கடலூர்: கடலூர் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் விஜயவல்லி தாயார் சமேத சக்கரத்தாழ்வார் கோவிலில், உலக நன்மை வேண்டி மகா சுதர்சன ÷ ஹாமம் நடந்தது. இதனையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து, நித்தியபடி ஆராதனம், புண்யாஹவசனம், பகவத் அனுக்ஞை, விஷ்வக்ஷேன ஆராதனம், சங்கல்பம், கலச ஆவாஹணம், மகா சுதர்சன ஜபம், ஹோமம் நடந்தது. மூலவர் விஜயவல்லி தாயார் சமேத சக்கரத்தாழ்வார், உற்சவர் சக்கரபாணி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பூர்ணாகுதி சேவை சாற்றுமுறை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கண்ணன் பட்டாச்சாரியார், கிராம வாசிகள் செய்திருந்தனர்.