சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் அருள்மொழிநாதர், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் நடந்தது. ஜூன் 21ல் கொடியேற்றம்,காப்புக்கட்டுடன் இக்கோயில் ஆனித் திருவிழா துவங்கியது. தினமும், சுவாமி பல்வேறு வாகனங்களில் காலை, இரவு வீதி உலா வந்தார். தேரோட்டம்: 9ம் நாளான நேற்று மாலை 4:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பக்தர்கள் அனைவரும் தேரை இழுத்தனர். தேரோட்டம் மாலை 4:45 மணிக்கு துவங்கி 5:30 மணிக்கு நிலையை அடைந்தது. கிராம அம்பலம், தலைவர்கள் முன்னிலையில் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஏற்பாட்டை செய்தனர். பரம்பரை குருக்கள் ஆத்மநாதன் சிறப்பு அபிஷேகம் செய்தார். விழாவின் 10ம் நாளான இன்று காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.