Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரம்ம புராணம்!
முதல் பக்கம் » அட்டதிக்குப் பாலகர்கள் புராணம்
விஷ்ணு புராணம்!
எழுத்தின் அளவு:
விஷ்ணு புராணம்!

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2015
12:06

விசிஷ்டாத்வைத் எனப்படும் ஸ்ரீ வைஷ்ணவம் சார்ந்தவர்களால் வழிபடப்படும் மூல மூர்த்தியாகிய மகாவிஷ்ணு என்பவர் வேறு. அட்டதிக்குப் பாலகர்களில் இறுதியாக வழிபடப்படும் விஷ்ணு வேறு என்பதை அன்பர்கள் உணர்தல் நலம். இவர் வைகுண்ட வாசிகளில் ஒருவரே. ஆனால் விஷ்ணு அம்சம் அமைந்தவர். இவரது நிறமும் நீலவண்ணமே. கைகளில் சங்கு, சக்கரம், கதை, வாள் தாங்கியிருப்பார். கங்கை, லக்ஷிமி, சரஸ்வதி மூவரும் மனைவியர், சிவனுக்குச் சக்தியாய் இருந்தவர் இவரே. இவருக்கும் ஸ்ரீ விஷ்ணுவுக்குக் கூறப்படும் கதைகள் அனைத்தும் சாரும். அவைகள் அனந்தம் அவற்றுள் ஒரு சிலவற்றைக் காண்போம். உலக சிருஷ்டியின் பொருட்டு இவர் தன் திருநாபியில் பிரமனைப் படைத்தார். பிரமனது நெற்றியினிடம் உருத்திரனைப் படைத்தார். சோமுகாசுரன் வேதங்களைத் திருடிக் கொண்டு செல்ல, மச்சாவதாரம் கொண்டு சென்று வேதத்தை மீட்டுக் கொண்டு வந்து பிரமனிடம் தந்தார். இரணியாட்சன் பூமியைச் சுருட்டிக் கொண்டு செல்ல, வராக அவதாரம் எடுத்து, பூமியைத் தமது கொம்பில் தாங்கி வந்து நிலைநிறுத்தியவர்.

பாற்கடல் கடையும் போது. மந்தார மலை அசைய, கூர்மாவதாரம் கொண்டு அதைத் தாங்கியவர். பிரகலாதனுக்காக நரசிங்க அவதாரம் ஏற்று இரணியனைக் கொன்று பிரகலாதனுக்கு அருள்புரிந்தவர். காசி பர்க்கு அதிதியிடம் அவதரித்து, வாமன் அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடிமண் யாசித்து, அவனை, தமது திருவடியால் அழுத்தி, தேவர் பயம் போக்கியவர். சமதக்னிக்குக் குமாரராய் அவதரித்து பரசுராமர் என்ற பெயர் தாங்கி சூரிய வம்சத்தை நாசம் செய்தவர்.  திரிபுர சம்காரத்தில் சிவனுக்குரிய வில்லின் அம்பாய் இருந்து வெற்றி பெறச் செய்தவர். ஒரு கற்பத்தில், தாணுமூர்த்தியாய் நின்ற சிவன் அடியைத் தேடி, காண இயலாத நிலையில், அவரையே வணங்கி அனுக்கிரகம் பெற்றவர். அந்த காசுரனுக்கு அஞ்சிப் பெண் உருத் தாங்கித் திரிந்தவர். பாற்கடல் அமுதத்தைப் பங்கிட்டுத் தருவதற்காக சகன்மோகினி அவதாரம் எடுத்தவர். ஐயப்பன் அவதாரத்திற்காக பெண் வடிவம் கொண்டு, ருத்ரன் மூலம் ஐயப்பனை, ஈன்றவர். தாருகாவனத்து ரிஷிகள் கர்வம் கொண்ட போது மகேசுவரன் பிட்சாடனராய்ச் சென்ற போது அவருடன் மோகினி உருத்தாங்கிச் சென்று இருடிகளைக் கர்வ பங்கம் செய்தவர்.

திரிபுரதகன காலத்தில் சிவனை ரிஷபமாகத் தாங்கியவர். மேக உருக்கொண்டு, சிவனைத் தாங்கி, மேகவாகன கற்பமாக்கினவர். உபமன்னு முனிவடம் சிவதீட்சை பெற்று சிவ பூசை செய்து சாம்பன் முதலிய குமாரர்களைப் பெற்றவர். திருமங்கை ஆழ்வாருக்கு திருமணக் கோலம் காட்டி அருள் புரிந்தவர். இவரைத் தொழுதால் பொருளாதார வளமும் சுகபோக வாழ்வும் கிட்டும். தொழுது இன்புறுக.

விஷ்ணு பூஜா சங்கிரகம்

1. ஆசன மூர்த்தி மூலம்:

1. ஓம்-ஹாம்-விஷ்ணு-ஆசனாய நம;
2. ஓம்-ஹாம்-விம்-விஷ்ணு மூர்த்தயே நம;
3. ஓம்-ஹாம்-விம்-ஸ்ரீதேவி சகிதாய ஸ்ரீ விஷ்ணவே நம;

2. காயத்ரி:

ஓம் நாராயணய வித்மஹே
வசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

3. தியான சுலோகம்:

ச்யாமம் நீலம் காலமேக ஸ்வரூபம்
பத்மா காரம் ÷த்ரயுக்மம் கிரீடம்
சங்க சக்கரம் ஊரு ஹஸ்தா அயம்
ஸ்யாத் ஸ்ரீவத் சார்ங்கம் ஸ்ரீ விஷ்ணு மூர்த்திம் நமாமி

4. மூல மந்திரம்:

ஓம்-ஹாம்-விம்-ஸ்ரீதேவி சகிதாய ஸ்ரீ விணவே நம;

5. துதி:

ஆதி சேடனில் அறிதுயில கொண்டு,
சங்க சக்ர பத்ம கரத்தொடு
ஸ்ரீதேவி இருதய விஷ்ணுவை வணங்குவாம்

6. பிரார்த்தனை:

ஜோதி ஸ்வூப சங்கசக்ர ஹஸ்த
கச்சபா ரூட சேஷ சத்ர
கதா பத்ம கர கருட வாகன
ஸ்ரீதேவி சகிதாய ஸ்ரீ விஷ்ணு மூர்த்தயே
ஆன்மார்த்த, பரார்த்த,
கும்பாபிஷேக பூஜா க்ரியாயாம் சர்வ
மங்கள சித்திம் அநுக்ரஹாணாம்

விஷ்ணு அஷ்ட சத அர்ச்சனா 108

குறிப்பு: இந்திர அஷ்ட சத அர்ச்சனாவில் கூறியுள்ள, முறையைப் பின்பற்றுக.

