Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போகம் ஒரு கண்ணோட்டம்! ஓங்காரத்தை ஜபிப்பது எப்படி? ஓங்காரத்தை ஜபிப்பது எப்படி?
முதல் பக்கம் » முண்டக உபநிஷதம்!
போகமும் துறவும்!
எழுத்தின் அளவு:
போகமும் துறவும்!

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2015
03:06

உலகம் சம்பந்தமானது சாதாரண அறிவு, கடவுளைப் பற்றியது உயர் அறிவு என்று முந்தின அத்தியாயத்தில் கண்டோம்.

சாதாரண அறிவின் துறைகள் எண்ணற்றவை. அவற்றை வளர்ப்பதற்கு இன்று எத்தனையோ எந்திரங்களும் பிறவும் உள்ளன. ஆனால் அன்று இருந்தவை கர்மங்கள், யாகங்கள், பல்வேறு சடங்குகள், வித்யைகள் போன்றவை. செல்வ வளத்திற்கும் செயல்திறனுக்கும் வித்யைகள் பயன்பட்டது பற்றி ஏற்கனவே கண்டோம். இந்த உலகில் சிறப்பாக வாழ வழி இதுவே என்று இந்த அத்தியாயம் தொடங்குகிறது. இந்த வித்யைகள், கர்மங்கள் போன்றவற்றின்மூலம் வாழ்க்கைவளத்தைப் பெருக்கி நன்றாக வாழலாம் என்பதை 1-6 வரையுள்ள மந்திரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வது மட்டும் மனிதனின் நோக்கமாக இருக்க முடியாது. ஏனெனில் எந்த வாழ்க்கையான<õலும் ஒரு முடிவுக்கு வந்தே தீரும். மரணத்தை யாரும் தடுக்க முடியாது. எனவே அதற்குமுன் மரணமற்ற அமர வாழ்க்கை அடையுங்கள் என்று உபநிஷதங்கள் அழைக்கின்றன. அமர வாழ்வு வேண்டுமானால் <உலகின் சுகபோகங்களை விட வேண்டும். இதுவே துறவு. இந்தத் துறவு, அதன் அடிப்படை நியதிகள்பற்றி 7-13 மந்திரங்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பாக வாழ வழி!

ததேதத் ஸத்யம்
மந்த்ரேஷு கர்மாணி கவயோ யான்யபச்யம்-
ஸ்தானி த்ரேதாயாம் பஹுதா ஸந்ததானிட
தான்யாசரத நியதம் ஸத்யகாமா
ஏஷ வ: பந்தா: ஸுக்ருதஸ்ய லோகே (1)

தத்- அது; ஏதத்-இது; ஸத்யம்- உண்மை; மந்த்ரேஷு-மந்திரங்களில்; கர்மாணி- கர்மங்கள்; கவய:- முனிவர்கள்; யானி- எவை; அபச்யன்- கண்ட; தானி- அவை; த்ரேதாயாம்-மூன்று வேதங்களிலும்; பஹுதா-மிகவும்; ஸந்ததானி- பின்பற்றப்பட்டன; தானி-அவை; ஆசரத- செய்யுங்கள்; நியதம்-எப்போதும்; ஸத்யகாமா:- உண்மையை நாடு பவர்கள்; ஏஷ:- இது; வ:- உங்கள்; பந்தா:- வழி; ஸுக்ருதஸ்ய- சிறப்பாக வாழ; லோகே- உலகில்.

1. மந்திரங்களில் முனிவர்கள் கண்டறிந்த பல்வேறு
கர்மங்கள் உண்மையானவை. அவை மூன்று வேதங்
களில் மிகவும் புகழப்பட்டுள்ளன. உண்மையை நாடு
பவர்கள் அவற்றை எப்போதும் செய்ய வேண்டும்.
இந்த உலகில் சிறப்பாக வாழ வழி இதுவே.

வேதங்களில் கூறப்பட்டுள்ள மந்திரங்களும் யாகங்களும் மற்ற <கர்மங்களும் உண்மையானவை. அக உலகுடன் கொண்ட தொடர்பால் முனிவர்கள் அனுபூதியில் பெற்ற உண்மைகள் அவை. எனவே அவற்றைப் பின்பற்றுவது இன்றியமையாதது. வேதங்களில் கூறப்பட்டுள்ள சில சடங்குகள் இந்தக் காலத்தில் சுலபமாகச் செய்யத் தக்கவையாக இல்லாமல் போகலாம். ஆனால் அதற்காக நாம் அவற்றைச் செய்யாமல் விடக்கூடாது. அவற்றைக் காலத்திற்கு ஏற்ப எப்படிச் செய்வது என்பதை நமக்குக் காட்டவே அவதார புருஷர்கள் தோன்றுகின்றனர். அவர்கள் காலத்தையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு அந்தச் சடங்குகளில் தேவையான மாற்றங்களைச் செய்து நமக்குத் தருகின்றனர். அவற்றை நாம் பின்பற்ற வேண்டும். மந்திரங்கள், கர்மங்கள், யாக யஜ்ஞங்கள் போன்றவற்றின் துணையால் <உலகில் ஒரு வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதே இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டியது.

ரிக், யஜுர், சாம வேதங்கள் இங்கே மூன்று வேதங்களாகக் கூறப்பட்டுள்ளன. அதர்வண வேதம் காலத்தால் பிந்தியது என்று கருதப்படுகிறது.

யாகம் ஒரு காட்சி:

யதா லேலாயதே ஹ்யர்ச்சி: ஸமித்தே ஹவ்யவாஹனே
ததாஸஸஜ்யபாகௌ அந்தரேணாஸஸஹுதீ: ப்ரதிபாதயேத் (2)

யதா- எப்போது; ஸமித்தே- ஜொலித்துக்கொண்டிருக்கின்ற; ஹவ்யவாஹனே- அக்கினியில்; அர்ச்சி:- சுவாலைகள்; லேலாயதே ஹி- ஓங்கி எழுகின்றனவோ; ததா-அப்போது; ஆஜ்யபாகௌ அந்தரேண- இரண்டு பக்கங்களுக்கு நடுவில்; ஆஹுதீ:- ஆஹுதிகளை; ப்ரதிபாதயேத்- சமர்ப்பிக்க வேண்டும்.

2. ஜொலித்துக்கொண்டிருக்கின்ற அக்கினியில் தீச்
சுவாலைகள் ஓங்கி எழும்போது இரண்டு பக்கங்
களுக்கு நடுவில் ஆஹுதிகளைச் சமர்ப்பிக்க
வேண்டும்.

யாகங்கள் வேதகாலத்தில் முக்கிய வழிபாட்டு முறையாக இருந்தன. மந்திரபூர்வமாக வளர்க்கப்பட்ட அக்கினியில் மந்திரபூர்வமாக அளிக்கப்படுகின்ற பொருட்கள் <உரியதேவர்களை அடையும் என்று நம்பப்பட்டது. சுவாலைகளுடன் நெருப்பு ஓங்கி எரியும்போது அதில் நெய், நைவேத்தியம் போன்ற ஆஹுதிப் பொருட்களை இட வேண்டும். சுவாலைகள் அடங்கிய பிறகு எதையும் சமர்ப்பிக்கக் கூடாது.

ஆஹுதிகளை எங்கே சமர்ப்பிப்பது? ஓங்கி எரியும் அக்கினியின் இடது மற்றும் வலது பாகங்களுக்கு நடுவில் சமர்ப்பிக்க வேண்டும். இது ஆவாப ஸ்தானம் எனப்படும்.

அக்னி ஹோத்ரம்:

யஸ்யாக்னிஹோத்ரம் அதர்சம் அபௌர்ணமாஸம்
அசாதுர்மாஸ்யம் அனாக்ரயணம் அதிதிவர்ஜிதம் ச
அஹுதம் அவைச்வதேவம் அவிதினா ஹுதம்
ஆஸப்தமாம்ஸ்தஸ்ய லோகான் ஹினஸ்தி (3)

யஸ்ய- யாருடைய; அக்னிஹோத்ரம்- அக்கினி ஹோத்ரம்; அததர்சம்- தர்சம் இல்லாமல்; அபௌர்ணமாஸம்- பூர்ணமாசம் இல்லாமல்; அசாதுர்மாஸ்யம்-சாதுர்மாஸ்யம் இல்லாமல்; அனாக்ரயணம்- ஆக்கிரயணம் இல்லாமல்; அதிதிவர்ஜிதம் - விருந்தினர் இல்லாமல்; அஹுதம்- உரிய காலத்தில் அல்லாமல்; அவைச்வதேவம்- வைசுவ தேவ கர்மம் இல்லாமல்; அவிதினா ஹுதம்-உரிய முறையில் அல்லாமல்; தஸ்ய- அவனுடைய; ஆஸப்தமாம்- ஏழு; லோகான்-உலகங்களை; ஹினஸ்தி- அழிக்கிறது.

3. தர்சம், பூர்ணமாசம், சாதுர்மாஸ்யம், ஆக்கிர
யணம், வைசுவ தேவ கர்மம் ஆகிய கர்மங்கள்
இல்லாமலும், விருந்தினரை அழைக்காமலும், உரிய
முறையில் அல்லாமலும் ஒருவன் அக்னி ஹோத்ரம்
செய்தால் அவனுக்கு ஏழு உலகங்களிலும் அழிவே
மிஞ்சுகிறது.

வைதீக கர்மங்களுள் முக்கியமானது அக்னிஹோத்ரம். இல்லறத்தானின் தினசரிக் கடமைகளுள் இது ஒன்று. இந்த யாகம் காலையிலும் மாலையிலும் செய்யப்படுகிறது. அக்னி ஹோத்ர யாகத்துடன், இங்கே கூறப்பட்டுள்ள யாகங்களையும் சேர்த்து செய்வதால்தான் கடமை பூர்த்தியாகும் என்று இந்த மந்திரம் தெரிவிக்கிறது.

தர்சம்: அமாவாசையின் மறுநாள் செய்ய வேண்டிய யாகம்.

பூர்ணமாசம்: பௌர்ணமியின் மறுநாள் செய்ய வேண்டிய யாகம்.

சாதுர்மாஸ்யம்: ஒவ்வொரு பருவ காலம் தொடங்கும் போதும், அதாவது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகின்ற யாகம். ஆனி, ஐப்பசி, மாசி மாத ஆரம்பங்களில் இந்த யாகம் செய்யப்படுகிறது.

ஆக்கிரயணம்: அறுவடைக் காலத்தில் செய்ய வேண்டிய யாகம்.

வைசுவ தேவம்: பறவை, மிருகம் முதலான உயிரினங்களுக்கு உணவளித்தல் இந்த யாகத்தின் ஓர் அங்கமாகும்.

அக்னி ஹோத்ரத்தை மேற்கொண்ட யாகங்களுடனும் நியதிகளுடனும் செய்யாதவனுடைய ஏழு உலகங்கள் அழிகின்றன. பூலோகம், புவர் லோகம், சொர்க்க லோகம், மஹர் லோகம், ஜனலோகம், தப லோகம், சத்திய லோகம் என்பவை ஏழு உலகங்கள், கர்மங்களை உரிய முறைப்படி செய்யும்போது, அந்தந்தக் கர்மங்களின் பலனாக இந்த உலகங்களில் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. கர்மங்களை உரிய முறைப்படி செய்யாதபோது அவற்றில் வாழும் பேற்றை ஒருவன் இழக்கிறான்.

அக்கினியின் ஏழு பண்புகள்:

யாக குண்டத்தில் அக்கினியின் செந்நாக்குகள் கனன்றெழுந்து ஓங்கி எரியும் காட்சியை 1.2.2-இல் கண்டோம். இங்கே அந்த அக்கினியின் அழகு கூறப்படுகிறது.

காளீ கராளீ ச மனோஜவா ச
ஸுலோஹிதா யா ச ஸுதூம்ரவர்ணா
ஸ்ஃபுலிங்கினீ விச்வருசீ ச தேவீ
லேலாயமானா இதி ஸப்தஜிஹ்வா: (4)

யா-யார்; காளீ-காளீ; கராளீ- கராளீ; மனோஜவா-மனோஜவா; ஸுலோஹிதா-சுலோஹிதா; ஸுதூம்ர வர்ணா- சுதூம்ரவர்ணா; ஸ்ஃபுலிங்கினீ-ஸ்ஃபுலிங்கிளீ; விச்வருசீ-விச்வருசீ; லேலாயமானா- ஓங்கி எழுகின்ற; தேவீ- பிரகாசத்துடன் கூடிய; ஸப்தஜிஹ்வா:- ஏழு நாக்குகள்; இதி-ஆகும்.

4. காளீ, கராளீ, மனோஜவா, சுலோஹிதா,
சுதூம்ரவர்ணா, ஸ்ஃபுலிங்கினீ, விச்வருசீ ஆகிய ஏழும்
ஓங்கி எழுந்து பிரகாசத்துடன் எரிகின்ற அக்கினியின்
ஏழு நாக்குகள் ஆகும்.

அக்கினிக்கு ஏழு நாக்குகள். இவை உண்மையில் அக்கினியின் ஏழு பண்புகள். காளீ=கறுப்பு; கராளீ= பயங்கரம்; மனோஜவா= மனத்தைப்போல் வேகமானது; சுலோஹிதா= சிவப்பு; சுதூம்ரவர்ணா= புகையுடன் கூடியது; ஸ்ஃபுலிங்கினீ= நெருப்புப் பொறிகளுடன் கூடியது; விச்வருசீ தேவீ= அழகுடன் எங்கும் பரவுகின்ற ஒளி.

கறுப்பும் சிவப்புமாகிய நிறத்தில், புகையுடனும் நெருப்புப் பொறிகளுடனும் பயங்கரமாக எழுந்து, அழகுடன் ஓங்கி வளர்ந்து, மனத்தைப்போல் வேகமாக எங்கும் பரவக்கூடிய அக்கினியின் அழகு இங்கே கூறப்படுகிறது.

யாகங்களின்மூலம் போகங்கள்: 5-6

ஏதேஷு யச்சரதே ப்ராஜமானேஷு
யதாகாலம் சாஹுதயோ ஹ்யாததாயன்
தம் நயந்த்யேதா: ஸூர்யஸ்ய ரச்மயோ
யத்ர தேவானாம் பதிரேகோஸதிவாஸ: (5)

ப்ராஜமானேஷு-ஒளிர்கின்ற; ஏதேஷு-இவற்றில்; யதாகாலம்-உரியவேளையில்; ய:- யார்; சரதே- செய்கிறானோ; தம்-அவனை; ஆததாயன்- கொடுக்கப்பட்ட; ஏதோ:- இந்த; ஆஹுதிகள்; ஸூர்யஸ்ய- சூரியனின்; ரச்மய:- கிரணங்கள்; யத்ர- எங்கே; தேவானாம் - தேவர்களின்; பதி:- தலைவன்; ஏக:- ஒன்றேயானவன்; அதிவாஸ:- வசிக்கிறானோ; நயந்தி- கொண்டு செல்கின்றன.

5. ஒளிர்கின்ற இந்த அக்கினி நாக்குகளில் உரிய
வேளையில் ஆஹுதிகளை அளித்து யார் கர்மங்கள்
செய்கிறானோ, அவனை அந்த ஆஹுதிகள், சூரிய
னின் கிரணங்கள்போல், ஒன்றேயான தேவர்களின்
தலைவன் வசிக்கின்ற இடத்திற்குக் கொண்டு
செல்கின்றன.

தேவர்களின் தலைவன் இந்திரன். பல்வேறு உலகங்களுக்குச் செல்வதற்கான யாகங்கள் இந்திரனையும், வருணன் போன்ற மற்ற தேவர்களையும் உத்தேசித்துச் செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட தேவர்களுக்கு குறிப்பிட்ட அக்கினி நாக்குகளில் ஆஹுதிப் பொருட்களை அளிக்க வேண்டும் என்ற நியதி உள்ளது. யாகங்களில் சமர்ப்பிக்கப் படுபவற்றை அக்கினி தேவன் அந்தந்த தேவர்களிடம் கொண்டு சேர்க்கிறான். இதனாலேயே அக்கினி தேவன் புரோகிதன் எனப்படுகிறான்.(அக்னிம் ஈளே புரோஹிதம்- ரிக் வேதம், 1.1.1.)
பொருள்: புரோகிதனாகிய அக்கினியை வணங்குகிறேன்.


அக்கினி தேவன் அவற்றைத் தேவர்களிடம் எப்படிச் சேர்க்கிறான்?

சூரியனின் கிரணங்கள்போல் என்கிறது மந்திரம்.

மழை பொழிவதற்குக் காரணமாக இருக்கிறான் சூரியன். சூட்டினால் கடல்நீர் ஆவியாகி, மேலே சென்று மேகமாகி மழை  பொழிகிறது. கடல்நீரை அப்படியே அவன் மேலே கொண்டு செல்வதில்லை. தனது கிரணங்கள் மூலம் நீரை ஆவியாக்கி மேலே கொண்டு செல்கிறான். அதுபோல், அக்கினி தேவனும் ஆஹுதிப் பொருட்களை அப்படியே கொண்டு செல்லாமல் சாராம்சத்தைத் தேவர்களிடம் சேர்க்கிறான்.

ஆஹுதிப் பொருட்களை மட்டுமல்ல, ஆஹுதிப் பொருட்களை அளித்து யாகம் செய்பவனையும், உரிய காலத்தில் இந்திர லோகத்தில் சேர்க்கிறான் அக்கினி தேவன். ஆஹுதிப் பொருட்களின் சாராம்சத்தைச் சுமந்து செல்வதுபோல், யாகம் செய்தவன் மரணமடைந்தபிறகு, அவனது நுண்ணுடலைத் தாங்கிச் சென்று இந்திர லோகத்தில் சேர்க்கிறான் அவன்.

இந்திர லோகம் என்பது சுகபோகங்களின் எல்லை நிலமாகும். யாகங்களின் மூலம் அவற்றை போகங்கள் அனுபவிக்கப்படுகின்றன என்பது கருத்து.

ஏஹ்யேஹீதி தமாஹுதய: ஸுவர்ச்சஸ:
ஹூர்யஸ்ய ரச்மிபிர்யஜமானம் வஹந்தி
ப்ரியாம் வாசம் அபிவதந்த்யோ ஸர்ச்சயந்த்ய
ஏஷ வ: புண்ய: ஸுக்ருதோ ப்ரஹ்மலோக: (6)

ஸுவர்ச்சஸ: - ஒளிர்கின்ற; ஆஹுதய:- ஆஹுதிகள்; தம் யஜமானம்- அவனை; ஏஹி ஏஹி இதி- வாருங்கள் வாருங்கள் என்று; அர்ச்சயந்த:- வழிபட்டு; ஏஷ:- இந்த; ப்ரஹ்ம லோக:- சொர்க்கம்; வ:- உங்கள்; புண்ய: ஸுக்ருத:- நற்செயல்களின் பலன்; ப்ரியாம்- இனிமையான; வாசம்- வார்த்தைகளை; அபிவதந்த்ய:- பேசி; ஸூர்யஸ்ய- சூரியனின்; ரச்மிபி:- கிரணங்களால்; வவஹந்தி- தாங்கிச் செல்கின்றன.

6. ஒளிர்கின்ற அந்த ஆஹுதிகள், வாருங்கள்,
வாருங்கள் என்று அவனை அழைத்து, வழிபட்டு,
இந்தச் சொர்க்கம் நீங்கள் செய்த நற்செயல்களின்
பலனாக உங்களுக்குக் கிடைத்தது என்று
இனிமையாகப் பேசி சூரியனின் கிரணங்களால்
அவனைத் தாங்கிச் செல்கின்றன.

இன்ன இன்ன யாகங்களுக்கு இன்ன இன்ன உலகங்கள், இன்ன சுகபோகங்கள் என்றெல்லாம் வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த யாகங்களைச் செய்பவனுக்கு அவை வாய்க்கின்றன. உரிமையுடன் அவன் அந்த இன்பங்களையும் சுகபோகங்களையும் அனுபவிக்கலாம். அவன் அளித்த ஆஹுதிகளே ஒளி வடிவில் அவனை வரவேற்று, இனிய மொழிகள் கூறி, உபசரித்து அவனுக்கு அந்த இன்ப உலகங்களை அறிமுகம் செய்து வைப்பதாக கவிதை நயத்துடன் கூறுகிறது உபநிஷதம்.

சுகபோகங்கள் பலவீனமான படகுகள்: 7-10

இவ்வுலக, மறுவுலக சுகங்களுக்கென்று பல்வேறு யாகங்களைக் கூறிய உபநிஷதம், அதே மூச்சில் சுகபோகங்களின் மறுபக்கத்தைத் தெரிவிக்கிறது. இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை. அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தின் ஆற்றலையும் வீணாக்குகின்றன. வாழ்க்கையோ குறுகியது. (1. ச்வோபாவோ மர்த்யஸ்ய யதந்ததைதத் ஸர்வேந்த்ரியாணாம் ஜரயந்தி தேஜ: அபி ஸர்வம் ஜீவிதம் அல்பமேவ- கட உபநிஷதம், 1:1.26.) என்று எச்சரிக்கிறது கட உபநிஷதம்.

குறுகிய இந்த வாழ்வில் நாம் செய்வது முடிக்க வேண்டியவை ஏராளம் உள்ளன; உடல்சுகமும் உள்ளீடற்ற போகங்களுமே எல்லாம் என்று கொண்டு, அவற்றைப் பெறுவதற்காகக் கர்மங்களையும் யாகங்களையும் நாடி வாழ்க்கையை வீணாக்கக் கூடாதென்று தொடரும் 4 மந்திரங்கள் கூறுகின்றன.

ப்லவா ஹ்யேதே அத்ருடா யஜ்ஞரூபா
அஷ்ட்டாதசோக்தம் அவரம் யேஷு கர்ம
ஏதச்சரேயோ யேஸபினந்தந்தி மூடா
ஜரா ம்ருத்யும் தே புனரேவாபி யந்தி (7)

அஷ்ட்டாதச உக்தம்- 18 பேரால் சொல்லப்பட்ட; ஏதே-இந்த; யஜ்ஞரூபா:- யாகங்கள்; அத்ருடா: ஹி- பலவீனமான; ப்லவா:- படகுகள்; யேஷு- எவற்றில்; அவரம்- சாதாரண; கர்ம- கர்மங்கள்; ஏதத்- இது; ச்ரேய- மேலானது; யே- இந்த; அபிநந்தந்தி- மகிழ்கிறார்களோ; மூடா:- மூடர்கள்; ஜரா- மூப்பு; ம்ருத்யும்- மரணம்; தே- அவர்கள்; புன: ஏவ அபி- மீண்டும் மீண்டும்; யந்தி- செல்கிறார்கள்.

7. பதினெட்டு பேரால் செய்யப்படுகின்ற இந்த
யாகங்கள் பலவீனமான படகுகளைப் போன்றவை.
ஏனெனில் இவை சாதாரண கர்மங்களை அடிப்படை
யாகக் கொண்டவை. இவற்றை மேலானதாகக்
கொண்டு மகிழ்கின்ற மூடர்கள் மீண்டும்மீண்டும்
மூப்பிற்கும் மரணத்திற்கும் உள்ளாகிறார்கள்.

அக்னி ஹோத்ரத்தைச் செய்வதற்கு 18 பேர் வேண்டும்- இல்லறத்தான், அவனது மனைவி, 16 புரோகிதர்கள். இத்தகைய கர்மங்கள் பலவீனமான படகுகள். வாழ்க்கைக் கடலைக் கடக்க இவை <உதாவது. இந்தக் கர்மங்கள் மேலும்மேலும் புலனின்பத்தை நாடச் செய்பவை. புலனின்பங்கள் மேலும்மேலும் நம்மை வாழ்க்கைக் கடலில் மூழ்கடிப்பவை; வாழ்க்கைக் கடலைக் கடக்கச் செய்பவை அல்ல.

அவித்யாயாமந்தரே வர்த்தமானா:
ஸ்வயம் தீரா: பண்டிதம் மன்யமானா:
ஜங்கன்யமானா: பரியந்தி மூடா:
அந்தேனவை நீயமானா யதாந்தா: (8)

அவித்யாயாம்- உலகியலின்; அந்தரே- நடுவில்; வர்த்தமானா:- வாழ்பவர்கள்; ஸ்வயம்- தங்களை; தீரா:- அறிவாளிகள்; பண்டிதம்- பண்டிதர்கள்; மன்யமானா:- கருதுபவர்கள்; மூடா:- மூடர்கள்; ஜங்கன்யமானா:- மூப்பிலும் மரணத்திலும் உழல்பவர்கள்; அந்தேன-அந்தா: யதா இவ- குருடர்களைப்போல்; பரியந்தி- உழல்கிறார்கள்.

8. உலகியலின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்
களை அறிவாளிகள் என்றும் பண்டிதர்கள் என்றும்
கருதி மூப்பு, மரணம் ஆகியவற்றின் வசப்பட்டு
உழல்கிறார்கள். குருடனால் வழிகாட்டப்பட்ட
குருடர்களைப்போல் இவர்கள் மீண்டும்மீண்டும்
பிறவிச் சுழலில் உழல்கிறார்கள்.

அவித்யாயாம் பஹுதா வர்த்தமானா
வயம் க்ருதார்த்தா இத்யபிமன்யந்தி பாலா:
யத் கர்மிணோ ந ப்ரவேதயந்தி ராகாத்
தேனாதுரா: க்ஷீணலோகாத் ச்யவந்தே (9)

அவித்யாயாம்- உலகியலில்; பஹுதா-பலவிதமாக; வர்த்தமானா:- உழல்கின்ற; பாலா:- பக்குவமற்றவர்கள்; வயம்- தாங்கள்; க்ருதார்த்தா:- லட்சியத்தை அடைந்தவர்கள்; இதி- என்று; அபிமன்யந்தி-நினைக்கிறார்கள்; யத்- எதனால்; ந ப்ரவேதயந்தி- அறிவதில்லை; கர்மிண:- கர்மம் செய்பவர்கள்; ராகாத்- பற்றினால்; தேன- அதனால்; ஆதுரா:- துயருற்றவர்கள்; க்ஷீணலோகா:- புண்ணியம் தீர்ந்தவர்கள்; ச்யவ்நதே- வீழ்கிறார்கள்.

9. பக்குவமற்ற அவர்கள் <உலகியலில் பலவிதமாக
உழல்கிறார்கள். தாங்கள் லட்சியத்தை அடைந்து
விட்டதாக நினைக்கின்ற அவர்கள் உண்மையை
அறிவதில்லை. அவர்கள் பற்றுடன் கர்மம் செய்
பவர்கள். எனவே துயருற்று, புண்ணியம் தீர்ந்ததும்
சொர்க்கத்திலிருந்து கீழே வீழ்கிறார்கள்.

இஷ்ட்டாபூர்த்தம் மன்யமானா வரிஷ்ட்டம்
நான்யச்சரேயோ வேதயந்தே ப்ரமூடா:
நாகஸ்ய ப்ருஷ்ட்டே தே ஸுக்ருதேஸனுபூத்வா
இமம் லோகம் ஹீனதரம் வா விசந்தி (10)

இஷ்ட்டம்- யாகங்கள்; பூர்த்தம்- நற்பணிகள்; வரிஷ்ட்டம்- மேலானவை; மன்யமானா:- கருதி; அன்யத்- வேறு; ச்ரேய:- மேலானது; ந வேதயந்தே- அறிவதில்லை; ப்ரமூடா:- வடிகட்டின முட்டாள்கள்; தே- அவர்கள்; நாகஸ்ய- சொர்க்கத்தின்; ப்ருஷ்ட்டே- மேல்; ஸுக்ருதே- புண்ணிய பலனை; அனுபூத்வா- அனுபவித்த பிறகு; இமம் - இந்த; லோகம் பூமியையோ; ஹீனதரம் வா- இதைவிட இழிந்ததையோ; விசந்தி- அடைகிறார்கள்.

10. இந்த வடிகட்டின முட்டாள்கள் யாகங்களும்
நற்பணிகளுமே எல்லாம் என்று நினைக்கிறார்கள்.
அதற்கு மேலான எதையும் அவர்கள் அறிவதில்லை.
சொர்க்க லோகங்களில் புண்ணிய பலனை
அனுபவித்த பிறகு அவர்கள் இந்தப் பூமியையோ
இதைவிட இழிந்த உலகங்களையோ அடைகிறார்கள்.

இங்கே இரண்டு வார்த்தைகள் உள்ளன-இஷ்டம், பூர்த்தம். யாகங்கள் போன்ற சடங்குகள் இஷ்டம். சாலைகள் அமைப்பது, மருத்துவமனைகள் கட்டுவது போன்றவை பூர்த்தம். மதச் சடங்குகளும் நற்பணிகள் செய்வதும்தான் மிக உயர்ந்தவை, அதற்குமேல் உயர்ந்தவை எதுவும் இல்லை என்று நினைப்பவர்கள் முட்டாள்களே. அவர்கள் விரும்புவதை அடைகிறார்கள். சொர்க்கங்களுக்குச் செல்கிறார்கள், சுகபோகங்கள் ஒவ்வொன்றையம் அனுபவிக்கிறார்கள். கூடவே துக்கத்தையும் அனுபவிக்கிறார்கள். ஆனால் எதற்கும் முடிவு இருக்கத்தானே வேண்டும்! அவை முடிந்ததும் கீழே வருகிறார்கள், மனிதர்களாகப் பிறக்கிறார்கள், இன்னும் கீழான பிறவியை அடைகிறார்கள் என்று விளக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

துறவு (11-13)

யாகங்கள் மற்றும் நற்செயல்களின் வழியாக நல்ல வாழ்க்கை வாழலாம் என்பதில் ஐயமில்லை. ஆனால் தீமை கலவாத நன்மை என்ற ஒன்று இல்லை. தீமையே சிறிதும் கலவாத நற்செயல் எதுவும் இல்லை. தீயைச் சுற்றிப் புகையிருப்பதுபோல் செயலைச் சுற்றித் தீமையும் இருந்தே தீரும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். நன்மை வேண்டுமானால் தீமையை, இன்பம் வேண்டுமானால் துன்பத்தை, சுகம் வேண்டுமானால் துக்கத்தை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். சுகபோகங்களை நாடுபவனின் வாழ்க்கை சுகத்திற்கும் துக்கத்திற்குமாக ஊசலாடுகிறது. இவை இரண்டும் கொண்டு வருகின்ற அனுபவங்கள் மீண்டும்மீண்டும் பிறவிக்கான காரணம் ஆகின்றன.

எனவேதான் சான்றோர் துறவை நாடினர். துன்பம்  வேண்டாம் என்றால் அதன் இரட்டையான இன்பத்திலிருந்தும் ஒதுங்க வேண்டும். அதனால்தான் அவர்கள் சுகபோகங்களிலிருந்து ஒதுங்கி தவ வாழ்வை நாடினர்.

நமது உண்மையான வாழ்க்கையின் அடிப்படையே துறவுதான் என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஆனால் இந்தத் துறவு உண்மையானதாக, இயல்பானதாக, வாழ்க்கையின் நிறைவாக இருக்க வேண்டும்; போலித்தனமானதாக, வாழ்க்கையிலிருந்து விலகி ஓடும் முயற்சியாக இருக்கக் கூடாது. சுகபோகங்களையும் இன்பங்களையும் முழுமையாக அனுபவித்து, அதன் நிறைவிலிருந்து வருகின்ற தியாகமோ துறவோதான் உண்மையானதாக இருக்கும். போகமில்லாமல் தியாகம் இல்லை. முதலில் அனுபவி, பிறகு தியாகம் வரும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். இல்லாமல், திடீரென்று ஒருநாள் நாடு முழுவதும் சேர்ந்து துறவிகள் ஆகிவிட்டால் இங்கும் இல்லை, அங்கும் இல்லை என்றாகிவிடும் என்று எச்சரிக்கிறார் அவர்.

இந்தக் கருத்தை வலியுறுத்துவத்காகவே உபநிஷதங்களில் சுகபோகங்களை அனுபவிப்பதற்கான பல்வேறு வழிமுறைகளைக் கூறுகின்ற பகுதிகளும் அதுபோலவே தியாகத்தை வலியுறுத்துகின்ற பகுதிகளும் காணப்படுகின்றன என்று கூறுகிறார் சுவாமி பூதேஷானந்தர். அதனால் தான் பல்வேறு சடங்குகளும் யாகங்களும் கர்மங்களும் தேவை என்று கூறப்படுகின்ற அதே வேளையில் அவை பலவீனமான படகு (7) என்று எச்சரிப்பதையும், தவ வாழ்க்கையே உயர்ந்தது (11) என்று கூறுவதையும் இங்கே காண்கிறோம்.

தவமே பலமான படகு:

தப: ச்ரத்தே யே ஹ்யுபவஸந்த்யரண்யே
சாந்தா வித்வாம்ஸோ பைக்ஷ்யசர்யாம் சரந்த:
ஸூர்யத்வாரேண தே விரஜா: ப்ரயாந்தி
யத்ராம்ருத: ஸ புருஷோ ஹி அவ்யயாத்மா (11)

சாந்தா:- புலக்கட்டுப்பாடு உடையவர்கள்; வித்வாம்ஸ: -அறிவொளி பெற்ற; பைக்ஷ்யசர்யாம்- பிச்சையேற்கும் வாழ்க்கை; சரந்த:- வாழ்பவர்கள்; அரண்யே- காட்டில்; யே-யார்; தப: ச்ரத்தே- சிரத்தையுடன் கூடிய தவ வாழ்வில்; உபவஸந்தே- வாழ்கிறார்களோ; தே-அவர்கள்; விரஜா:- வினைப்பயன்கள் நீங்கி; யத்ர-எங்கே; அம்ருத:- மரணமற்ற; ஸ:- அந்த; அவ்யயாத்மா- அழிவற்ற; புருஷ:- இறைவன்; ஸூர்ய த்வாரேண- உத்தராயண பாதையில்; ப்ரயாந்தி- அடைகிறார்கள்.

11. புலக்கட்டுப்பாடு உடைய, அறிவொளி பெற்ற
சான்றோர் பிச்சையேற்கும் வாழ்விலோ, காட்டில்
சிரத்தையுடன் கூடிய தவ வாழ்க்கை வாழ்வதிலோ
ஈடுபடுகிறார்கள். அவர்களின் வினைப்பயன்கள்
அகல்கின்றன. அவர்கள் உ<த்தராயண பாதை
வழியாக மரணமற்ற, அழிவற்ற இறைவனை
அடைகிறார்கள்.

முதல் அத்தியாயத்தில் கண்ட சாதாரண அறிவைப் பற்றியபடி உலகியல் வாழ்க்கைக்கான கர்மங்களில் ஈடுபடுபவர்கள் உலக இன்பங்களில் <உழல்கிறார்கள். சாதாரண அறிவை விட்டு, உயர் அறிவை நாடுபவர்கள் இறைவனை அடைகிறார்கள்.

உத்தராயண பாதை எது?

சூரியக் கிரணங்கள்.

இந்த மந்திரத்தை விளக்கும்போது, உலகைத் துறந்து, புலன்களை அடக்கக் கற்றுக் கொண்டவர்கள் காடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் இறந்ததும் சூரியக் கிரணங்களின் வழியாகச் சென்று பரம்பொருள் வாழும் உலகை அடைகிறார்கள் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

முதற்படிகள்: 12-13

தவ வாழ்க்கை அல்லது துறவு வாழ்க்கையின் அடிப்படைகள் பற்றி இரண்டு மந்திரங்கள் பேசுகின்றன.

பரீக்ஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ
நிர்வேதமாயாத் நாஸ்த்யக்ருத: க்ருதேன
தத்விஜ்ஞானார்த்தம் ஸ குருமேவாபிகச்சேத்
ஸமித்பாணி: ச்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்ட்டம் (12)

ப்ராஹ்மண:- சான்றோன்; கர்மசிதான்- செயல்களின் பலனாகப் பெற்ற; லோகான்- உலக அனுபவங்களை; பரீக்ஷ்ய- ஆராய்ந்து; க்ருதேன- கர்மங்களால்; அக்ருத:- இறைவன்; ந அஸ்தி- கிடைக்க மாட்டார்; நிர்வேதம்- பற்றின்மை; ஆயாத்- பெற்று; தத்- அவரை; விஜ்ஞானார்த்தம்- அறிவதற்காக; ஸ:- அவன்; ஸமித் பாணி: - கையில் சமித்துடன்; ச்ரோத்ரியம்- வேதங்களை உணர்ந்த; ப்ரஹ்மநிஷ்ட்டம்- இறைவனில் நிலைபெற்ற; குரும் ஏவ- குருவையே; அபிகச்சேத்- நாட வேண்டும்.

12. சான்றோன் ஒருவன், தான் செயல்களின்
பலனாகப் பெற்ற உலக அனுபவங்களை முதலில்
ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் விளைவாக,
கர்மங்களால் இறைவனை அடைய முடியாது,
பற்றின்மையால்தான் முடியும் என்பதை உணர்ந்து
பற்றின்மை பெற வேண்டும். பிறகு, இறைவனை
அறிவதற்காக, வேதங்களை உணர்ந்த இறைவனில்
நிலைபெற்ற குருவையே கையில் சமித்துடன் நாட
வேண்டும்.

தவ வாழ்க்கை அல்லது துறவுடு வாழ்க்கைக்கான ஐந்து முக்கியப் படிகளை இந்த மந்திரம் கூறுகிறது. அவை நல்லொழுக்கம், ஆராய்ச்சி, பற்றின்மை, தெளிவான நோக்கம், குருவை நாடுதல்.

நல்லொழுக்கம்: தவ வாழ்க்கையை ஏற்பதற்கு முதலில் வேண்டியது நல்லொழுக்கத்தில் நிலைபெற்ற வாழ்வு. ஆன்மீகத்திற்கு அடைப்படை நல்லொழுக்கம். முதல் தேவை ஒழுக்கமான வாழ்க்கை. தெய்வங்கள். கீழே இறங்கி வர வேண்டும் என்று அத்தகையவன் விரும்பினால் அவர்கள் கீழே இறங்கி வந்து அவனுக்குக் காட்சி கொடுப்பார்கள். நமது மன நூல்கள் மற்றும் தத்துவ நூல்களின் சாரம் இதுவே: பூரணமான நல்லொழுக்க வாழ்க்கை என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

இத்தகைய வாழ்க்கையில் நிலைபெற்றவனாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்க சான்றோன் (ப்ராஹ்மண:) என்ற வார்த்தை குறிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி: இன்னொருவர் துறவியாக வாழ்கிறார் என்பதற்காகவோ, நூல்களில் எழுதப்பட்டுள்ளதாகவோ துறவு வாழ்க்கையை நாடக் கூடாது. <உலக இன்பங்களில் நாட்டம் எனக்குத் துளிகூட இல்லையா? என்பதைத் தனக்குத் தானே ஆராய வேண்டும். இல்லை என்பது முற்றமுடிந்த பதிலாக இருக்குமானால் உலக இன்பங்களுக்காக, சுகபோகங்களுக்ககாகச் செய்யப்படுகின்ற கர்மங்கள், செயல்கள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். ஏனெனில் அவை நம்மை இறைநெறியில் செலுத்தாமல் மேலும் மேலும் பந்தங்களுக்கு உள்ளாக்குகின்றன.

பற்றின்மை: ஆனால் செயல் புரியாமலோ, கர்மங்களில் ஈடுபடாமலோ யாராலும் இருக்க முடியாது. எனவே தவிர்க்க முடியாத அவற்றைப் பற்றின்றிச் செய்ய வேண்டும்.

தெளிவான நோக்கம்: தவ வாழ்க்கை வாழ்வதும், துறவை நாடுவதும் இறைவனை அறிவதற்காக என்ற நோக்கம் எப்போதும் மனத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இந்த நோக்கமின்றி தவங்களில் ஈடுபடுபவர்கள் அசுர இயல்பினர் என்று கீதை பாகுபடுத்துகிறது. எந்தச் செயலில் ஈடுபடும்போதும், அது இறைவனுக்காக, இறைவனை அறிவதற்காக என்ற நோக்கம் மனத்தில் பின்னணியில் தெளிவாக இருக்க வேண்டும்.

குருவை நாடுதல்: ஆன்மீக வளர்ச்சிக்கு, நூல்களிலிருந்து அனேகமாக ஒன்றுமே பெற முடியாது. நூல்களைப் படிக்கும்போது, சிலவேளைகளில், நம் ஆன்மீக வளர்ச்சிக்கு ஏதோ உதவி கிடைப்பது போன்றதொரு மனமயக்கம் ஏற்படுகிறது. ஆராய்ந்து பார்த்தால் நம் அறிவுக்கு <உதவி கிடைத்ததே தவிர ஆன்மாவிற்கு அல்ல என்பது தெரிய வரும். ...நமக்குத் தேவைப்படும் தூண்டுதலை நூல்கள் தர முடியாது. ...ஆன்ம வளர்ச்சிக்கான அந்தத் தூண்டுதல் இன்னொருவரிடமிருந்து தான் வர வேண்டும். யாரிடமிருந்து இந்தத் தூண்டுதல் வருகிறதோ அவரே குரு என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

குரு இறையனுபூதி பெற்றவராக, இறைவனில் நிலைபெற்றவராக இருக்க வேண்டும். அத்தகைய ஒருவரிடமிருந்து மட்டுமே இறைவனை அறிவதற்கான தூண்டுதலை மற்றவர்கள் பெற முடியும் என்று இந்த மந்திரம் சுட்டிக்காட்டுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இறைவனில் நிலைபெற்ற ஒருவரிடமிருந்து அந்தத் தூண்டுதலை எப்படிப் பெறுவது? அவருக்குச் சேவைகள் செய்வதன்மூலம். வணங்கியும், கேள்விகள் கேட்டும், பணிவிடை செய்தும் (2. தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா- கீதை, 4.34.) அவற்றைப் பெற வேண்டும் என்று கீதை கூறுகிறது.

வேத காலத்தில் யாகங்கள் முக்கியமான வழிபாட்டு முறையாக இருந்தன. எனவே அதற்குத் தேவையான விறகைத் (சமித்) தட்சிணையாக மாணவர்கள் கொண்டு சென்றனர். சமித்தைக் கொண்டு செல்வது மாணவனின் எளிமையையும் பணிவையும் காட்டுகிறது.

தஸ்மை ஸ வித்வானுபஸன்னாய ஸம்யக்
ப்ரசாந்த சித்தாய சமான்விதாய
யேனாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம்
ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்மவித்யாம் (13)

ஸ:- அந்த; வித்வான்- குரு; ஸம்யக்- நன்றாக; உபஸன்னாய- அணுகிய; ப்ரசாந்த சித்தாய- அமைதியுற்ற மனம் கொண்ட; சம அன்விதாய- புலக் கட்டுப்பாடு உடைய; தஸ்மை- அவனுக்கு; யேன- எதனால்; அக்ஷரம்- அழிவற்ற; ஸத்யம்- உண்மை வடிவான; புருஷம்- இறைவனை; வேத- அறிய முடியுமோ; தாம்- அந்த; ப்ரஹ்மவித்யாம்- இறைநெறியை; தத்வத:- புரிந்து கொள்ளும் வகையில்; ப்ரோவாச- கூற வேண்டும்.

13. நன்றாக அமைதியுற்ற மனமும், புலக்கட்டுப்
பாடும் <<உடைய மாணவன் குருவை அணுகும்போது,
அழிவற்ற, உண்மை வடிவான இறைவனை அறி
வதற்கான இறைநெறியை அவன் புரிந்துகொள்ளும்
வகையில் குரு உபதேசிக்க வேண்டும்.

இதி முண்டகோபநிஷதி ப்ரதம முண்டகே த்விதீய: கண்ட:
----------------

2:1 ஜோதியும் சுடரும்!

முண்டக உபநிஷதத்தின் இரண்டாம் பகுதி இங்கே ஆரம்பிக்கிறது. ஆழ்ந்த சிந்தனைக்குரிய பகுதி இது.

இந்த அத்தியாயத்தில் ஆழ்ந்த சிந்தனை பற்றி கூறப்படுகிறது. அடுத்த அத்தியாயத்தில் காணப்படுகின்ற தியான முறைகளுக்கு இந்த ஆழ்ந்த சிந்தனை ஒரு சிறந்த அடித்தளமாக அமைகிறது.

அது என்ன சிந்தனை?

நாம் தெய்வீகமானவர்கள் என்ற சிந்தனைதான் அது.

சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:

விதி என்று எதுவும் கிடையாது. நமது வாழ்க்கை நமது முன்வினைப் பயனின், நமது கர்மத்தின் விளைவு. இவ்வாறு நாமே நமது கர்மத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றால், அதை அழிக்கவும் நம்மால் முடியும் என்பது உண்மைதானே?

வண்ணத்துப் புழு தன் உடலிலிருந்து சுரக்கின்ற பொருளால் தன்னைச் சுற்றித் தானே கூடமைத்துக் கொண்டு, அதில், தானே சிறைப்படுகிறது. அங்கே கிடந்தவாறு அது அழலாம். கதறலாம், ஓலமிடலாம். ஆனால் அதன் உதவிக்கு யாரும் வரமாட்டார்கள். இறுதியில் அதுவே ஞானம் பெறுகிறது, அழகிய வண்ணத்துப் பூச்சியாக வெளிவருகிறது. நமது தளைகளைப் பொறுத்தவரையிலும் இதே விஷயம்தான். யுக யுகங்களாக நாமும் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருகிறோம். இப்போது துன்பத்தை உணர்கிறோம், நாம் கட்டுண்டிருப்பதை எண்ணி அழுது புரள்கிறோம். ஆனால் அழுவதாலும் புரள்வதாலும் எந்த பயனும் இல்லை. இந்தத் தளைகளை <<உடைப்பதில் நாம் முனைந்து ஈடுபட வேண்டும்.

எல்லா தளைகளுக்கும் முக்கியக் காரணம் அறியாமை. மனிதன் இயல்பிலேயே கொடியவன் அல்ல, ஒருபோதும் அல்ல. அவன் இயல்பிலேயே தூயவன், முற்றிலும் புனித மானவன். ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவன். நீ காண்கின்ற ஒவ்வொரு மனிதனும் இயல்பிலேயே கடவுள்தான். இந்த இயல்பு அறியாமையால் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறியாமையே நம்மைக் கட்டுண்டவர்களாக ஆக்கியிருக்கிறது. எல்லா துன்பங்களுக்கும் அறியாமையே காரணம். எல்லா கொடுமைகளுக்கும் அறியாமையே காரணம். அறிவு உலகை நல்லதாக்குகிறது. அறிவு எல்லா துன்பங்களையும் அறியாமையே காரணம். எல்லா கொடுமைகளுக்கும் அறியாமையே காரணம். அறிவு <உலகை நல்லதாக்குகிறது. அறிவு எல்லா துன்பங்களையும் ஒழிக்கிறது, அறிவு நம்மைச் சுதந்திர்களாக்குகிறது. எந்த அறிவு? வேதியியலா? இயற்பியலா? வானஇயலா? பூமியியலா? அவை எல்லாம் நமக்குச் சிறிது உதவுகின்றன, மிகச்சிறிது உதவுகின்றன. ஆனால் முக்கியமான அறிவு என்பது உங்கள் இயல்பே. உன்னை அறிந்துகொள். நீங்கள் உண்மையில் யார், உங்கள் உண்மை அறிந்துகொள். நீங்கள் <உண்மையில் யார், உங்கள் உண்மை இயல்பு எது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அந்த எல்லையற்ற இயல்பை உங்களுள் உணர வேண்டும். அப்போது தளைகளெல்லாம் நொறுங்கிவிடும்.

நாம் எப்படி தெய்வீகமானவர்கள்? ஏன் தெய்வீகமானவர்கள்?

நாம் தெய்வத்திடமிருந்து தோன்றியவர்கள், தெய்வத்தின் குழந்தைகள். தெய்வம் என்னும் மாபெரும் ஜோதியிலிருந்து தோன்றிய சுடர்கள் நாம் (1). பாலில் செய்த பண்டங்கள் அனைத்திலும் பாலின் தன்மை இருப்பது போல் தெய்வத்திலிருந்து தோன்றிய நம்மிடமும் தெய்வீகம் உள்ளது, நாம் தெய்வீகமானவர்கள்.

நாம் மட்டுமல்ல, உயிரினங்கள் மட்டுமல்ல; கடவுளிடமிருந்து தோன்றியதான இந்தப் படைப்பிலுள்ள ஒவ்வொன்றும்- மரமும் செடியும், மண்ணும் விண்ணும், கடலும் மலையும்- எல்லாம் தெய்வீகம்.

நாம் தெய்வீகமானவர்கள்:

ததேதத் ஸத்யம்- யதா ஸுதீப்தாத் பாவகாத்
விஸ்ஃபுலிங்கா: ஸஹஸ்ரச: ப்ரபவந்தே ஸரூபா:
ததாஸக்ஷராத் விவிதா: ஸோம்ய பாவா:
ப்ரஜாயந்தே தத்ர சைவாபி யந்தி (1)

தத் ஏதத்- இந்த இது; ஸத்யம்- உண்மை; யதா- எப்படி; ஸுதீப்தாத்- கொழுந்துவிட்டு எரிகின்ற; பாவகாத்- நெருப்பிலிருந்து; ஸஹஸ்ரச:- ஆயிரக்கணக்கான; விஸ்ஃபுலிங்கா:- நெருப்புப் பொறிகள்; ஸரூபா:- அதே இயல்புடைய; ப்ரபவந்தே- உண்டாகின்றனவோ; ததா- அவ்வாறு; ஸோம்ய- இனியவனே; அக்ஷராத்- அழிவற்ற இறைவனிலிருந்து; விவிதா:- பலவிதமான; பாவா:- உயிரினங்கள்; ப்ரஜாயந்தே- உண்டாகின்றன; தத்ர ச ஏவ- அங்கேயே; அபியந்தி- ஒடுங்குகின்றன.

1. இனியவனே! இது உண்மை. கொழுந்துவிட்டு
எரிகின்ற நெருப்பிலிருந்து அதே இயல்புடைய
ஆயிரக்கணக்கான நெருப்புப் பொறிகள் எவ்வாறு
உண்டாகின்றனவோ, அவ்வாறே அழிவற்ற இறைவனி
லிருந்து பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன.
அவரிலேயே ஒடுங்கவும் செய்கின்றன.

இறைவன் என்னும் மாபெரும் ஜோதியிலிருந்து தோன்றிய சுடர்கள் நாம். அதாவது நாம் தெய்வீக அம்சம் உடையவர்கள், தெய்வத்தின் குழந்தைகள். இதன் பொருள் என்ன? இது நமக்குத் தரும் செய்தி என்ன? சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:

தான் எதற்கும் உபயோகமற்றவன் என்று இரவு பகலாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவனிடமிருந்து எந்த நன்மையும் பிறக்காது. நான் வேதனைக்குரியவன், கீழானவன், எதற்கும் பயனற்றவன் என்று இரவும் பகலும் நினைத்துக் கொண்டிருந்தால், அவன் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவனாகத்தான் ஆகிறான். ஆம், என்னால் எதுவும் முடியும் என்று நீங்கள் நினைத்தால் அத்தகைய ஒருவர் ஆவீர்கள். மாறாக நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று கூறியவாறு அல்லும் பகலும் அதையே உருப்போட்டுக் கொண்டிருந்தால் அப்படியே எதற்கும் பயனற்றுப் போய் விடுவீர்கள். நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டியதொரு பேருண்மை இது. நாம் எல்லாம் வல்ல இறைவனின் பிள்ளைகள். எல்லையற்றதான தெய்வீக நெருப்புப் பிழம்பின் பொறிகள் நாம், நாம் எப்படி பூஜ்யங்கள் ஆக முடியும்? நாமே எல்லாம். எதைச் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். நம்மால் எதையும் செய்ய முடியும்.

இறைவன் (2-10)

இறைவன் என்ற மாபெரும் ஜோதியிலிருந்து தோன்றிய சுடர்கள் நாம். அந்த இறைவனைப் பற்றிய சிந்தனை தொடங்குகிறது.

இறைவன் ஒளிமயமானவர்:

திவ்யோ ஹ்யமூர்த்த: புருஷ: ஸாபாஹ்யாப்யந்தரோ ஹ்யஜ:
அப்ராணோ ஹ்யமனா: சுப்ரோ ஹ்யக்ஷராத் பரத: பர: (2)

திவ்ய:- ஒளிமயமானவர்; அமூர்த்த:- உருவமற்றவர்; புருஷ:- இதயத்தில் உறைபவர்; ஸபாஹ்யாப்யந்தர:- அகமும் புறமும் நிறைந்தவர்; அஜ:- பிறப்பற்றவர்; அப்ராண:- பிராணன் இல்லாதவர்; அமனா:- மனம் இல்லாதவர்; சுப்ர:- தூயவர்; பரத:- மேலானவர்; அக்ஷராத்-பிரகிருதியைவிட; பர:- உயர்ந்தவர்.

2. இறைவன் ஒளிமயமானவர், உருவமற்றவர்,
இதயத்தில் உறைபவர், அகமும் புறமும் நிறைந்தவர்,
பிறப்பற்றவர், பிராணன் இல்லாதவர், மனம்
இல்லாதவர், தூயவர், மேலானவர், பிரகிருதியைவிட
உயர்ந்தவர்.

பிராணன், மனம் போன்றவை படைப்பில் உள்ளவை. இறைவனோ படைப்புக்கு முந்தியவர். எனவே அவர் பிராணனோ மனமோ இல்லாதவர் என்று கூறப்படுகிறார்.

அக்ஷரம் அல்லது பிரகிருதி என்பது படைப்புக்கு முந்தைய நிலை. படைப்பின்போது தோற்றத்திற்கு வருகின்ற அனைத்தும் அதற்கும் முன்பு தோன்றாநிலையில் அல்லது ஒடுக்கநிலையில் இறைவனில் உள்ளன. இந்தத் தோன்றா நிலையே பிரகிருதி. இறைவன் அதற்கும் மேலானவர்.

இறைவனே அனைத்திற்கும் காரணம்.

ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மன: ஸர்வேந்த்ரியாணி ச
கம் வாயுர்ஜ்யோதிராப: ப்ருதிவீ விச்வஸ்ய தாரிணீ (3)

ஏதஸ்மாத்- அவரிலிருந்து; ப்ராண:- பிராணன்; மன:- மனம்; ஸர்வேந்த்ரியாணி ச- எல்லா புலன்களும்; கம்- வெளி; வாயு:- காற்று; ஜ்யோதி:- நெருப்பு; ஆப:- நீர்; விச்வஸ்ய- அனைத்தையும்; தாரிணீ- தாங்குகின்ற; ப்ருதிவீ- பூமி; ஜாயதே- தோன்றின.

3. பிராணன், மனம், புலன்கள், வெளி, காற்று
நெருப்பு, நீர், அனைத்தையும் தாங்குகின்ற பூமி
எல்லாம் அந்த இறைவனிலிருந்தே தோன்றின.

இறைவனே பிரபஞ்சமாக உள்ளார்:

இறைவனிலிருந்து அனைத்தும் தோன்றின. தோன்றிய அனைத்திலும் அவர் நிறைந்துள்ளார்.

அக்னிமூர்தா சக்ஷுஷீ சந்த்ரஸூர்யௌ
திச: ச்ரோத்ரே வாக் விவ்ருதாச்ச வேதா:
வாயு: ப்ராணோ ஹ்ருதயம் விச்வஸ்ய
பத்ப்யாம் ப்ருதிவீ ஹ்யேஷ ஸர்வபூதாந்தராத்மா (4)

அஸ்ய- அவரது; மூர்தா- தலை; அக்னி:- சொர்க்கம்; சக்ஷுஷீ- கண்கள்; சந்த்ர ஸூர்யௌ- சந்திர சூரியர்கள்; ச்ரோத்ரே- காதுகள்; திச:- திசைகள்; விவ்ருதா:- வெளிப்பட்ட; வாக்- வாக்கு; வேதா:- வேதங்கள்; ப்ராண:- பிராணன்; வாயு:- காற்று; ஹ்ருதயம்-மனம்; விச்வம்- பிரபஞ்சம்; பத்ப்யாம்-கால்கள்; ப்ருதிவீ- பூமி; ஏஷ:- அவர்; ஸர்வபூத அந்தராத்மா ஹி- எல்லா உயிர்களின் உள்ளும் உறைபவர்.

4. அந்த இறைவனுக்கு சொர்க்கம் தலையாக அமைந்துள்ளது.
சந்திர சூரியர்கள், கண்கள்; திசைகள், காதுகள்; வெளிப்பட்ட வாக்கு,
வேதங்கள்; காற்று, பிராணன்; பிரபஞ்சம், மனம்; பூமி, கால்கள். அந்த
இறைவனே எல்லா உயிர்களின் உள்ளும் உறைகிறார்.

இறைவனிலிருந்து வந்தவர்கள் நாம்:

நாம் தெய்வக் குழந்தைகள் என்று 2:1.1-இல் கண்டோம். நாம் தெய்வத்திடமிருந்தே வந்தால்தான் தெய்வக் குழந்தைகள் என்று இந்த மந்திரம் காரணம் காட்டி விளக்குகிறது.

தஸ்மாதக்னி: ஸமிதோ யஸ்ய ஸூர்ய:
ஸோமாத் பர்ஜன்ய ஓஷதய: ப்ருதிவ்யாம்
புமான் ரேத: ஸிஞ்சதி யோஷிதாயாம்
பஹ்வீ: ப்ரஜா: புருஷாத் ஸம்ப்ரஸூதா: (5)

தஸ்மாத்- அவரிடமிருந்து; அக்னி:- வானுலகம்; யஸ்ய-யாருடைய; ஸமித:- எரிபொருள்; ஸூர்ய:- சூரியன்; ஸோமாத்- சந்திரனிலிருந்து; பர்ஜன்ய:- மேகங்கள்; ப்ருதிவ்யாம்- பூமியில் வளர்கின்ற; ஓஷதய:- செடி கொடிகள்; புமான்- ஆண்; யோஷிதாயாம்- பெண்ணிடம்; ரேத:- விந்துவை; ஸிஞ்சதி- விடுகிறான்; புருஷாத்- இறைவனிலிருந்து; பஹ்வீ:- பலவிதமான; ப்ரஜா:- உயிரினங்கள்; ஸம்ப்ரஸூதா:- உண்டாகின்றன.

5. அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டா
யிற்று. சூரியன் அந்த வானுலகை ஒளிரச் செய்
கிறான். சந்திரனிலிருந்து மேகங்கள் உண்டாயின.
பூமியில் வளர்கின்ற செடி கொடிகள் மேகங்களின்
காரணமாக உண்டாயின. ஆண் பெண்ணிடம்
விந்துவை விடுவதன்மூலம் உயிர்கள் தோன்றின.
இவ்வாறு அந்த இறைவனிலிருந்தே பலவிதமான
உயிரினங்கள் உண்டாகின்றன.

உயிரினங்கள் எவ்வாறு உண்டாகின்றன, அதாவது கடவுள் எவ்வாறு நமக்கு ஆதி காரணமாகிறார் என்பதை இந்த மந்திரம் கூறுகிறது.

இறைவனிலிருந்து உயிரினங்கள் ஐந்து படிகளாகத் தோன்றுகின்றன.

1. இறைவனிலிருந்து வானுலகம் தோன்றியது.

2. வானுலகில் சஞ்சரிப்பவர்களுள் ஒருவனான சந்திரனிலிருந்து மேகங்கள் தோன்றுகின்றன.

3. மேகங்கள் பெய்கின்ற மழை காரணமாக பூமியில் செடிகொடிகள் முளைக்கின்றன.

4. பூமியிலிருந்து விடுபட்ட <உயிர்கள் மழை வழியாக செடி கொடிகளில் புகுந்து, அதை <உண்கின்ற ஆண்களிடம் தங்குகின்றன.

5. அந்த உயிர்கள் ஆணின் விந்து வழியாகப் பெண்ணிடம் சென்று மீண்டும் உயிரினங்களாகப் பிறக்கின்றன.

இந்த ஐந்து படிகளும் ஐந்து அக்கினிகளாகக் கொள்ளப்பட்டு, பஞ்சாக்கினி வித்யை என்று சாந்தோக்ய உபநிஷதத்தி<லும் (5:7.1) பிருஹதாரண்யக <உபநிஷதத்திலும் (6:2.9) விரிவாகப் பேசப்படுகிறது.

வாழும் வழியும் இறைவனே: 6-8

மனிதனும், பூமியில் வாழும் மற்ற உயிரினங்களும், தேவர்கள் போன்ற விண்ணுலகினரும் இறைவனிலிருந்தே தோன்றினர். அவர்கள் வளர்வதற்குத் தேவையான <உணவுப் பொருட்கள், மனம் வளர்வதற்கான சிரத்தை முதலிய பண்புகள், வேதங்கள், மந்திரங்கள் அனைத்தும் அவரிடமிருந்தே தோன்றியதைத் தொடரும் 3 மந்திரங்கள் கூறுகின்றன.

தஸ்மாத் ரிச: ஸாம யஜூம்ஷி தீக்ஷா
யஜ்ஞாச்ச ஸர்வே க்ரதவோ தக்ஷிணாச்ச
ஸம்வத்ஸரச்ச யஜமானச்ச லோகா:
ஸோமோ யத்ர பவதே யத்ர ஸூர்ய: (6)

தஸ்மாத்- அவரிலிருந்து; ரிச:- வேதங்கள்; ஸாம- பாடல்கள்; யஜூம்ஷி- மந்திரங்கள்; தீக்ஷா- சடங்குகள்; யஜ்ஞா:- வேள்விகள்; ஸர்வே- எல்லா; க்ரதவ:- கர்மங்கள்; தக்ஷிணா:- தட்சிணைகள்; ஸம்வத்ஸர:- காலம்; யஜமான:- ஸோம:- சந்திரன்; யத்ர- எங்கே; பவதே- புனிதப்படுத்துகிறானோ; யத்ர- எங்கே; ஸூர்ய:- சூரியன்.

6. வேதங்கள், பாடல்கள், மந்திரங்கள், சடங்குகள்,
வேள்விகள், பல்வேறு கர்மங்கள், தட்சிணைகள்,
காலம், வேள்விகளைச் செய்பவர்கள், சந்திரன்
வளர்க்கவும் சூரியன் தகிக்கவும் செய்கின்ற
உலகங்கள் ஆகிய அனைத்தும் அந்த இறைவ
னிலிருந்தே தோன்றின.

தஸ்மாச்ச தேவா பஹுதா ஸம்ப்ரஸூதா:
ஸாத்யா மனுஷ்யா: பசவோ வயாம்ஸி
ப்ராணபானென வ்ரீஹியவௌ தபச்ச
ச்ரத்தா ஸத்யம் ப்ரஹ்மசர்யம் விதிச்ச (7)

தஸ்மாத் - அவரிலிருந்து; பஹுதா- பல்வேறு; தேவா:- தேவர்கள்; ஸம்ப்ரஸூதா:- தோன்றியனர்; ஸாத்யா:-சாத்யர்கள்; மனுஷ்யா:- மனிதர்கள்;  பசவ:- மிருகங்கள்; வயாம்ஸி- பறவைகள்; ப்ராண அபானௌ- உள்மூச்சு வெளிமூச்சு; வ்ரீஹி யவௌ- நெல், பார்லி; தப:- தவம்; ச்ரத்தா- சிரத்தை; ஸத்யம்- உண்மை; ப்ரஹ்மசர்யம்- சுயக்கட்டுப்பாடு; விதி:- கடமைகள்.

7. பல்வேறு தேவர்கள், சாத்யர்கள், மனிதர்கள்,
மிருகங்கள், பறவைகள், உள்மூச்சு, வெளிமூச்சு,
நெல், பார்லி, தவம், சிரத்தை, உண்மை, சுயக்
கட்டுப்பாடு, கடமைகள் எல்லாம் அந்த இறைவனி
லிருந்தே தோன்றின.

சாத்யர்கள் பன்னிருவர். இவர்கள் தேவர்களில் ஒருபிரிவினர்; மற்ற தேவர்களைவிட உயர்ந்தவர்கள்.

ஸப்த ப்ராணா: ப்ரபவந்தி தஸ்மாத்
ஸப்தார்ச்சிஷ: ஸமித: ஸப்த ஹோமா:
ஸப்த இமே லோகா யேஷு சரந்தி ப்ராணா
குஹாசயா நிஹிதா: ஸப்த ஸப்த (8)

தஸ்மாத்- அவரிடமிருந்து; ஸப்த: ப்ராணா:- ஏழு புலன்கள்; ஸப்த: அர்ச்சிஷ:- ஏழு சுடர்கள்; ஸமித:- எரிபொருட்கள்; ஸப்த: ஹோமா:- ஏழு ஆஹுதிகள்; யேஷு- எங்கே; ப்ராணா:- பிராணன்கள்; குஹாசயா- இதயக்குகையில்; சரந்தி- செயல்படுகிறதோ; இமே- இந்த; ஸப்த: லோகா:- ஏழு உலகங்கள்; ப்ரபவந்தி- தோன்றுகின்றன; ஸப்த ஸப்த- ஏழு ஏழாக.

8. அந்த இறைவனிடமிருந்தே ஏழு புலன்கள், ஏழு
சுடர்கள், ஏழு எரிபொருட்கள், ஏழு ஆஹுதிகள்
எல்லாம் தோன்றின. இதயக் குகையில் பிராணன்
செயல்படுகின்ற உயிரினங்கள் வாழ்கின்ற ஏழு
<உலகங்களும் அவரிடமிருந்தே தோன்றின.
அனைத்தையும் ஏழுஏழாக அவரே படைத்தார்.

ஏழு புலன்கள்: கண்கள் 2, காதுகள், 2, நாசித் துவாரங்கள் 2, நாக்கு 1.

ஏழு சுடர்கள்: சுடர் என்றால் ஒளி. ஒளி என்பது அறிதலைக் குறிக்கிறது. ஒவ்வொரு புலனும் அதற்குரிய பொருளை அனுபவிக்கும்போது அதனை அறிகிறது. உதாரணமாக நாக்கு ஒன்றைச் சுவைக்கும்போது அந்தச் சுவையை அறியவும் செய்கிறது. இந்த அறிவும் தன்மை இங்கே சுடர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழு எரிபொருட்கள்: ஏழு புலன்களுக்கும் உரிய பொருட்களே எரிபொருட்கள். கண்கள் காண்பதற்கான பொருட்கள், காதுகள் கேடப்தற்கான விஷயங்கள் போன்றவை இவை.

ஏழு அஹுதிகள்: புலனறிவு இங்கே ஓர் ஆஹுதியாகக் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கை என்ற மாபெரும் வேள்வியில் புலன்கள் ஒவ்வொன்றும் தங்கள் செயல்பாட்டின்மூலம், அதாவது கண்கள் காண்பதன்மூலம், காதுகள் கேட்பதன் மூலம் ஆஹுதிகளை அளித்துக் கொண்டிருக்கின்றன.

ஏழு <உலகங்கள்: ஏழு புலன் மையங்கள். கண், காது, மூக்கு என்று புறத்தில் நாம் காண்பவை வெறும் வாசல் மட்டுமே. இந்த வாசல்களின் வழியாகச் செயல்படுகின்ற உண்மையான புலன்கள் உள்ளே உள்ளன; இதயக்குகையில் உள்ளன.

இதயக்குகை என்பது பொருள் பொதிந்த சொல்லாகும். இதயம் என்றால் புத்தி. புத்தியிலுள்ள பல்வேறு மையங்களே நமது புலனறிவைக் கட்டுப்படுத்துகின்றன.

இயற்கையின் தலைவர் இறைவன் 9-10:

அத: ஸமுத்ரா கிரயச்ச ஸர்வே: ஸஸ்மாத்
ஸ்யந்தந்தே ஸிந்தவ: ஸர்வரூபா:
அதச்ச ஸர்வா ஓஷதயோ ரஸச்ச
யேனைஷ பூதைஸ்திஷ்ட்டதே ஹ்யந்தராத்மா (9)

அத:- அவரிடமிருந்து; ஸமுத்ரா- கடல்கள்; கிரய:- மலைகள்; ஸர்வே- எல்லாம்; அஸ்மாத்- அவரிடமிருந்து; ஸர்வரூபா:- பல்வேறு; ஸிந்தவ:- நதிகள்; ஸ்யந்தந்தே- பெருகின்றன; அத: ச- அவரிடமிருந்தே; ஸர்வா:- எல்லாம்; ஓஷதய:-செடிகள்; யேன பூதை:- எந்த இயற்கையால்; திஷ்ட்டதே- சூழப்பட்ட; அந்தராத்மா ஹி- ஆன்மா.

9.அந்த இறைவனிடமிருந்தே கடல்கள், மலைகள்
எல்லாம் தோன்றின. பல்வேறு நதிகளும் அவரிட
மிருந்தே பெருகி ஓடுகின்றன. செடிகொடிகள் அனைத்தும்
அவரிடமிருந்தே உண்டாயின. இவ்வாறு அனைத்து
இயற்கையாலும் சூழப்பட்டதாக உள்ளது ஆன்மா.

செடிகொடிகள், மலைகள், நதிகள் போன்றவை பஞ்சபூதங்களால் ஆனவை. இவ்வாறு பஞ்ச பூதங்களால் ஆன இயற்கைக்கு ஆன்மாவாக இறைவன் விளங்குகிறார் என்பது பொருள்.

பஞ்ச பூதங்களால் இயற்கை அமைந்துள்ளதுபோல், மனித உடம்பும் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்த <உடம்பினுள் ஆன்மாவாக இறைவன் விளங்குகிறார் என்றும் பொருள் சொல்லலாம்.

புருஷ ஏவேதம் விச்வம் கர்ம தபோ ப்ரஹ்ம பராம்ருதம்
ஏதத்யோ வேத நிஹிதம் குஹாயாம்
ஸோஸவித்யா க்ரந்திம் விகிரதீஹ ஸோம்ய (10)

புருஷ: ஏவ- இறைவனே; இதம்- இந்த; விச்வம்- எல்லாம்; கர்ம- கர்மங்கள்; தப:- தவம்; பராம்ருதம்- அழிவற்ற மேலான; ப்ரஹ்ம- பிரம்மம்; குஹாயாம்- இதயக்குகையில்; நிஹிதம்- உறைகின்ற; ஏதத்- அவரை; ய:- யார்; வேத- அறிகிறானோ; ஸ:- அவன்; அவித்யா க்ரந்திம்- அறியாமைத் தளையிலிருந்து; இஹ- இப்போதே; விகிரதி- விடுபடுகிறான்; ஸோம்ய-இனியவனே.

10. இனியவனே! இறைவன்தான் என்ற அனைத்துமாக
இருக்கிறார். கர்மங்கள், தவம் என்று மட்டுமல்ல, அழி
வற்ற மேலான பிரம்மமாக இருப்பதும் அவரே. இதயக்
குகையில் <உறைகின்ற அவரை அறிபவன் அறியாமைத்
தளையிலிருந்து இப்போதே விடுபடுகிறான்.

