உங்கள் படிப்பு, தொழில், பணி காரணமாக பெருமளவில் பணம் சேர்த்து சுகபோகவாழ்வு நடத்துவதாக பெருமைப் படுகிறீர்களா... அப்படியானால் உங்களிடம் ஒரு கேள்வி... உங்களிடமுள்ள பணத்தால், இந்த சமுதாயத்திற்கு பலன் ஏதும் கிடைத்திருக்கிறதா...! இதோ...ஒரு சம்பவம். ஜோனாஸ்சால்க் என்ற விஞ்ஞானிக்கு, அமெரிக்க அரசு பல விருதுகளை வழங்கியது. புளு காய்ச்சல் பரவிய காலத்தில், அதற்கு மருந்து கண்டுபிடித்து பல பரிசுகளைப் பெற்றார். அவரது வீட்டில் எல்லாரும் பெருமைப்பட்டனர். ஆனால், ஜோனாசின் உள்ளத்தில் ஒரு வெறுமை... இந்த உலகத்தில் எத்தனையோ பேர் ஊனத்துடன் நடக்க முடியாமல், கை கால்களை அசைக்க முடியாமல் இருக்கிறார்கள். போலியோ என்ற அந்தக் கொடிய நோயை ஒழிக்க நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்... என்ன செய்வது என ஆலோசித்தார். தன் குழுவினருடன் இணைந்து வெற்றிகரமாக போலியோவுக்கு மருந்து கண்டுபிடித்தார். மனம் திருப்தியடைந்தது. இன்று உலகமே அவரைவாழ்த்துகிறது.சொந்த சாதனைகளுக்காக விருது பெறுவதை விட, பல்லாயிரம் கோடி பேருக்கு உதவுவதற்கு நமது கல்வியும், அறிவும் பயன்பட வேண்டும். இன்று உலகெங்கும்இலவசமாக போலியோ மருந்து கிடைக்கிறது. பல குழந்தைகள் போலியோ மருந்தால், இன்று நிமிர்ந்து நடக்கிறார்கள்.பைபிளில் ஒரு வசனம் உண்டு. நீதிமானோ பிசினித்தனம் (கஞ்சத்தனம்) இல்லாமல் கொடுப்பான், என்று. ஆம்... நீங்கள் உலகத்துக்கு நல்லதை கொடுங்கள். கஞ்சத்தனமின்றி கொடுங்கள். இந்த உலகம் உள்ளளவும் உங்களை நினைவில் கொள்ளும்.