பதிவு செய்த நாள்
27
ஜூன்
2015
10:06
விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம் வாலாம்பிகை உடனுறை ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி காலை கொடியேற்றமும், மாலை 63 நாயன்மார்கள், நவக்கிரகம், விநாயகர், சரஸ்வதி, சிவலிங்க திருமேணி கரிகோல வீதியுலா நடந்தது. பின்னர், 25ம் தேதி காலை திருக்குறிப்பு திருமஞ்சனம், இரண்டாம் கால வேள்வி, விமான கலசம் வைத்தல், அஷ்டபந்தனம் சாத்துதல் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 6:00 மணிக்குமேல் திருச்சுற்று தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், 7:30 மணிக்குமேல் மூலவர் விமானம், கருவறை சுவாமி, அம்மன் ஆகியவைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.மயிலம் பொம்மபுரம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் கலந்து கொண்டு கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினார். ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, வழிபாடு செய்தனர்.