இதயக்குகையில் இறைவன் உறைகிறார். அவரை அறிபவன் அதாவது அனுபூதியில் அவரை உணர்பவன் அறியாமைத் தளையிலிருந்து விடுபடுகிறான். மரணத்திற்குப் பிறகு அல்ல, வாழும்போதே அவன் முக்தனாகிறான் (1. இஹ ஜீவன்னேவ, ந ம்ருத: ஸன்)என்று சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீசங்கரர்.

இதி முண்ட கோபநிஷதி த்விதீய முண்டகே ப்ரதம: கண்ட:

2:2 உன்னை அறி!

நாம் தெய்வீகமானவர்கள் என்ற ஆழ்ந்த சிந்தனையால் அடித்தளம் அமைத்த பிறகு அடுத்த சாதனைப் பகுதிக்கு வருகிறோம்.

நாம் தெய்வீகமானவர்கள் என்று மீண்டும்மீண்டும் சொல்வதாலோ, சிந்திப்பதாலோ எல்லாம் ஆகிவிடாது. இவையெல்லாம் புலன்களுக்கு உட்பட்ட அனுபவங்கள் மட்டுமே. தீவிரமாக சாதனைகள் செய்து அதை அனுபூதியில், புலன்களைக் கடந்த உண்மைநிலையில் உணர வேண்டும்.

நாம் தெய்வீகமானவர்கள் என்பதன் பொருள் என்ன?

உடம்பு, மனம், பிராணன், ஆன்மா என்று பலவற்றின் தொகுதி நாம். இவற்றில் உடம்பும் மனமும் பிராணனும் மாறுபவை, அழியக் கூடியவை. இவை உலகிலிருந்து வந்தவை. ஆனால் ஆன்மா இறைவனிலிருந்து வந்தது, இறைவனின் அம்சம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதனால் இறைவனே மனிதனின் இதயக்குகையில் ஆன்மாவாக ஒளிர்கிறார். உடம்பையும் மனத்தையும் நாம் என்று கருதி வாழ்கின்ற நாம், அவை இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஆன்மாவே நாம் என்பதை அறிய வேண்டும்; அனுபூதியில் உணர வேண்டும்.

தன்னை அறிதல் அல்லது ஆன்மாவை அறிதல் என்றால் என்ன, அதன் தன்மை என்ன, அதற்கான சாதனைகள் எவை, அதன் விளைவு என்ன, இறையனுபூதி ஆகியவற்றை இந்த அத்தியாயம் ஆராய்கிறது.

ஆன்மாவை அறி: 1-2:

ஆவி: ஸன்னிஹிதம் குஹாசரம் நாம
மஹத்பதம் அத்ரைதத் ஸமர்ப்பிதம்
ஏஜத் ப்ராணன் நிமிஷச்ச யதேதத் ஜானத ஸதஸத் வரேண்யம்.
பரம் விஜ்ஞானாத் யத்வரிஷ்ட்டம் ப்ரஜானாம் (1)

ஆவி:- ஒளிமயமாக; ஸன்னிஹிதம்- மிக அருகில்; குஹாசரம் நாம- இதயக்குகையில் உறைவதாக; மஹத் பதம்- மேலான லட்சியம்; அத்ர-அதில்; ஏதத்- இவை; ஸமர்ப்பிதம்- நிலைபெற்றுள்ளன; ஏஜத்- செயல்படுகின்ற; பிராணத்- மூச்சுவிடுகின்ற; நிமிஷத்- இமைக்கின்ற; யத்- அனைத்தும்; ஏதத்- அதனை; ஜானத- அறிய வேண்டும்; ஸத்- தூலமான; அஸத்- நுண்ணிய; வரேண்யம்- போற்றத்தக்க; ப்ரஜானாம் - உயிரினங்களின்; விஜ்ஜானாத்- அறிவைவிட; பரம்- அப்பாற்பட்டது; வரிஷ்ட்டம்- உயர்ந்தது.

1. அந்த ஆன்மா ஒளிமயமானது, வேறெதை
விடவும் மிக அருகில் இருப்பது, இதயக்குகையில்
உறைவது. வாழ்க்கையின் மேலான லட்சியம் அந்த
ஆன்மாவே. செயல்படுகின்ற, மூச்சுவிடுகின்ற,
இமைக்கின்ற அனைத்து உயிரினங்களும் அதனையே
சார்ந்துள்ளன. தூலமானதும் நுண்ணியதும் அதுவே.
உயிரினங்களின் அறிவிற்கு அப்பாற்பட்டது. அது.
போற்றத்தக்க அந்த ஆன்மாவையே அறிய வேண்டும்.

ஆன்மா அறிவிற்கு அப்பாற்பட்டது, ஆனால் ஆன்மாவையே அறிய வேண்டும்- இந்த இரண்டும் முரணாகத் தோன்றுகின்றன. அறிய வேண்டும், ஆனால் அறிய முடியாது. இதன் பொருள் என்ன? அறிய முடியாது என்றால் உலகிலுள்ள பொருட்களை அறிவதுபோல் அறிய முடியாது, புலன்களால் அறிய முடியாது என்பது பொருள். புலன்கள் வெறும் கருவிகள். அவற்றின் எல்லை சிறியது. உள்ளதை உள்ளபடி காட்டவல்லவை அல்ல நமது புலன்கள். இதனை பௌதீக பரிமாணம், திவ்ய பரிமாணம் என்று இரண்டு பரிமாணங்களிலும் புரிந்துகொள்வோம்.

1. பௌதீக பரிமாணம்: ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நம் கண்களால் காண இயலாது, ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் நம் காதுகளால் கேட்க இயலாது. இது போலவே ஒவ்வொரு புலன்களும். அது மட்டுமல்ல, குறிப்பிட்ட அதிர்வு எல்லைகளுக்கு வெளியிலுள்ள ஒளியையோ ஒலியையோ அவை நம் அருகில் இருந்தாலும் காணவோ கேட்கவோ முடியாது. எனவே புலன்களின் செயல்பாடு வட்டம் மிகவும் குறுகியது.

2. திவ்ய பரிமாணம்: பார்ப்பவற்றையும் கேட்பவற்றையும் உணர்பவற்றையும்கூட, அவை, உள்ளது உள்ளபடி புலன்களால் அறிய இயலாது. ஒரு சாதாரணப் பூவை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஓர் எல்லைக்கு உட்பட்டது தான். ஆனால் இந்தப் பூவைப்பற்றி எல்லாம் எனக்குத் தெரியும் என்று துணிந்து யாராவது சொல்ல முடியுமா? அந்தப் பூவைப்பற்றிய எல்லாம் தெரியும் என்ற அறுதிநிலையை அடைவது சாத்தியமே இல்லை. ஆராய்ச்சியின் ஆரம்பத்தில் எல்லை உள்ளதாகத் தோன்றிய பூ இப்போது எல்லையற்றதாகிவிட்டது.... நமது எல்லை மிகவும் குறுகியது என்கிறார் சுவாமி விவேகானந்தர். அதாவது எல்லையற்றவற்றை எல்லை உள்ளவையாக நாம் கண்டு கொண்டிருக்கிறோம். எந்தப் பொருளையும் அதன் உண்மைநிலையில் நாம் காண முடிவதில்லை. எனவே உண்மையை அறிய வேண்டுமானால் இந்தப் புலன்களும் மனமும் போதாது. அவற்றைவிட மேலான ஒன்று வேண்டும்.

அந்த மேலான ஒன்றை தெய்வீகக் கண் என்று கீதை குறிப்பிடுகிறது. தெய்வீகக் கண் என்றல் மூன்றாவது ஒரு கண் என்பதல்ல. இங்கே குறிப்பிடப்படுவது நமது உணர்வு நிலையில் ஒரு மாற்றம், புத்தியின் விழிப்பு. கண்களோ காதுகளோ இல்லாமல் காணவோ கேட்கவோ முடியுமா? முடியும். இதற்கு கனவு நிலை ஓர் உதாரணம். கனவில் நமது புலன்கள் எதுவும் செயல்படவில்லை. ஆனாலும் அங்கே நாம் காண்கிறோம், கேட்கிறோம், உணர்கிறோம். நனவு நிலையில் புலன்கள் வாயிலாக நிகழ்பவை அனைத்தும் கனவு நிலையில் புலன்கள் நிகழ்கின்றன.

இது ஓர் உதாரணம் மட்டுமே. இவ்வாறு புலன்களின் துணையின்றி, மனத்தின் துணையின்றி ஆன்மா அறியப்படுகிறது. அத்தகைய நிலையை அடைய வேண்டும்.

யதர்ச்சிமத் யதணுப்யோ: ஸணு ச
யஸ்மின் லோகா நிஹிதா லோகினச்ச
ததேததக்ஷரம் ப்ரஹ்ம ஸ ப்ராணஸ்தது வாங்மன:
ததேதத் ஸத்யம் ததம்ருதம் தத்வேத்தவ்யம்
    ஸோம்ய வித்தி (2)

யத்- எது; அர்ச்சிமத்- ஒளிமயமானதோ; யத்- எது; அணுப்ய:- அணுக்களுக்கெல்லாம்; அணு ச- அணுவோ; யஸ்மின்- எதில்; லோகா:- உலகங்கள்; லோகின: ச- உயிரினங்கள்; நிஹிதா:- வசிக்கின்றனவோ; தத் ஏதத்- அந்த இது; அக்ஷரம்- அழிவற்றது; ப்ரஹ்ம- இறைவன்; ஸ:- அது; ப்ராண:- பிராணன்; தத் உ- அதுவே; வாக் மன:- வாக்கும் மனமும்; ஸத்யம்- உண்மை; அம்ருதம்- மரணமற்றது; தத்- அதனை; வேத்தவ்யம்- அறிய வேண்டும்; வித்தி- அறி; ஸோம்ய- இனியவனே.

2. இனியவனே! அந்த ஆன்மா ஒளிமயமானது,
அணுக்களுக்கெல்லாம் அணுவானது. உலகங்களும்
உயிரினங்களும் அதிலேயே நிலைபெற்றுள்ளளன.
அந்த ஆன்மா அழிவற்றது. அதுவே இறைவன்.
பிராணன், வாக்கு, மனம் அனைத்தும் அதுவே. அது
உண்மையானது, மரணமற்றது. அதனையே அறிய
வேண்டும். அதனை அறிவாய்.

இறைவனை அறி: 3-4

ஆன்மாவை அனுபூதியில் உணர்ந்த பிறகு இறைவனை அறிவதற்கு முயற்சிக்க வேண்டும். அம்பு எய்கின்ற <உதராணத்தின்மூலம் அதனை இந்த மந்திரங்கள் விளக்குகின்றன.

தனுர்க்ருஹீத்வௌபநிஷதம் மஹாஸ்த்ரம்
சரம் ஹி உபாஸானிசிதம் ஸந்தயீத
ஆயம்ய தத்பாவகதேன சேதஸா
லக்ஷ்யம் ததேவாக்ஷரம் ஸோம்ய வித்தி (3)

ஔபநிஷதம் - உபநிஷதங்கள் கூறுகின்ற; தனு - வில்; மஹா அஸ்த்ரம் - பெரிய ஆயுதமாகிய; க்ருஹீத்வா - எடுத்து; உபாஸானிசிதம் - தியானத்தால் கூர்மையாக்கப்பட்ட; சரம் ஹி - அம்பை; ஸந்தயீத - தொடுக்க வேண்டும்; தத் பாவகதேன - அந்த எண்ணங்களால் நிறைந்த; சேதஸா - மனத்தால்; ஆயம்ய - இழுத்து; லக்ஷ்யம் - இலக்கை; தத் ஏவ - அதுவே ; அக்ஷரம் - இறைவன்; வித்தி - அறி; ஸோம்ய - இறைவனே.

3. இனியவனே! உபநிஷதங்கள் கூறுகின்ற பெரிய
ஆயுதமாகிய வில்லை எடுத்து, தியானத்தால்
கூர்மையாக்கப்பட்ட அம்பை அதில் வைத்து, இறை
எண்ணங்களால் நிறைந்த மனமாகிய நாணை
இழுத்து இலக்கை அடிக்க வேண்டும். அந்த இலக்கே
இறைவன், அவரை அறி.

ப்ரணவோ தனு; சரோ ஹ்யாத்மா ப்ரஹ்ம தல்லக்ஷ்யமுச்யதே/
அப்ரமத்தேன வேத்தவ்யம் சரவத் தன்மயோ பவேத் //4//

ப்ரணவ - ஓங்கார மந்திரம்; தனு; - வில்; ஆத்மா ஹி - ஆன்மாவே; சர; - அம்பு; ப்ரஹ்ம - இறைவனே; தத் - அந்த; லக்ஷ்யம் - இலக்கு; உச்யதே - சொல்லப்படுகிறது; அப்ரமத்தேன - அலைபாயாத மனத்தினனால்; வேத்தவ்யம் - தொடுக்கப்பட வேண்டும்; சரவத் - அம்மைப்போல்; தத் மய; - அந்த இலக்குமயமாக; பவேத் - ஆகவேண்டும்.

4. ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு,
இறைவனே இலக்கு என்று சொல்லப்படுகிறது.
அம்பை எய்பவன் அலைபாயாத மனத்தினனாக
இருக்க வேண்டும்; அம்மைபப்போல் அந்த இலக்கு
மயமாக ஆக வேண்டும்.

இறைவன் அடைவது என்பதை வில்லில் நாண் ஏற்றி இலக்கை வீழ்த்துவதற்கு ஒப்பிட்டு 3-4 மந்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

வில்    : ஓங்கார மந்திரம்
நாண்    : மனம்
அம்பு    : ஆன்மா
இலக்கு    : இறைவன்

அம்பு எய்வதுபற்றி பார்ப்போம். முதலில் நாணை வில்லில் இழுத்துக் கட்ட வேண்டும். பிறகு அம்பை நாணில் வைத்துக் குறிபார்க்க வேண்டும். இலக்கும் அம்பும் ஒரே நேர்கோட்டில் வந்தபிறகு அம்பைப் பின்னால் இழுத்து எய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு படியும் முக்கியமானவை. நாண் வில்லில் சரியாக இழுத்துக் கட்டப்பட்டிருக்க வேண்டும். அம்பு கூரியதாக இருக்க வேண்டும். அம்பு இலக்குடன் நேர்கோட்டில் அமையுமாறு பொருத்தப் படவேண்டும். இத்தனை நிபந்தனைகளும் சரியாக இருக்கும்போது அம்பை எய்தால் இலக்கு தாக்கப்படுவது நிச்சயம்.

1. நாண் வில்லில் சரியாக இழுத்துக் கட்டப்பட்டிருக்க வேண்டும். இங்கே நாண் என்பது மனம். வில் என்பது ஓங்காரம். மனம் ஓங்காரத்துடன் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது மனம் ஓங்கார ஜபத்தில் மூழ்கியதாக பயிற்சி பெற்றதாக இருக்க வேண்டும்.

மனத்திற்குப் பயிற்சி அளிப்பது பற்றி இரண்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன -1 இறை எண்ணங்களால் நிறைந்த மனம் (3); 2. அலைபாயாத மனம் (4). மனம் அலைபாயாததாக இருக்க வேண்டும். மனம் எப்போது அலைபாயும்? ஆசைகள் எழும்போது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே மனம் புறத்தில் செல்கிறது. எனவே ஆசைகளை விட்ட மனம் இங்கே குறிப்பிடப்படுகிறது. ஆசைகளை எப்படி விடுவது? அதற்கு மனத்தை எப்போதும் இறை எண்ணங்களால் நிறைக்க வேண்டும்.

2. அம்பு கூரியாத இருக்க வேண்டும். இங்கே அம்பு என்பது ஆன்மா, நாம் ஆன்ம உணர்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதாவது, சாதனைகளின் மூலம் ஆன்ம உணர்வில் எப்போதும் நிலைபெற்றிருக்க வேண்டும். இந்த நிலையே இங்கு கூரியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3. அம்பு இலக்குடன் நேர்கோட்டில் அமையுமாறு பொருத்தப்பட வேண்டும். தெய்வமாகி தெய்வத்தைப் பூஜை செய் (1. தேவோ பூத்வா தேவம் யஜேத்) என்பார்கள்.

உடம்புடனும் மனத்துடனும் நம்மை ஒன்றுபடுத்துகின்ற சாதாரண மனித நிலையில் நாம் கடவுளை ஒரு மனிதனாக மட்டுமே நினைக்க முடியும். அவரை உள்ளது உள்ளபடி அறிய வேண்டுமானால் நாமும் தெய்வ நிலைக்கு உயர வேண்டும். அதாவது ஆன்ம உணர்வு பெற்றிருக்க வேண்டும். சாஸ்திரங்களைப் படித்து அறிவுபூர்வமாக உணர்வது அல்ல; அனுபூதியில் உணர்வதே இங்கு குறிப்பிடப்படுகிறது. இதனை 4-ஆம் மந்திரம் இலக்குமயமாக ஆவது என்று கூறுகிறது. நாம் தெய்வ நிலையைப் பெற வேண்டும். எங்கும் நிறைந்த இறைவனே நம்மில் ஆன்மாவாக உள்ளார். எனவே நாம் ஆன்மா என்ற நிலையை அனுபூதியில் அடைய வேண்டும். இதுவே அம்பு இலக்குடன் நேர்க்கோட்டில் அமையுமாறு பொருத்தப்படுதல்.

இவ்வாறு தியானத்தால் மனத்தை ஒருமைப்படுத்தி, இறை எண்ணங்களால் ஆன்ம நிலையை உணர்ந்து இறைவனை நாடினால் அவரைப் பெறலாம். அம்பு எய்யும் உதாரணத்தால் இந்த இரண்டு மந்திரங்கள் இதனைச் சுட்டிக் காட்டுகின்றன.

ஆன்ம அனுபூதி (5-7)

ஆன்ம அனுபூதி, அதாவது ஆன்மாவை அறிதல்; இறையனுபூதி, அதாவது இறைவனை அறிதல் ஆகியவற்றின் முன்னுரையை 1-4 மந்திரங்களில் கண்டோம். 5-7 மந்திரங்கள் ஆன்ம அனுபூதி மற்றும் அதற்கான வழிபற்றி கூறுகிறது.

முதற்படி பேச்சுக் கட்டுப்பாடு:

யஸ்மின் த்யௌ; ப்ருதிவீ சாந்தரிக்ஷமோதம்
மன: ஸஹ ப்ராணைச்ச ஸர்வை:
தமேவைகம் ஜானத ஆத்மானம் அன்யா
வாசோ விமுஞ்சத அம்ருதஸ்யைஷ ஸேது: //5//

யஸ்மின் - யாரில்; த்யௌ: - வானுலகம்; ப்ருதிவீ - பூமி; அந்தரிக்ஷம் ச- இடைவெளி; மன: ஸஹ - மனமும்; ப்ராணை; ச - பிராணன்களும்; ஸர்வை: - எல்லாம்; ஓதம் - நிலைபெற்றுள்ளனவோ; தம் - அந்த; ஏகம் - ஒரே; ஆத்மானம் - ஆன்மாவை; ஜானத - அறியுங்கள்; அன்யா: - மற்ற; வாச: - பேச்சுக்களை: விமுஞ்சத - விடுங்கள்: ஏஷ: - இது: அம்ருதஸ்ய - மரணமிலா பெருநிலைக்கான: ஸேது: - பாலம்.

5. வானுலகம், பூமி, இடைவெளி மற்றும்
மனம், பிராணன்கள், புலன்கள் என்று அனைத்தும்
யாரில் நிலைபெற்றுள்ளனவோ அந்த ஒரே
ஆன்மாவை அறியுங்கள்: மற்ற பேச்சுக்களை
விடுங்கள், மரணமிலா பெருநிலைக்கான பாலம்
இதுவே.

அழகிய காட்சிகள் எத்தனையோ இருக்கலாம். நமது கண்களும் நல்ல நிலையில் இருக்கலாம். ஆனால் ஒளி இல்லாமல் எதையும் காண முடியாது. எனவே புறத்திலுள்ள அழகிய காட்சிகளுக்கும் நம்மில் உள்ள கண்களுக்கும் ஆதாரமாக இருப்பது ஒளி. அதுபோல் வானுலகம் போன்ற புற விஷயங்கள், பிராணன் போன்ற அக விஷயங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஆன்மா, எனவே அதை அறிய வேண்டும்.

ஆன்மாவை அறிவதற்கான முதற்படியை இந்த மந்திரம் கூறுகிறது - மற்ற பேச்சுக்களை விடுங்கள். தேவையற்ற பேச்சு உயர் வாழ்க்கைக்கு என்றல்ல, சாதாரண வாழ்க்கைக்கும் பெரிய தடையாகும். நமது ஆற்றிலில் கணிசமான பகுதி பேச்சில் செலவழிகிறது. அதனைச் செலவிடாமல் சேமித்தால் அக வாழ்க்கை போன்ற உயர் தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்த முடியும். பேச்சுக் கட்டுப்பாடே ஆன்மீக வாழ்வுக்கு முதற்படி
(1. யோகஸ்ய ப்ரதம த்வாரம் வாக் நிரோத: - விவேக சூடாமணி , 367.) என்கிறார். ஸ்ரீசங்கரர்.

மரணமிலாப் பெருநிலையாக இருப்பவர் இறைவன். அவரிடம் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கின்ற பாலமாக அமைவது ஆன்மா, எனவே ஆன்மாவை அனுபூதியில் உணர வேண்டும். அதற்கு முதற்படியாக அமைவது பேச்சுக் கட்டுப்பாடு.

இரண்டாம் படி: பிரணவ தியானம்

அரா இவ ரதநாபௌ ஸம்ஹதா யத்ர நாட்ய:
ஸ ஏஷோஸந்தச்சரதே பஹுதா ஜாயமான:
ஓமித்யேவம் த்யாயத ஆத்மானம்
ஸ்வஸ்தி வ: பாராய தமஸ: பரஸ்தாத் //6//

ரதநாபௌ - ரதத்தின் அச்சில் ; அரா: இவ - ஆரக்கால்கள்போல்; யத்ர - எங்கே; நாட்ய; - நாடிகள்:

ஸம்ஹதா - கூடியுள்ளனவோ, ஏஷ - இந்த; ஸ: - ஆன்மா: பஹுதா - பலவிதமான: ஜாயமான: - வெளிப்படுத்தியபடி: அந்த: - உள்ளே: சரதே - செயல்படுகிறது: ஓம் இதி ஏவம் - ஓம் என்று: ஆத்மானம் - ஆன்மாவை; த்யாயத - தியானம் செய்யுங்கள்; தமஸ: - இருளுக்கு; பரஸ்தாத் - அப்பால்; பாராய - மறுகரையில்; வ: - உங்களுக்கு: ஸ்வஸ்தி - ஆசிகள்.

 6. ரதத்தின் அச்சில் ஆரக்கால்கள் கூடுவதுபோல்
எங்கே நாடிகள் கூடுகின்றனவோ அங்கே ஆன்மா
உள்ளது. அந்த இதயத்தில் ஆன்மா பலவிதமாகச்
செயல்படுகிறது. ஓம் என்ற மந்திரத்தின்மூலம்
ஆன்மாவைத் தியானம் செய்யுங்கள். இருளைக்
கடந்து மறுகரைக்குச் செல்ல விரும்புகின்ற
உங்களுக்கு ஆசிகள் நிறைவதாக.

ஓம்  என்ற பிரணவ மந்திரத்தை ஜபித்து ஆன்மாவை தியானம் செய்யுமாறு இந்த மந்திரம் கூறுகிறது.

 
மேலும் முண்டக உபநிஷதம்! »
temple news
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது, பாரதத் திருநாடு ... மேலும்
 
temple news
மணியோசை, போலவும், எண்ணெய் ஒழுக்குபோல் இடைவிடாமலும் ஓங்காரத்தை உச்சரிக்க வேண்டும். (1. தைல தாராம் ... மேலும்
 
temple news
3:2 இறையனுபூதிசாதாரண அறிவு உலக இன்பதுன்பங்களில் ஆழ்த்தி மீண்டும் மீண்டும் பிறவிக்கே வழிவகுக்கும். உயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar