பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நடராஜருக்கு அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2015 11:06
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆனித்திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆனிஉத்திர தரிசனத்தை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயில் நடராஜர் சன்னதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நடராஜருக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம், பழங்கள் உள்ளிட்ட 16வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின் வெளிப்பிரகாரத்தை நடராஜர் திருவுலா வந்தார். சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டு நடராஜர், சிவகாமிஅம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதைப்போலவே பெரியநாயகியம்மன் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் நிரப்பப்பட்ட கும்பங்கள் வைத்து சிறப்பு யாகபூஜை நடந்தது. அதன்பின் பெரியநாயகியம்மன், முத்துகுமாரசுவாமி, வள்ளி,தெய்வானை, கைலாசநாதர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இருநிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.