ராவணனின் தம்பியான குபேரன் தன் தவபலத்தால், சிவனுக்குத் தோழனாகவும், வடதிசைக் காவலனாகவும் ஆகும் தகுதி பெற்றான். அளகேசன் என்றும் இவனுக்கு பெயருண்டு. மயிர்க்கூச்சம் ஏற்படச் செய்பவன் என்பது இதன் பொருள். தற்போதைய நடைமுறையில் அழகேசன் என எழுதுகிறோம். இவனது வீட்டில் இருக்கும் செல்வத்தைப் பார்த்தால், உடம்பிலுள்ள ரோமம் எல்லாம் சிலிர்த்துக் கொள்ளும் என்பதால் இப்பெயர் உண்டானது. குபேரனின் வாகனமான புஷ்பக விமானம், செல்லும் இடமெல்லாம் பொன்னும் மணியும் கொட்டும் தன்மை கொண்டது.