Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஸான்யன் புராணம் விஷ்ணு புராணம்! விஷ்ணு புராணம்!
முதல் பக்கம் » அட்டதிக்குப் பாலகர்கள் புராணம்
பிரம்ம புராணம்!
எழுத்தின் அளவு:
பிரம்ம புராணம்!

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2015
12:06

மகா விஷ்ணுவின் நாபியிலிருந்து பதுமகற்ப காலத்தில் ஒரு தாமரை மலர் தோன்றியது. அந்தத் தாமரை மலரிலிருந்து, பிரம்மதேவர் தோன்றினார். தோன்றியவர் திருமாலின் திருவடிகளை வணங்கிய போது, திருமால் மகனே உனக்குப் பிரமன் எனப் பெயர் வழங்கும். நான் படைக்கிறேன் என்ற எண்ணமில்லாமல், எல்லாவற்றையும் படைப்பாயாக என்று திருவாய் மலர்ந்தார். இந்த இறைவர் பிரம்மாவைப் பற்றி இந்தியாவிலுள்ள இந்துக்கள் அனைவரும் அறிந்திருப்பர் என்று கருதலாம். இவரின் புராணம் விரிந்தது. பல்வேறு கதைகளைக் கொண்டது. குறிப்பிட்ட இரண்டொரு நிகழ்வுகளை மட்டும் காண்போம். இவருக்கு நான்கு திருமுகங்கள் என்றாலும் மூன்று முகங்களே, காணக்கிடைக்கும். இவரது திருவுருவங்கள் கருவறை, வழிபாட்டில் இல்லா விட்டாலும். திருக்கோபுரங்கள் பலவற்றில் காணலாம். மஞ்சள் நித்தவர். வேதங்களின் தலைவர். படைத்தல் தொழில் புரிபவர். அன்னப் பறவையை வாகனமாக உடையவர். இவருக்கு நான்கு கரங்கள், மேல் வலக்கரத்தில் ஜபமாலையும் இடது மேல் கரத்தில் தண்டமும், கீழ் வலக்கரத்தில் கமண்டலமும், இடக்கரத்தில் சிருக்கு சிருவமும் இருக்கும்.

இவருக்கு சரஸ்வதி. சாவித்திரி, காயத்ரி என்று மூன்றுதேவியர். சாவித்திரியை பிராமி எனக் கூறுவதுமுண்டு. திலோத்தமையைப் படைத்து, அவள் அழகைக் கண்டு வியந்து, விரும்பிய போது, அவள் நான்கு திக்கிலும் ஓடினள். அத்திக்குகளில் ஒவ்வொரு முகம் கொண்டு பார்த்தார். எனவே நான்முக பிரம்மா ஆனார். கல்விக் கடவுளான சரஸ்வதியைப் படைத்தார் அவளையே மணந்து கொண்டார். இவர் சுயம்புவாயும், ஒவ்வொரு கற்பத்தில் விஷ்ணு ருத்திரர்களிடத்தில் தாம் பிறந்தும், அவர்களைத் தம்மிடம் பிறப்பித்தும். தேவர்கள், ரிஷிகள், பித்ருக்களுக்கு மூலகாரணராயும், எல்லாச் சிருஷ்டிகளையும் செய்தவராயும், எழுந்தருளி இருப்பார். புல் பூண்டு முதல் ரிஷிகள் தேவர்கள் வரை ஒவ்வொரு அவதாரம் எடுத்து இவர் தோற்றுவித்ததாகப் புராணங்கள் கூறும். திரிபுர தகனத்தின் போது சாரதியாய் இருந்து சிவனுக்கு உதவியவர். சித்தி-புத்தி எனும் இரு பெண்களைப் பெற்று அவர்களை விநாயகருக்குத் திருமணம் செய்து வைத்தவர். குமாரக் கடவுள் சூராதியரை வெற்றி கொள்ள வேலாய் இருந்து உதவியவர். நிலகற்பத்தில் சிவத்தியானம் செய்யச் சிவ மூர்த்தி - அகோரமூர்த்தியாய் எழுந்தருளி அநுக்கிரகிக்கப்பட்டவர். இவரைத் தொழுதால் நல்லறிவும், நீண்ட ஆயுளும் அருளுவார்.

*பிரம்ம பூஜா சங்கிரகம்

1. ஆசன மூர்த்தி மூலம்:

1. ஓம்-ஹாம்-பிரம்ம-ஆசனாய நம;
2. ஓம்-ஹாம்-பிம்-பிரம்ம-மூர்த்தயே நம;
3. ஓம்-ஹாம்-பிம்-சாவித்ரி- சகிதாய பிரம்மணே நம;

2. காயத்ரி:

ஓம் வேதாத்மனாய வித்மகே
கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

3. த்யான சுலோகம்:

பீதவர்ண சமாயுக்தம் சதுராச்யம் சதுர்புஜம்
புஸ்தகம், ஞானமுத்ராம்சம், ஸ்வசூத்ரம் கமண்டதும்
தரந்தம் முஞ்சிசூத்ரம் சடாமகுட மண்டிதம்
வீராசனஸ்திதம், வந்தே விரும்மாணாம் பாரதிபதிம்

4. மூல மந்திரம்:

ஓம்-ஹாம்-பீம்-சாவித்ரி சகிதாய பத்ம ஹஸ்தாய பிரம்மணே நம

5. துதி:

அன்ன வாகனம், பொன்னிற மேனி
நான்கு வதனம், நயமிகு கமண்டலம்
அட்ச மாலை அணியமை சிருக்கு
தண்டம் தாங்கிய பிரமமரைப் போற்றுவோம்

6. பிரார்த்தனை:

ஸ்வர்ண தேக பத்ம ஹஸ்த
சதுர்முக அம்ச ஹிரண்ய கர்ப்ப
சாவிரி சகிதாயப்ரஹ்ம மூர்த்தயே
ஆன்மார்த்த, பரார்த்த,
கும்பாபிஷேக பூஜா க்ரியாயாம் சர்வ
மங்கள சித்திம் அநுக்ரஹாணாம்

*பிரம்ம அஷ்ட சத அர்ச்சனா 108

குறிப்பு:

 இந்திர அஷ்ட சத அர்ச்சனாவில் கூறியுள்ள, முறையைப் பின்பற்றுக.

1. ஓம் ப்ரஹ் மணே நம;
2. ஓம் வாக தீசாய நம;
3. ஓம் சூரஜ்யேஷ்டாய நம;
4. ஓம் ஹிரண்ய கர்பாய நம;
5. ஓம் பரமேஷ்டி நே நம;
6. ஓம் லோ கேசாய நம;
7. ஓம் பிதா மகாய நம;
8. ஓம் வாணி வல்லபாய நம;
9. ஓம் பத்ம ஜாய நம;
10. ஓம் விரிஞ் சிநே நம;
11. ஓம் தேவ தேவாய நம;
12. ஓம் கமண்டலு தராய நம;
13. ஓம் கௌதம பூஜ்யாய நம;
14. ஓம் அட்சமாலா தராய நம;
15. ஓம் சிருஷ்டி கர்த்தரே நம;
16. ஓம் சூத்த விக்ரகாய நம;
17. ஓம் அனுசுயா வத்சலாய நம;
18. ஓம் வராக ஜனகாய நம;
19. ஓம் விபீசன சன்னுதாய நம;
20. ஓம் சத்யலோக நிவாசிநே நம;
21. ஓம் அகல்யா ஜன்மகர்த்ரே நம;
22. ஓம் வேத தாரிணே நம;
23. ஓம் ராவண பூச்யாய நம;
24. ஓம் ஹரி ப்ரியாய நம;
25. ஓம் ஹிரண்ய வபுசே நம;
26. ஓம் அத்ரி சூதாய நம;
27. ஓம் சனகாதி சூபூஜ்யாய நம;
28. ஓம் பாஞ்சராத்ர விதாயினே நம;
29. ஓம் தேவேந்ர பூஜ்யாய நம;
30. ஓம் லோபா முத்ரார்சிதாய நம;
31. ஓம் நாராயண ஆத்மபூதாய நம;
32. ஓம் ராமதர்சன தாயினே நம;
33. ஓம் சுவயம் புவே நம;
34. ஓம் ரவிமண்டல லவர்தினே நம;
35. ஓம் ஹம்ச வாகனாதிரூடாய நம;
36. ஓம் இமாசல நிவாசினே நம;
37. ஓம் திலோத்தமா ஜன்மகர்த்ரே நம;
38. ஓம் சார பூதாய நம;
39. ஓம் சக்யாத்ரி வாசாய நம;
40. ஓம் காவேரி ஜனதாய நம;
41. ஓம் தாத் ரே நம;
42. ஓம் விதாத் ரே நம;
43. ஓம் வால்மீகி ஆனந்ததாய நம;
44. ஓம் ஆத்ம புவே நம;
45. ஓம் பிரம்ம அஸ்த்ர தாரினே நம;
46. ஓம் த்ரயீ முர்தயே நம;
47. ஓம் சிதிகண்ட சகாய நம;
48. ஓம் தாமோதர ப்ரீதிகர்த்ரே நம;
49. ஓம் விஷ்ணு பக்தாய நம;
50. ஓம் பகீரத கபூஜ்யாய நம;
51. ஓம் கவேர முக்திதாயினே நம;
52. ஓம் நாரதாதி சூபூஜ்யாய நம;
53. ஓம் ஸ்ரீராம சூனவே நம;
54. ஓம் பார்த ப்ரமாஸ்த்ர தாத்ரே நம;
55. ஓம் விசூத்த மானசாய நம;
56. ஓம் பத்மாசன ஸ்தாய நம;
57. ஓம் சதுர் ஹஸ்தாய நம;
58. ஓம் த்ரைலோக்ய நாதாய நம;
59. ஓம் சிவவிஷ்ஸ ப்ரியாய நம;
60. ஓம் சாத்வி காய நம;
61. ஓம் ப்ரக்ம சூத்ரோச்வலாய நம;
62. ஓம் சாது மித்ராய நம;
63. ஓம் கால ரூபாய நம;
64. ஓம் தட்சப்ராண தாத்ரே நம;
65. ஓம் சர்வ சிருஷ்டிகராய நம;
66. ஓம் நாரத பித்ரே நம;
67. ஓம் வராபய கராய நம;
68. ஓம் கலாகாஷ்ட ஸ்வரூபாய நம;
69. ஓம் வீணாகான ப்ரியாய நம;
70. ஓம் விஸ்வ வந்த்யாய நம;
71. ஓம் வித்யா தீசாய நம;
72. ஓம் சதாதும்புரு சேவ்யாய நம;
73. ஓம் சந்துஷ்ட மனசே நம;
74. ஓம் விசுவாமித்ர சூபூஜ்யாய நம;
75. ஓம் சகன்னா தராய நம;
76. ஓம் ப்ரக்மரிசி ஜனவந்யாய நம;
77. ஓம் சதுர் வக்த்ராய நம;
78. ஓம் ஸ்ரீகந்தர்பத நூநாசகரா நாய நம;
79. ஓம் கோடிசூர்ய ப்ரகாசாய நம;
80. ஓம் நாத ரூபாய நம;
81. ஓம் ரவிவம்ச சூபூஜ்யாய நம;
82. ஓம் அகஸ்த்ய சன்னுதாய நம;
83. ஓம் ரத்னபூசண தேகாய நம;
84. ஓம் திவ்யாம்பர தராய நம;
85. ஓம் சிக்மாசன ஸ்தாய நம;
86. ஓம் ரத்னா கரநுதாய நம;
87. ஓம் பக்தாபீஷ் ப்ரதாத்ரே நம;
88. ஓம் லோக பூஜ்யாய நம;
89. ஓம் அம்புசா சப்ரியாய நம;
90. ஓம் சர்வ சனாந்த கராய நம;
91. ஓம் பீர பவே நம;
92. ஓம் திவ்ய தேகாய நம;
93. ஓம் சர்வாபீஷ்டி ப்ரதாய நம;
94. ஓம் சூர வந்த்யாய நம;
95. ஓம் ரக்த வர்ணாய நம;
96. ஓம் சத்ய ஸ்வரூபாய நம;
97. ஓம் ஓங்கார ரூபாய நம;
98. ஓம் வேத ஸ்வரூபினே நம;
99. ஓம் சகுன ரூபாய நம;
100. ஓம் சத்த மூர்தயே நம;
101. ஓம் சச்சிதானந்த ரூபாய நம;
102. ஓம் ஆத்மாராம ஸ்வரூபினே நம;
103. ஓம் ஆதிமத்ய ஆனந்தரூபினே நம;
104. ஓம் தத்வ ஸ்வரூபாய நம;
105. ஓம் ஹம்ச ஸ்வரூபாய நம;
106. ஓம் த்ரிமாத்ரார்த்த ஸ்வரூபினே நம;
107. ஓம் அஜபாமந்திர ரூபிணே நம;
108. ஓம் பிரம தேவரே நம;

அஷ்ட சத ஸ்தோத்ரம் ஸமர்ப்பயாமி

பிரம்ம நாமம் சபித்து, பழ, தாம்பூல, நைவேத்யம் சமர்பித்து, தூப, தீபூ கர்ப்பூர, நீராஞ்சனம் செய்க மலர் சாத்துக.

 
மேலும் அட்டதிக்குப் பாலகர்கள் புராணம் »
temple news
எல்லாம் வல்ல தடங்கருணைப் பெருங்கடலான ஈஸ்வரன்; இருந்து பஞ்ச கிருத்தியங்கள் புரிந்தருளும் இடம்; ... மேலும்
 
temple news
அமராவதி பட்டின அதிபதி இந்திரன். அப்பட்டினம் யாராலும் கட்டப்பட்டதன்று. விசுவகர்மா என்ற தேசதச்சனின் தபோ ... மேலும்
 
temple news
அக்நி தேவர் மூவகைப்படுவர். திசாக்னி தேவர் - யாகாக்னி தேவர் -சிவாக்னி தேவர் எனப் பெயர் பெறுவர். இவர்கள் ... மேலும்
 
temple news

எம புராணம் ஜூன் 10,2015

எல்லாம் வல்ல பரமசிவனின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான சம்காரத்தைச் செய்பவன் ருத்ரன். ஆனாலும் அவனது ... மேலும்
 
temple news
இவன் தென்மேற்குத் திசைக் காவலன். இவன் இருந்தாளும் பட்டிணம் கிருஷ்ணாங்கனை என்பது இவனது தேவி தாகினி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar