன் என நற்பிறப்புப் பிறக்கச் செய்தனர். தமன், சிவபெருமானை நோக்கித் தவம் செய்தான். சிவன் நேரில் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்க. தங்களைக் கணந்தோறும் காணும் நற்கண் வேண்டும் எனக் கேட்டான். அவரும் அருளினார். ஆனால், அப்போதும், அவன் சிவனை மட்டும் நோக்காது. அருகில் இருந்த அன்னை பார்வதியைப் பார்த்தான். அவளோ, கண்ணை மறைத்தனள், குருடன் ஆனான். மீண்டும் தவம் செய்தான். சிவன் நேரில் தோன்றி, அம்பிகையிம் இவன் தவறானநோக்கில் பார்க்கவில்லை. தரிசிக்கும் நோக்கிலேயே பார்த்தனன் என்று கூறிவிட்டு பொற்கண் அளித்தனன். அத்தோடு குபேர பதமும், வடதிசைக் காவலும், தனக்கு நண்பன் ஆக இருக்கும் தகுதியையும் அளித்தான்.

குபேரனது திருமேனிகள். தமிழகக் கோயில்களில், பெரும்பாலும் காண வழிபட கிடைப்பதில்லை. அபூர்வமாக, இரண்டொரு கோயில் வளாகங்களில் கிடைக்கின்றன. காஞ்சி-சுரகரேசம், மாங்காட்டு பெருமாள் கோயில்களில் வழிபாட்டில் உள்ளன. வடக்கே, நேபாளத்தில் இவன் பிரதான தெய்வமாக வழிபடப்பட்டுவரக் காணலாம். குபேரன் கரண்ட மகுடம் தரித்து, பெருத்த வயிற்றுடன் அர்த்த பத்மாசனத்தில் சிலம்பு அணிந்த மூன்று கால்களுடன் ஒரு கரத்தில் கதை தாங்கி கழுத்தில் ஆரம் அணிந்து, பொன்னிற மேனியனாய்க் காட்சி தருவான். இவனை வழிபட்டால் செல்வப் பேறு கிட்டும். ஆனால் இவனை மட்டும் வழிபட்டுப் பிரயோசனம் இல்லை. மகாலட்சுமி பூசை செய்த பின்பு இவனை வழிபடவேண்டும். அதற்கும் முன்பு மூதேவி (நேஷ்டை) வழிபாட்டினைச் செய்ய வேண்டும். மூன்று வழிபாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஜேஷ்டா விசர்சனம் மகாலட்சுமி வழிபாடு, குபேரர் பூசை என்பதாகச் செய்ய வேண்டும். வழிபடுவோம் வளம் பெறுவோம்.

குபேர பூஜா சங்கிரகம்

1. ஆசன மூர்த்தி மூலம்:

1. ஓம்-ஹாம்-குபேர-ஆசனாய நம;
2. ஓம்-ஹாம்-கும்-குபேர-மூர்த்தயே நம;
3. ஓம்-ஹாம்-கும்-கம்பீரிணி சகிதாய குபேரே நம;

2. காயத்ரி:

ஓம் யக்ஷ்ராஜாய வித்மகே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேர ப்ரசோதயாத்

3. தியான சுலோகம்:

குபேரம் மனுஜாஸீனம்
ஸகர்வம் கர்வவிக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம்
உத்தராசாபதிம் ஸ்மரேத்

4. மூல மந்திரம்:

ஓம்-ஹாம்-கும்-கம்பீரிணி சகிதாய-கதா ஹஸ்தாய குபேரனே நம:

5. துதி:

வளர்பொன் நிறத்தன், குள்ள வடிவன்
கதைநிதிக் கரத்தன், நர வாகனன்
வரத அபய குபேரனைப் போற்றுவோம்

6. பிரார்த்தனை:

ஸ்வர்ண தேக கதா ஹஸ்த
நர வாகன சங்கபதுமநிதிசேகர
கம்பீரிணி ஸகிதாய உத்ரதிசா பால
குபேர தேவ ஆன்மார்த்த, பரார்த்த,
கும்பாபிஷேக பூஜா க்ரியாயாம் சர்வ
மங்கள சித்திம் அநுக்ரஹாணாம்.

*குபேர அஷ்ட சத அர்ச்சனா 108

குறிப்பு: இந்திர அஷ்ட சத அர்ச்சனாவில் கூறியுள்ள, முறையைப் பின்பற்றுக.

1. ஓம் குபேராய நம;
2. ஓம் தந தாய நம;
3. ஓம் ஸ்ரீ மதே நம;
4. ஓம் யசேஷ ஸாய நம;
5. ஓம் குஷ்ய கேஸ்வராய நம;
6. ஓம் நதி சாய நம;
7. ஓம் சங்கர சகாய நம;
8. ஓம் மகாலக்ஷிமீ நிவாஸபுவே நம;
9. ஓம் மகாபத்ம நிதீசாய நம;
10. ஓம் பூர் னாய நம;
11. ஓம் பத்ம நிதீஸ்வராய நம;
12. ஓம் சங்காக்ய நிதிநாதாய நம;
13. ஓம் மகராக்ய நிதிப்ரியாய நம;
14. ஓம் சூகச்சப நிதீசாய நம;
15. ஓம் முகுந்த நிதிநாயகாய நம;
16. ஓம்  நீல நித்யதிபாய நம;
17. ஓம் தநதான்ய நிதிநாயகாய நம;
18. ஓம் மக தே நம;
19. ஓம் வர நித்யநிபாய நம;
20. ஓம் பூஜ் யாய நம;
21. ஓம் லட்சுமி சாம்ராஜ்ய தாயகாய நம;
22. ஓம் இலபி லாபத்யாய நம;
23. ஓம் கோசா தீசாய நம;
24. ஓம் குலோசி தாய நம;
25. ஓம் அஸ்வா ரூடாய நம;
26. ஓம் விச்வ வந்த்யாய நம;
27. ஓம் வசேச ஜ்ஞாய நம;
28. ஓம் விசார தாய நம;
29. ஓம் நளகூபர நாதாய நம;
30. ஓம் மணிக்ரீவ வபித்ரே நம;
31. ஓம் கூட மந்த்ராய நம;
32. ஓம் வைஸ்ர வனாய நம;
33. ஓம் சித்ரலேகா ப்ரியாய நம;
34. ஓம் ஏக பிங்காய நம;
35. ஓம் அளாக தீசாய நம;
36. ஓம் பௌல ஸ்த்யாய நம;
37. ஓம் நரவாக நாய நம;
38. ஓம் கைலாசசை நிலயாய நம;
39. ஓம் ராஜ் தாய நம;
40. ஓம் ராவணா க்ரஜாய நம;
41. ஓம் சித்ரசைத்ரோ தோத்யாய நம;
42. ஓம் விகார சூகுதூஹலாய நம;
43. ஓம் மகோத் சாகாய நம;
44. ஓம் மகா ப்ராச்ஞாய நம;
45. ஓம் சதாபுஷ்பக வாகநாய நம;
46. ஓம் சார்வ பௌமாய நம;
47. ஓம் அங்க நாதாய நம;
48. ஓம் சோ மாய நம;
49. ஓம் சௌம்ய திகீஸ்வராய நம;
50. ஓம் புண்யாத் மநே நம;
51. ஓம் புருசூத ச்ரியை நம;
52. ஓம் சர்வபுண்ய சநேச்வராய நம;
53. ஓம் நீதி வேத்ரே நம;
54. ஓம் ய க்ஷ்õய நம;
55. ஓம் லங்கா ப்ராக்தந நாயகாய நம;
56. ஓம் பரமா சாந்தாத்மநே நம;
57. ஓம் யக்ஷ ராசே நம;
58. ஓம் யட்சிணீ வ்ருத்யாய நம;
59. ஓம் கிந்ந ரேசாய நம;
60. ஓம் கிம்புருச நாதாய நம;
61. ஓம் கட்காயு தாய நம;
62. ஓம் வசி நே நம;
63. ஓம் ஈசாந தக்ஷ பார்ச்வஸ்தாய நம;
64. ஓம் வாயுவாமச மாச்ரயாய நம;
65. ஓம் தர்மார்க்கை கநிரதாய நம;
66. ஓம் தர்மசம்முக சம்ஸ்திதாய நம;
67. ஓம் நித் யேஸ்வராய நம;
68. ஓம் தநாத் யட்சாய நம;
69. ஓம் அஷ்டலக்ஷ்ம்யா ச்ரிதாலயாய நம;
70. ஓம் மநுஷ்ய தர்மினே நம;
71. ஓம் சத்வ வ்ருத்தாய நம;
72. ஓம் கோசலட்சுமி சாமாச்ரிதாய நம;
73. ஓம் தநலட்சுமி நித்யவாசாய நம;
74. ஓம் தாந்யலட்சுமி நிவாசபுவே நம;
75. ஓம் ஐஸ்வர்யலட்சுமி சதாவாசாய நம;
76. ஓம் கஜலட்சுமி ஸ்திராலயாய நம;
77. ஓம் ராஜ்யலக்ஷிமி சந்மகே சாய நம;
78. ஓம் தைர்யலக்ஷ்மி க்ருபாச்ரயாய நம;
79. ஓம் அகண்ட ஐஸ்வர்ய சம்யுக்தாய நம;
80. ஓம் நித்யா நந்தாய நம;
81. ஓம் சுகாச் ரயாய நம;
82. ஓம் நித்ய த்ருப்தாய நம;
83. ஓம் நிதித் ராத்ரே நம;
84. ஓம் நிரா சாய நம;
85. ஓம் நிருபத் வராய நம;
86. ஓம் நித்ய காமாய நம;
87. ஓம் நிரா காஞ்சாய நம;
88. ஓம் நிருபாதிக வாசபுவே நம;
89. ஓம் சாந்தாய நம;
90. ஓம் சர்வ குணோவேதாய நம;
91. ஓம் சர்வ ஜ்ஞாய நம;
92. ஓம் சர்வ சம்மதாய நம;
93. ஓம் சர்வாணீ கருணாபத்ராய நம;
94. ஓம் சாந்த கிருபாலயாய நம;
95. ஓம் கந்தர்வகுல சம்சேவ்யாய நம;
96. ஓம் சௌகந்திக சூமப்ரியாய நம;
97. ஓம் சுவர்ண நகரீ வாசாய நம;
98. ஓம் மகாமேரூத்ர ஸ்தாபிநே நம;
99. ஓம் மகர்சிகண சம்ஸ்துதாய நம;
100. ஓம் துஷ்டாய நம;
101. ஓம் சூர்பண காஜ்யேஷ்டாய நம;
102. ஓம் சிவபூசார தாய நம;
103. ஓம் அந காய நம;
104. ஓம் ராஜயோக சமாயுக்தாய நம;
105. ஓம் ராஜசேகர பூசகாய நம;
106. ஓம் ராச ராசாய நம;
107. ஓம் ஸ்வர்ந தேகாய நம;
108. ஓம் வைஸ்ர வணாய நம;

அஷ்ட சத ஸ்தோத்ரம் ஸமர்ப்பயாமி

குபேர நாமம் சபித்து, பழ, தாம்பூல, நைவேத்யம் சமர்ப்பித்து, தூப, தீப, கர்ப்பூர, நீராஞ்சனம் செய்க. மலர் சாத்துக;

 
மேலும் அட்டதிக்குப் பாலகர்கள் புராணம் »
temple news
எல்லாம் வல்ல தடங்கருணைப் பெருங்கடலான ஈஸ்வரன்; இருந்து பஞ்ச கிருத்தியங்கள் புரிந்தருளும் இடம்; ... மேலும்
 
temple news
அமராவதி பட்டின அதிபதி இந்திரன். அப்பட்டினம் யாராலும் கட்டப்பட்டதன்று. விசுவகர்மா என்ற தேசதச்சனின் தபோ ... மேலும்
 
temple news
அக்நி தேவர் மூவகைப்படுவர். திசாக்னி தேவர் - யாகாக்னி தேவர் -சிவாக்னி தேவர் எனப் பெயர் பெறுவர். இவர்கள் ... மேலும்
 
temple news

எம புராணம் ஜூன் 10,2015

எல்லாம் வல்ல பரமசிவனின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான சம்காரத்தைச் செய்பவன் ருத்ரன். ஆனாலும் அவனது ... மேலும்
 
temple news
இவன் தென்மேற்குத் திசைக் காவலன். இவன் இருந்தாளும் பட்டிணம் கிருஷ்ணாங்கனை என்பது இவனது தேவி தாகினி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar