திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அடுத்த டி.தேவனூர் வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பில், 67 வது ஆண்டு பூசவிழா நடந்தது.திருக்கோவிலூர் அடுத்த டி.தேவனூரில் வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பில், 67 வது ஆண்டு பூசவிழா நேற்று நடந்தது. அதிகாலை 5:30 மணிக்கு அருட்பா அகவல் பாராயணம் நடந்தது. காலை 7:30 மணிக்கு சன்மார்க்க கொடியேற்று விழா நடந்தது.செத்தவரை மோன சித்தர் சுவாமிகள் சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்தார். அடிகளார் சுப்ரமணிய சுவாமிகள் சிறப்புரையாற்றி, விழாவை துவக்கி வைத்தார். முற்பகல் 11:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வள்ளலார் திருவுருவப்படம் அமைக்கப்பட்டு வீதியுலா நடந்தது.
ஏராளமான வள்ளலார் பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களை பாடி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். மதியம் 12:00 மணிக்கு பரனூர் அம்பலவாணன், ஓய்வுபெற்ற துணை பதிவாளர் லோகநாதன், சீனுவாசன் ஆகியோர் சன்மார்க்க நெறிகள் குறித்து சொற்பொழிவாற்றினர்.விழாவிற்கான ஏற்பாடுகளை டி.தேவனூர் சன்மார்க்க சங்க நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.