விழுப்புரம்: விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷம் நடந்தது. பிரதோஷத்தை யொட்டி விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 4:00 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து 5:00 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை, 6:00 மணிக்கு நந்தி சுவாமி ஆலயத்திற்குள் வீதியுலா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆதிவாலீஸ்வரர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.