கரூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள ராம் நகர் பகுதியில் ஸ்ரீபக்த அபய கோதாண்டராமர் கோயில் உள்ளது. இங்கு தனிச் சன்னிதியில் ஸ்ரீகாயத்ரி தேவி அருள்புரிகிறாள். கல்வியில் சிறந்து விளங்கவும், தவறாது மழை பொழியவும், நினைத்த காரியம் நடைபெறவும் பக்தர்கள் இத்தேவியை வழிபடுகிறார்கள். விவசாயப் பெருமக்கள் மழை வேண்டி சித்திரை மாதத்தில் சிறப்பு யாகம் செய்து பலன் பெறுகிறார்கள். யாகம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் மழை பொழியும் என்பது நம்பிக்கை.