Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குபேர புராணம் ஈஸான்யன் புராணம் ஈஸான்யன் புராணம்
முதல் பக்கம் » அட்டதிக்குப் பாலகர்கள் புராணம்
வாயு புராணம்
எழுத்தின் அளவு:
வாயு புராணம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2015
06:06

உயிராய் இருந்து மக்களை உய்விப்பவன். காற்றாய் இருந்து ககனத்தைக் காப்பவன். புயலாய்த் தோன்றி புவனத்தை அழிப்பவன் எவனோ? அவனே காற்று ஆவான் இவனை, வடமொழியில் வாயு என்பர். பிற அட்டதிக்குப் பாலகர் தேவர் என்றுஅழைக்கப்பட இவனோ வாயு பகவான் என்று சிறப்புக் கருதி அழைக்கப்படலானான். மரீசி என்பவர் ஒரு ரிஷி. இவரது மனைவியின் பெயர்களை. இவர்களுக்குப் பிறந்தவர் காசிபர் என்ற முனிவர். இவன் தட்டப் பிரசாபதியின் குமாரிகள் பதின்மூவரை மணந்தார். அவர்களில் ஒருத்தியின் மகனாகத் தோன்றியவரே வாயு. வாயுவுக்குரிய பதி கந்தவதி. தேவி அஞ்சனை என்ற கோரா வட மேற்றிசைக்கு அதிபதி. பயணிப்பது மான் வாகனத்தில் ஆயுதமோ துவசம் எனப்படும் கொடி வாயு என்பது ஒரு பதம் அதாவது பதவி அதைத் தவத்தால் அடைந்தான். வாயு மனித உடலில் இருதயத்தில் பிராணனாகவும், குதத்தில் அபானனாகவும், கழுத்தில் சமானனாகவும், நாபியில் உதானனாகவும், தேகத்தில் வியானனாகவும், கை-கால்களில் நாகனாகவும், தொடு உணர்வில் கூர்மனாகவும், முகத்தில் கிருகரனாகவும், வியர்த்தலில் தேவ தத்தனாகவும், உயிர் போகும் போது தனஞ்சயனாகவும் இருந்து செயல்படுவான். இதனை தசவாயு  என்று வைதீக வழக்கில் கூறுவர்.

இவன் மதங்க முனிவரிடம் தவறாக நடந்து கொண்டதால் சாபம் பெற்று, உடல் பலம் அற்று திரியம்பகசேத்திரத்தில் சிவபூசை செய்து சிவனால் மீண்டும் உடல் பலம் பெற்றான். முருகனின் திரு அவதாரத்திற்குக் காரணமான சிவனின் நெற்றிக் கண்ணில் தோன்றிய ஆறு நெருப்புப் பொறிகளைத் தாங்கிச் சென்று சரவணப் பொய்கையில் இட்டு முருகனுக்கு சரவணன் என்ற பெயர் வரக்காரணமாய் இருந்தவன். மேலும், ஸ்கந்தப் பெருமானுக்கும், சூரபத்மனுக்கும் நிகழ்ந்த போரில், சரவணனுக்குச் சாரதியாய் இருந்து பணிபுரிந்தவன்.

அஞ்சனை என்ற அப்சரசைக் கூடி,  அநுமனைத் தோற்றுவித்தவன். அநுமானுக்கு நீ யாரைக் காண்கிறையோ, அவரிடத்தில் உனக்கு அதிக அன்பு மேலிடுகையில் அவர்களுக்கு அடிமை செய் எனக் கட்டளை இட்டருளியவன். இதனாலேயே, இராமனுக்கு அநுமன் அடிமையானான். அநுமனை ஒரு முறை இந்திரன் வச்சிரத்தால் அடித்த போது, தன் இயக்கத்தை நிறுத்தித்  தண்டித்தவன்.

ஆதி சேடனுக்கும், தனக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில், மேருவின் சிகரத்தைப் பெயர்த்து அறிந்தவன்.

அனைத்து உயிர்களுக்கும் மூச்சுக்காற்றாய் இருந்து அருளுபவர். பச்சை நிறத்தினர். வடமேற்குத் திசைக் காவலர். சதா சஞ்சரித்துக் கொண்டேயிருப்பவர். இவருக்கு பூதாத்மா என்ற பெயருமுண்டு.

இவரை வழிபட்டால், நீண்ட ஆயுள் அடையலாம் சுவாச நோய் நீங்கும். எப்போதும் தென்றல் சுகத்தில் இன்புற்று இருக்கலாம்.

வாயு பூஜா சங்கிரகம்

1. ஆசன மூர்த்தி மூலம்:

1. ஓம்-ஹாம்-வாயு-ஆசனாய நம;
2. ஓம்-ஹாம்-வம்-வாயு மூர்த்தயே நம;
3. ஓம்-ஹாம்-வம்-கோரா சகிதாய வாயவே நம;

2. காயத்ரி:

ஒம்-ஜக்த்ப்ராணாய வித்மஹே
த்வாஜ ஹஸ்தாய தீமஹி
தந்நோ வாயு ப்ரசோதயாத்

3. தியான சுலோகம்

ஆபீன் ஹரிதச்சாயம்
விலோலத்வ ஜதாரிணம்
ப்ராண பூதம்ச பூதானாம்
ஹரிணஸ்தம் ஸ்மீரணம்

4. மூல மந்திரம்:

ஓம்-ஹாம்-வம்-கோரா-சகிதாய-துவச ஹஸ்தாய வாயுவே நம;

5. துதி:

பச்சை வண்ணமும் பதுமக் கரமும்
மான் வாகனமும் மாண்புடைத் துவசமும்
அபய வரதமும் கொண்ட வாயுவை வணங்குவோம்

6. பிரார்த்தனை:

மிருக வாகன மரகத தேக
த்வச ஹஸ்த கோராதேவி ஸகிதாய
உத்ரகோண பால வாயு தேவ
ஆன்மார்த்த, பரார்த்த,  
கும்பாபிஷேக பூஜா க்ரியாயாம் சர்வ
மங்கள சித்திம் அநுக்ரஹாணாம்

வாயு அஷ்ட சத அர்ச்சனா 108

குறிப்பு:  இந்திர அஷ்ட சத அர்ச்சனாவில் கூறியுள்ள, முறையைப் பின்பற்றுக.

1. ஓம் வாயவே நம;
2. ஓம் சதா கதயே நம;
3. ஓம் வா தாய நம;
4. ஓம் ஜகத் வ்யாபிநே நம;
5. ஓம் மகா பலாய நம;
6. ஓம் நப ஸ்வதே நம;
7. ஓம் அவ் யாய நம;
8. ஓம் ஊர்த்வ லோகாதாராய நம;
9. ஓம் அந்தரி சகாய நம;
10. ஓம் துரீய பூதாய நம;
11. ஓம் நிருப மாய நம;
12. ஓம் ஸ்பர்ச வதே நம;
13. ஓம் விஸ்வ காய நம;
14. ஓம் ஹ ராய நம;
15. ஓம் சூத்தாய நம;
16. ஓம் சமீர ணாய நம;
17. ஓம் மேகா தாராய நம;
18. ஓம் மேக நிவாரகாய நம;
19. ஓம் வ்ருஷ்டி காரினே நம;
20. ஓம் மேகாம் காய நம;
21. ஓம் வாத்யா காராய நம;
22. ஓம் அக்னி மித்ரகாய நம;
23. ஓம் சப்த காரிணே நம;
24. ஓம் வாக் தூலாய நம;
25. ஒம் ஸ்தூல சூக்ம ப்ரவர்தகாய நம;
26. ஓம் தவகிம் த்ரியாத்மகாய நம;
27. ஓம் சர்வ சேதநாய நம;
28. ஓம் சர்வ சாலநாய நம;
29. ஓம் ஸ்ப்தாத் மனே நம;
30. ஓம் தச சம்ஜ்ஞாய நம;
31. ஓம் சர்வாவயவ சம்ஸ்திதாய நம;
32. ஓம் ஆவ காய நம;
33. ஓம் விவ காய நம;
34. ஓம் சம்வ காய நம;
35. ஓம் அநுவ காய நம;
36. ஓம் உத்வ் காய நம;
37. ஓம் ப்ரவ காய நம;
38. ஓம் நாடி சம்காய நம;
39. ஓம் பரிவ காய நம;
40. ஓம் மரு தே நம;
41. ஓம் ப்ராணாத் மனே நம;
42. ஓம் அபாந சம்ஜ்ஞாய நம;
43. ஓம் உதா நாத்காய நம;
44. ஓம் வ்யான சம்ஜ்ஞகாய நம;
45. ஓம் சமா நாக்யாய நம;
46. ஓம் நாக சம்ஜ்ஞாய நம;
47. ஓம் கூர்மாச் யாய நம;
48. ஓம் க்ருகரா பிதாய நம;
49. ஓம் தேவதத்தாக் வயாய நம;
50. ஓம் தநம் சயசூம் ஞாய நம;
51. ஓம் ப்ரபம் ஜனாய நம;
52. ஓம் சகி ப்ரணாய நம;
53. ஓம் சியோதிஸ் சக்ரப்ரவர்தகாய நம;
54. ஓம் கம்த வாஹாய நம;
55. ஓம் அநி லாய நம;
56. ஓம் தூளி தூசராய நம;
57. ஓம் வநகம்ப நாய நம;
58. ஓம் கநகர்ஜன காரிணே நம;
59. ஓம் கநா கநவிலும் டநாய நம;
60. ஓம் ஆசன் யுத் பாதகாய நம;
61. ஓம் பீரவே நம;
62. ஓம் பவமா நாய நம;
63. ஓம் சநாத னாய நம;
64. ஓம் திதிகர்ப சமுத்பந்தாய நம;
65. ஓம் இந்திரா ச்ஞாதினே நம;
66. ஓம் சமீர ணாய நம;
67. ஓம் சேச ஸ்பர்த்தோ நம;
68. ஓம் அமரார் சிதாய நம;
69. ஓம் பக வதே நம;
70. ஓம் ஊச்ம சம்த்ரே நம;
71. ஓம் நிஸ் சீமகாய நம;
72. ஓம் சேத வாரகாய நம;
73. ஓம் வசந்த மந்தசாரினே நம;
74. ஓம் வ்யச நோச்சலநாய நம;
75. ஓம் ப்ருஷ தஸ்வாய நம;
76. ஓம் மகா வேகதாயினே நம;
77. ஓம் மைநாக ரட்சகாய நம;
78. ஓம் ஊர்மி மாலீகாய நம;
79. ஓம் ஸர்ப ஜீவநாய நம;
80. ஓம் ஜீவாதார ரட்சகாய நம;
81. ஓம் சட்கோணாத் மனே நம;
82. ஓம் தூம்ர வர்ணாய நம;
83. ஓம் கல் யாய நம;
84. ஓம் சாந்தி கலாத ராய நம;
85. ஓம் ஹநூஜ்ந காய நம;
86. ஓம் பீமசேந தாதாய நம;
87. ஓம் ஜன ப்ரியாய நம;
88. ஓம் சர்வஜ் ஞாய நம;
89. ஓம் சர்வதோ பத்ராய நம;
90. ஓம் வாயு ரூபாய நம;
91. ஓம் த்வஜாயு தாய நம;
92. ஓம் தபஸ் வினே நம;
93. ஓம் ஜீவநா தாராய நம;
94. ஓம் நிரா ஸாய நம;
95. ஓம் ம்ருக வாகநாய நம;
96. ஓம் மூர்தா மூர்த்தயே நம;
97. ஓம் மகா வேகாய நம;
98. ஓம் தீரா தாராய நம;
99. ஓம் சபாத்ம காய நம;
100. ஓம் மந்ர ரூபாய நம;
101. ஓம் புராணேட் யாய நம;
102. ஓம் பூதாத்மனே தேவதோத்தமாய நம;
103. ஓம் நளகா ப்ரசாரகாய நம;
104. ஓம் நாத ரூபாய நம;
105. ஓம் வேண்வாதி நாதக்குதே நம;
106. ஓம் சூஷ்மாய நம;
107. ஓம் சர்வ பூஜ்யாய நம;
108. ஓம் குணாம் பதயே நம;

அஷ்ட சத ஸ்தோத்ரம் ஸமர்ப்பயாமி

வாயு நாமம் சபித்து, பழ, தாம்பூல நைவேத்யம் சமர்ப்பித்து, தூப, தீப, கர்ப்பூர, நீராஞ்சனம்,  செய்க. மலர் சாத்துக.

 
மேலும் அட்டதிக்குப் பாலகர்கள் புராணம் »
temple news
எல்லாம் வல்ல தடங்கருணைப் பெருங்கடலான ஈஸ்வரன்; இருந்து பஞ்ச கிருத்தியங்கள் புரிந்தருளும் இடம்; ... மேலும்
 
temple news
அமராவதி பட்டின அதிபதி இந்திரன். அப்பட்டினம் யாராலும் கட்டப்பட்டதன்று. விசுவகர்மா என்ற தேசதச்சனின் தபோ ... மேலும்
 
temple news
அக்நி தேவர் மூவகைப்படுவர். திசாக்னி தேவர் - யாகாக்னி தேவர் -சிவாக்னி தேவர் எனப் பெயர் பெறுவர். இவர்கள் ... மேலும்
 
temple news

எம புராணம் ஜூன் 10,2015

எல்லாம் வல்ல பரமசிவனின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான சம்காரத்தைச் செய்பவன் ருத்ரன். ஆனாலும் அவனது ... மேலும்
 
temple news
இவன் தென்மேற்குத் திசைக் காவலன். இவன் இருந்தாளும் பட்டிணம் கிருஷ்ணாங்கனை என்பது இவனது தேவி தாகினி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar