பதிவு செய்த நாள்
22
ஜூன்
2015
10:06
ஸ்ரீராமர் வாலியை மறைந்து நின்று கொன்றது ஏற்புடையதா? என்றால் கட்டாயம் ஏற்புடையது தான். எல்லா வாதங்களையும் தவிர்த்து. முற்றிலும் புதிய உண்மைக் கோணத்தில் பார்க்கலாம். வேத, புராண, இதிகாச காலத்தில் இப்பொழுது இருப்பதுபோல், ஆயிரக்கணக்கான ஜாதிகள் கிடையாது: அக்காலத்தில் வர்ணாஸ்ரம முறைதான் இருந்தது. மிகப்பெரும்பாலான மக்கள் வர்ணாஸ்ரமம் முறைப்படி சத்தியத்துடனும். உண்மையுணர்வுடன் தங்கள் தொழில்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை அமைத்து வாழ்ந்து வந்தார்கள். அதாவது வர்ணாஸ்ரம முறைப்படி அரசன் முதல் ஆண்டி வரை வாழ்க்கை நடத்தி வாழ்ந்து வந்தார்கள். இது அவரவர்களது குணமும் ஆகும்.
சாஸ்திரப்படி வர்ணாஸ்ரமம் என்பது நான்கு வகையாக பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன.
1. பிராமணர்கள். 2. க்ஷத்திரியர்கள் அல்லது சத்திரியர்கள். 3. வைசியர்கள். 4. சூத்திரர்கள் என்பன. அவர்கள் தொழில்கள் சிலவற்றை உதாரணத்திற்குப் பார்ப்போம். அதாவது அவரவர்கள் இயல்புக்கேற்பவும் குணத்திற்கு ஏற்பவும் சரியா? இதுவே அக்கால சட்டதிட்டம், தர்ம சாஸ்திரம் மற்றும் கொள்கைகளும், தர்மமும் ஆகும்.
பிராமணர்கள், யாகம் வேள்வி, ஹோமம் போன்றவைகளைச் செய்வதும், ராஜரிஷியாகவும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்கள். அறிவில் முதன்மையானவர்களாக விளங்கினார்கள். எந்த ஒரு பிரச்சினைகளையும் உண்மையுணர்வுடன் அணுகி, ஆராய்ந்து, ஆலோசனைகளை வழங்கி, ஒழுக்கத்துடன் மேலும் பிரம்மத்தை அறிந்தவர்களாக இருந்தவர்கள் பிராமணர் எனப்படுவார்கள். மேலும், வேத விஞ்ஞான, மெய் ஞானங்களையும் கற்றுணர்ந்தவர்கள்.
இரண்டாம் வகை சத்திரியர்கள் எனப்படுபவர்கள். இவர்கள் போர் புரிவதில் வல்லவர்கள். நாட்டையும், நாட்டு மக்களையும் அண்டை நாட்டினிடமிருந்தும். காட்டு மிருகங்களிடமிருந்தும், மக்களைக்காப்பது இவர்கள், தொழில், குறிப்பாக போர் புரிவதும் வேட்டையாடுவதும் இவர்களது தொழில்களாக விளங்கின. இது இவர்களது தர்மமுமாகவும் இருந்து வந்தது. இது அவர்களுடைய செயல்படும் இயல்பு குணம். வாழ்க்கை நெறிமுறையுமாகும்.
மூன்றாம் வகை வைசியர்கள், நேர்மையாக, குறைந்த லாபத்துடன், யாருக்கும் பாதிப்பில்லாமல், நஷ்டமடையாமல் வியாபாரம் செய்பவர்கள். இவர்கள் அரிசி, தானியம் ஏனைய மற்றைய மக்கட்கு உபயோகமான பொருட்களை சந்தையில் விற்று சத்தியமான வாழ்க்கை முறையுடன் வாழ்ந்தவர்கள். தான தர்மங்களையும் செய்தவர்கள். இவர்கள் மூன்றாம் வகை.
நான்காவது வகை சூத்திரர்கள். இவர்களது தர்மமும், தொழிலும், விவசாயம் செய்வதும், பயிர்த்தொழில் செய்வதும், பிராமணர்களுக்குச் சிறு, சிறு வேலைகளைச் செய்வதும் அதுவே அவர்களது தர்ம, வாழ்க்கை நெறி முறையாகவும் இருந்து வந்தது. இப்படி எழுதப்படாத சட்டத்திட்டத்துடன் எல்லா வகை மக்களும் தாங்கள் தங்கள் வர்ணாஸ்ரம தர்ம முறைப்படி அமைதியாக, சவுக்கியமாக மிக அமைதியாகவும். நிம்மதியாகவுமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கட்டுக் கோப்புடனும். கட்டுப்பாட்டுடனும் இருந்தனர்.
இப்பொழுது வாலி வதத்திற்கு வருவோம். வாலி என்பது அதர்மம் செய்த ஒரு மிருகம். தர்மத்தை நிலை நாட்டவும். அதர்மத்தை ஒழிக்கவும். ராமர் மனிதராக அவதாரம் எடுத்திருந்தார். அதுவும் ராமர் ஒரு க்ஷத்திரியர். க்ஷத்திரிய வம்சம். ராமர் வர்ணாஸ்ரம முறைப்படி ஷத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர். அதர்மம் செய்த வாலியை மறைந்து நின்று வேட்டையாடிக் கொன்றது சரிதான். மனுநீதிப்படி, மற்றும் வாலிக்கு மோட்சத்தை அவனது முன் செய்த கர்மவினை பலனாலும். பலத்தாலும் அளித்தார். ராமர் மற்றும் ராமரை சுக்ரீவன் சரணாகதி அடைந்ததாலும் வாலிவதம் ஏற்புடையதே. இதை நாம் நோக்க வேண்டியது சாஸ்திரப்படி. அக்கால சட்டதிட்டப்படி மற்றும் வர்ணாஸ்ரம தர்ம முறைப்படி. மேலும் சிவபெருமானிடம் வாலிதான் யாரை எதிர்த்தாலும். போரிட்டாலும். எதிராளியின் பலம் தன்னிடம் நேருக்கு நேர் போரிடுவதால் அச்சமயத்தில் வந்து சேரும் என்று வரம் வாங்கியிருந்தார். அதனால் ராமர் சிவபெருமானின் வரத்திற்கு மதிப்பளித்து மறைந்து நின்று வாலியுடன் போரிட நேர்ந்தது. சிவபெருமானும் கிருஷ்ணனுமாகிய ராமரும் ஒருவர் பெருமையை ஒருவர் மதித்து வேறுபாடின்றி உலக தர்மத்திற்காக அவதாரம் எடுத்து புராணங்கள் வாயிலாக காண்பித்துள்ளனர்.
ஆனால் இக்கால அதாவது கலியுகச் சட்டப்படி அதனைப் பார்க்க இயலாது என்பதை ஒவ்வொருவரும் நன்றாக ராமரையும். இராமாயணத்தையும் புரிந்துக் கொள்ளவேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அதனால் வாலிவதம் முறைப்படி ஏற்புடையதே! மற்றும் மகாபாரதம் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் எக்காலத்திற்கும் ஏற்றமுடையதே! ஏற்புடையதே! உபயோகமுள்ளதே!