1. ஓம் ஸ்ரீவிஷ்ணவே நம;
2. ஓம் அக்யு தாய நம;
3. ஓம் அதீந் தாய நம;
4. ஓம் அளி ருத்தாய நம;
5. ஓம் அம்ரு தாய நம;
6. ஓம் அர விந்தாய நம;
7. ஓம் ஆதித் தாய நம;
8. ஓம் ஆதி தேவாய நம;
9. ஓம் ஆனந் தாய நம;
10. ஓம் உபேந்த் ராய நம;
11. ஓம் கிருஷ்ணாய நம;
12. ஓம் கேச வாய நம;
13. ஓம் சேத் ரஜ்யாய நம;
14. ஓம் கதா தராய நம;
15. ஓம் கருட த்வஜாய நம;
16. ஓம் கோ விந்தாய நம;
17. ஓம் சதுர்ப் புஜாய நம;
18. ஓம் ஜனார்த் தனாய நம;
19. ஓம் தமோ தராய நம;
20. ஓம் தீப்ப மூர்த்தயே நம;
21. ஓம் தேவகீ நந்தனாய நம;
22. ஓம் தனஜ்ஜ யாய நம;
23. ஓம் நாராய ணாய நம;
24. ஓம் நாரசிம்க வபுசே நம;
25. ஓம் பத்ம நாபாய நம;
26. ஓம் பத்மினே நம;
27. ஓம் ப்ரத்யும் னாய நம;
28. ஓம் புண்ரீக அக்ஷ்காய நம;
29. ஓம் ப்ருகத் ரூபாய நம;
30. ஓம் பக்த வத்சலாய நம;
31. ஓம் மது சூதனாய நம;
32. ஓம் மகா தேவாய நம;
33. ஓம் மாத வாய நம;
34. ஓம் முகுந் தாய நம;
35. ஓம் லட்சுமி பதே நம;
36. ஓம் வசு ப்ரதாய நம;
37. ஓம் வாம னாய நம;
38. ஓம் விக்ர மாய நம;
39. ஓம் விஷ்வக் சேனாய நம;
40. ஓம் வைகுண்டாய நம;
41. ஓம் ஸ்ரீ கண்டனே நம;
42. ஓம் ஸ்ரீ நிவாசாய நம;
43. ஓம் சங்கர் சணாய நம;
44. ஓம் சுதர்ச னாய நம;
45. ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம;
46. ஓம் யசோதா வத்சலாய நம;
47. ஓம் தேவகீ நந்தனாய நம;
48. ஓம் நவநீத நடாய நம;
49. ஓம் மதுரா க்ருதவே நம;
50. ஓம் கோவிந்தாய நம;
51. ஓம் அனந் தாய நம;
52. ஓம் தேனுகாசூர பஞ்சனாய நம;
53. ஓம் யாத வேந்த் ராய நம;
54. ஓம் வன் மாலினே நம;
55. ஓம் பீத வாசனே நம;
56. ஓம் பாரிஜாத பகாரகாய நம;
57. ஓம் கோ பாலாய நம;
58. ஓம் காம ஜனகாய நம;
59. ஓம் த்வாரகா நாயகாய நம;
60. ஓம் ப்ருந்தாவன சஞ்சாரினே நம;
61. ஓம் துலசீதாம பூசணாய நம;
62. ஓம் நரநாராயண ஆத்மகாய நம;
63. ஓம் பரம புருசாய நம;
64. ஓம் சத்யபாமா ரதாய நம;
65. ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாராய நம;
66. ஓம் ஸ்ரீகத் குரவே நம;
67. ஓம் வேணுநாத விசாரதாய நம;
68. ஓம் பாணாசுர கராந்தகாய நம;
69. ஓம் பார்த்த சாரதயே நம;
70. ஓம் பர ப்ரம்மனே நம;
71. ஓம் கோபிவஸ்த்ர அபகாரகாய நம;
72. ஓம் புண்ய லோகாய நம;
73. ஓம் வேத வேத்யாய நம;
74. ஓம் தயா நிதயே நம;
75. ஓம் லட்சுமி ப்ராணகாந்தாய நம;
76. ஓம் வேங்கடாசல நாயகாய நம;
77. ஓம் வரேண் யாய நம;
78. ஓம் பய நாசனாய நம;
79. ஓம் ராமா வசராய நம;
80. ஓம் ரகு புங்கவாய நம;
81. ஓம் ரூப வதே நம;
82. ஓம் கமலா காந்தாய நம;
83. ஓம் ராசராச வரப்ரதாய நம;
84. ஓம் ரம னாய நம;
85. ஓம் நித்ய வைபவாய நம;
86. ஓம் தேவே சாய நம;
87. ஓம் ரம்ய விக்ரகாய நம;
88. ஓம் லோக நாதாய நம;
89. ஓம் புஜங்க சயனாய நம;
90. ஓம் ஜாக்ரதே நம;
91. ஓம் வரேண் யாய நம;
92. ஓம் பூர்ண போதாய நம;
93. ஓம் வேங்கடாய நம;
94. ஓம் யஜ்ஞ வராஹாய நம;
95. ஓம் மது சூதனாய நம;
96. ஓம் புருசோத்தமாய நம;
97. ஓம் பத்மினி ப்ரியாய நம;
98. ஓம் தேவ பூசிதாய நம;
99. ஓம் நிர்வி கல்பாய நம;
100. ஓம்  நிரஞ்ஜ னாய நம;
101. ஓம் சார்ங்க பாணயே நம;
102. ஓம் நந்த கினே நம;
103. ஓம் சங்க தாரகாய நம;
104. ஓம் தீன பந்தவே நம;
105. சடாமகுட சோபிதாய நம;
106. ஓம் ஜனர்த்த னாய நம;
107. ஓம் வன மாலினே நம;
108. ஓம் ஸ்ரீ மகா விஷ்ணவே நம;

அஷ்ட சத ஸ்தோத்ரம் ஸமர்ப்பயாமி

விஷ்ணு நாமம் சபித்து, பழ, தாம்பூல, நைவேத்யம் சமர்ப்பித்து, தூப, தீப, கர்ப்பூர, நீராஞ்சனம் செய்க மலர் சாத்துக.

 
மேலும் அட்டதிக்குப் பாலகர்கள் புராணம் »
temple news
எல்லாம் வல்ல தடங்கருணைப் பெருங்கடலான ஈஸ்வரன்; இருந்து பஞ்ச கிருத்தியங்கள் புரிந்தருளும் இடம்; ... மேலும்
 
temple news
அமராவதி பட்டின அதிபதி இந்திரன். அப்பட்டினம் யாராலும் கட்டப்பட்டதன்று. விசுவகர்மா என்ற தேசதச்சனின் தபோ ... மேலும்
 
temple news
அக்நி தேவர் மூவகைப்படுவர். திசாக்னி தேவர் - யாகாக்னி தேவர் -சிவாக்னி தேவர் எனப் பெயர் பெறுவர். இவர்கள் ... மேலும்
 
temple news

எம புராணம் ஜூன் 10,2015

எல்லாம் வல்ல பரமசிவனின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான சம்காரத்தைச் செய்பவன் ருத்ரன். ஆனாலும் அவனது ... மேலும்
 
temple news
இவன் தென்மேற்குத் திசைக் காவலன். இவன் இருந்தாளும் பட்டிணம் கிருஷ்ணாங்கனை என்பது இவனது தேவி தாகினி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar